
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தமிழகத்தில் மார்க்சிய லெனினிய அரசியலை ஏந்தி பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டுகின்ற மகத்தான அரசியல் ஏடாக வெளி வருகிறது புதிய ஜனநாயகம்.
1985 முதல் எமது பயணத்தில் பல்வேறு அடக்குமுறைகளையும், அவதூறுகளையும் எதிர்த்து போராடி வருகின்றோம்.
இடது, வலது சந்தர்ப்பவாத போக்குகளுக்கு எதிராக மக்கள்திரள் வழி என்ற பாதையின் கீழ் புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் புதிய ஜனநாயகம் பத்திரிக்கையின் பங்கு மகத்தானது.
40 ஆண்டுகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எமது பத்திரிகை அரசியல் முன்னணியாளர்களை அமைப்பாக்கி படிப்படியாக சிறந்த கம்யூனிஸ்டுகளாக உருவாக்கியுள்ளது.
பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக கருவறை நுழைவுப் போராட்டம் முதல் கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக மதுரையில் நடக்கும் டங்ஸ்டன் சுரங்க போராட்டம் வரை அனைத்திலும் முன்னிலை வகித்து மக்களோடு மக்களாக செயல் வீரனாகவும், முன்னணியாளனாகவும் செயல்படும் பல்வேறு தோழர்களை உருவாக்கியது புதிய ஜனநாயகம்.
எதிர்வரும் மே மாதம் 40 ஆம் ஆண்டு துவங்குகிறது எனினும் 2025 ஜனவரி முதல் புதிய பொலிவுடன் வெளி வருகிறது புதிய ஜனநாயகம்.
புதிய ஜனநாயகம் இதழை ஆதரிப்பீர்! வாசகர்களாக சந்தா சேகரிப்பீர்! தமிழகம் முழுவதும் மூலை முடுக்குகள் அனைத்திற்கும் கொண்டு செல்வீர்.
புதிய ஜனநாயகம் இதழில் இருந்து வெளிவரும் புதிய ஜனநாயகம் தினசரி முகநூல் பக்கத்தை ஆதரிப்பீர்.
படியுங்கள்! பரப்புங்கள் !
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
(மா. லெ)