கடன் பெற்ற நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு முன்னணியை உருவாக்குவதும் அனைத்துவிதத்திலும் தடுக்கப்பட்டது.


லகவங்கி, சர்வதேசப் பண நிதியம், பாரிஸ் கிளப், லண்டன் கிளப் ஆகியவை வளர்ந்த நாடுகளுக்கு சாதகமானக் கொள்கைகளையேத் தக்கவைத்துக் கொண்டன. பணமதிப்புக் குறைப்பால் அதிகளவில் பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டியிருந்தது.

தார்மீக அடிப்படையில், கடன் வழங்குபவர்கள், பங்குதாரர்கள் அல்லது ஊக வணிகர்கள் உரிமைகள், பல கோடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முன் மதிப்புக்குரியது அல்ல. கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக செல்வசெழிப்புள்ள கடனளித்தவர்களுக்கு வட்டி செலுத்தவேண்டும் என்று கோருவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

சர்வதேச பண நிதியமும், உலக வங்கியும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு கடன் கொடுத்த போது அவற்றிற்குத் தெரியும் அந்த நாட்டின் ஏழை மக்களுக்கு அந்தப் பணம் உதவப் போவதில்லை நாட்டின் ஆட்சியாளர் மொபுடுவை வளப்படுத்தவே பயன்படுத்தப்படும் என்று.

தெற்கில் உள்ள நாடுகள் கடனை அடைப்பதை நிறுத்த வேண்டும். அந்தக் கடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சர்வாதிகாரத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், சட்டவிரோதமானது, அவை ஊழல் அரசுகள் தங்கள் சுய லாபத்திற்காக பெற்ற கடன்கள். ஏழைகள் மீது பணக்கார நாடுகளின் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு செலுத்துவதற்கான கருவியாக கடன் உள்ளது. பல நூற்றாண்டுகளின் சுரண்டலின் விளைவா,. வடநாடுகள் செல்வங்களைக் கொள்ளையடித்ததன் விளைவாகவே இது சாத்தியமாகியுள்ளது.

ஐந்து நூற்றாண்டுகளின் கொள்ளை, அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்தாலும், அதற்குப் பிறகு இருபத்தைந்து ஆண்டுகள் கட்டமைப்பு சரிசெய்தல் கொள்கைகளாலும் பாதிக்கப்பட்ட தென் நாட்டு மக்களுக்கு தாங்கள் அனுபவித்த அனைத்து துன்பங்களுக்கும் துயர்துடைப்புகோர உரிமை உண்டு. வடக்கின் கடன் வழங்குபவர்களால் அமைக்கப்பட்ட ஒரு கண்ணுக்கு தெரியாத பொறிமுறை தெற்கின் ஆளும் வர்க்கங்களின் ஆதரவுடன். செயல்படுகிறது.ஆகவே கடனை முழுவதுமாக ரத்துசெய்யவேண்டும்.

நமது சக்தி கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புற சூழ்நிலைகள் காரணமாக, Force majeure செயல்படுத்தி கடனை திரும்பப் பெறலாம். மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சி அல்லது வட்டி விகிதங்களில் திடீர் உயர்வு ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்ட கடன் பிரச்சினை மற்றும் கட்டமைப்பு சரிசெய்தல் பற்றி 1999 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கடனாளி நாடுகளின் மக்களின் உரிமைகள் உணவு, வீடு, உடை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றை கட்டமைப்பு சரிசெய்தல் கொள்கை (SAP), கடன்கள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கடன் சார்ந்த பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடிபணியச் செய்யக்கூடாது என்கிறது.

படிக்கபோர்ச் சூழலில் பொருளாதாரம்.

ஒரு அரசு அதன் பள்ளிகள், அதன் பல்கலைக்கழகங்களை மூடி நீதிமன்றங்கள், மற்றும் அதன் பொது சேவைகளை குழப்பமான நிலைக்கு கைவிட்டு சமூகத்தில் அராஜகத்தை தலைதூக்கவிட்டு வெறுமனே கடன் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என எதிர்பார்க்க முடியாது

—ஐ.நா ஆணையத்தின் சர்வதேச சட்டம், 1980, தொகுதி. 1 குறிப்பிடுகிறது.
.” 1983 வியன்னா ஒப்பந்தத்தின் 38வது பிரிவு புதிதாக சுதந்திரம் பெற்ற நாடு அதன் பழையக் கடன்களை செலுத்துவதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்கமுடியாது என்று குறிப்பிடுகிறது. கடன்களை ஒப்பந்தம் செய்த ஆட்சி எத்தகையது திரட்டப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை அறியவேண்டிய பொறுப்பு கடனளித்தவர்களுக்கு உள்ளது.

  • Samantha Ks

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here