
ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்க புரட்சியும் என்ற இந்த லெனினிய சகாப்தத்தில், ஹாங்காங் சீனாவின் நவீன காலனி நாடாக உள்ளது.
தோழர் மாவோ இறப்புக்கு பிறகு மெல்ல மெல்ல முதலாளித்துவ தாராளவாத பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்த துவங்கிய சீனா முதலாளித்துவ ஏகாதிபத்தியமாகவும், அதன் பிறகு நவீன சமூக ஏகாதிபத்தியமாகவும் சீரழிந்துள்ளது.
இதன் சீரழிவு தன்மைக்கு ஏற்பவே சீனாவின் காலனியாக ஹாங்காங் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தைவானை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு பல்வேறு சதித்தனங்களை செய்து வருகிறது.
“ஹாங்காங் சீனாவின் ஒரு மாநிலம்தானே? பிறகு ஏன் இது செய்தியாக வேண்டும்? சீனாவின் இன்னபிற மாநிலங்களைப் போன்றதல்ல ஹாங்காங். அது தன்னாட்சி அதிகாரங்களும் ஜனநாயக உரிமைகளும் கொண்டது. ஹாங்காங் சீனாவிற்கு உள்ளேதான் இருக்கிறது. ஆனால், சீனாவின் பிற பகுதிகளிலிருந்து ஹாங்காங்கிற்குச் செல்ல விசா வேண்டும். அதாவது, ஹாங்காங் சீனாவிற்கு வெளியில் இருக்கிறது.

ஹாங்காங் ஒரு நகரம். ஹாங்காங் ஒரு மாநிலம். ஹாங்காங் ஒரு நாடு. அபினி யுத்தத்தில் 1842ஆம் ஆண்டு ஹாங்காங்கைக் கைப்பற்றியது பிரிட்டன். அது முதல் 155 ஆண்டுக்காலம் அது பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. தன் தனித்துவத்தின் ஒரு சிறு பகுதியை அது பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றிருக்கலாம். 1997இல் சீனாவோடு இணைந்தது ஹாங்காங். “தன் தனித்துவத்தின் பிறிதொரு பகுதியை அது தாய் மண்ணிலிருந்து பெற்றிருக்கலாம். எனில், ஹாங்காங்கின் தனித்துவத்தின் பெரும் பகுதியை அதன் குடிமக்களே உருவாக்கினார்கள். ஹாங்காங்கின் வரலாறு அதைத்தான் சொல்கிறது” என்கிறார் இராமநாதன் என்ற பொறியியல் வல்லுநராக உள்ள சமூக செயல்பாட்டாளர்.
1997 ஆம் ஆண்டில் இருந்து சீனாவின் நவீன காலனியாக மாற்றப்பட்ட ஹாங்காங் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்பட்டு வருகிறது.
சீனா தனது காலனியாதிக்க நலனுக்கு ஏற்ப ஹாங்காங்கை கட்டுப்படுத்தி வருகிறது என்பதால் ஹாங்காங்கில் செயல்படுகின்ற சொல்லிக் கொள்ளப்படுகின்ற அரசியல் கட்சிகள் சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியவர்களுக்கு கடுமையான தடை விதிக்கப்படுகிறது.
ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுபவர்கள் இரண்டு வகையாக உள்ளனர் ஒன்று சீனாவின் நவீன காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராடுகின்ற ஜனநாயக சக்திகள் ஒரு வகையாகவும் அமெரிக்காவின் கைக்கூலி கணத்திலிருந்து சீனாவிற்கு எதிராக போராடுகின்ற தாராளவாத ஜனநாயக சக்திகள் என்று இரண்டு வகையில் உள்ளனர்.
இவர்களை ஒடுக்குவதற்கு என்றே சீன அரசு 2020 இல் கடுமையான விதிகளைக் கொண்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொணர்ந்தது. தொடர்ந்து ஜனநாயகச் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். இவையெல்லாம் ஹாங்காங்கின் தனித்துவம் நீடிக்குமா என்கிற ஐயத்தைத் தோற்றுவித்திருக்கிறது.
படிக்க:
♦ ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பும் (sco) அடிமை மோடியின் கூச்சலும்!
♦ சீனா நவீன சமூக ஏகாதிபத்தியம் | புதிய ஜனநாயகம் வெளியீடு
இந்த வகையில் சமீபத்தில் ஹாங்காங்கைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் க்ளோயி சியுங். என்பவர் ஜனநாயகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதற்காக, ஹாங்காங் அதிகாரிகள் தனது தலைக்கு ஒரு மில்லியன் ஹாங்காங் டாலர்கள் சன்மானம் அறிவித்துள்ளனர் என்கிறார் அவர். இப்போது இவர் பிரிட்டனில் வசித்து வருகிறார்.
பிரிவினையைத் தூண்டுதல், பிஆர்சி (சீனா) மற்றும் எச்கேஎஸ்ஏஆர்-க்கு (ஹாங்காங்) எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக க்ளோயிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது” என ஹாங்காங் தேசிய பாதுகாப்பு காவல்துறை கூறுகிறது.
தனக்கு நிறைய மிரட்டல்கள் வருவதாகக் கூறும் க்ளோயி, “ஆனாலும், ஹாங்காங்கில் நீங்கள் அரசுக்கு எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதை உலகுக்கு தொடர்ந்து சொல்வேன்” என்கிறார்.
சீனாவில் கம்யூனிசம் பூத்துக் குலுங்குவதாகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு எதிராக பல்துருவ வல்லரசை உருவாக்குகிறது என்று புளகாங்கிதம் அடைகிறார்கள் போலிக் கம்யூனிஸ்டுகள்.
ஆனால் சீனாவின் நவீன காலனி நாடுகளான ஹாங்காங் மற்றும் தைவான் போன்றவற்றில் போராடுகின்றவர்களை கடுமையாக ஒடுக்குவதில் அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு சற்றும் குறையாத ஜனநாயக விரோத பாசிச சர்வாதிகாரத்தை திணிப்பதாகவே சீனா நடந்து கொள்கிறது.
சீனாவைப் பற்றி போலி கம்யூனிஸ்டுகள் உருவாக்குகின்ற கற்பிதங்களை தூக்கி எறிந்து விட்டு சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், காலனிய ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராடுவோம்.
மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி