போட்டுத் தாக்கும் விமரிசன அம்பு மழையிலிருந்து
மோடி அரசைக்காக்கும் தொலைக்காட்சி சேனல்கள் !


தேர்தல் முடிந்து உற்சாகப் போதையில் பாஜக மிதந்தது, இது அனைவரும் அறிந்ததே; இதற்காகவே காத்திருந்தது போல சடுதியில் எரிபொருள் விலை விசம் போல்  ஏறியது,  உடனே சந்தையில் எல்லாப் பொருளும் விலை கூடியது.

ஆனால் நம் வீடுகளின் நடுவில் நாயகமாக அமர்ந்துள்ள டி.வி–யில் முக்கியத் தலைப்புச் செய்தியில் மற்றும் விவாதங்களில் விவாதப் பொருளாக மாறவில்லை, ஏன்?

இந்திய ஒன்றிய அரசாங்கத்தை எல்லாப் பிரச்சினைகளிலும் விமரிசிக்கும்  வக்கு  டிவிக்கு இல்லை. இது உண்மை. விலை வீக்கம், விலை ஏற்றம் உலகம் பூராவுமே விவாதமாக்கப்படவில்லை.டி.வி செய்திகளில்   7% க்கும் போகாமல் பார்த்துக் கொண்டார்கள்.

விவாதத்தை அளவிட்டு மதிப்பீடு செய்யும் ஆர் டி டி ( RTD )  என்பது முக்கியச் செய்திகள் வரும் நேரத்தில் ஊடகங்களில் நடக்கும் விவாதங்கள் பற்றிய ஆய்வுக்கானது. இதற்காக  மொத்தம் சுமார் 3333 நிமிடங்கள் மதிப்பிடப்பட்டன. ஆர் டி டி ( RTD ) “கண்ணோட்டங்கள் பற்றிய ஆய்வுகள், புது டெல்லி” என்ற நிறுவனத்தின்  ஊடகங்களைக் கண்காணிக்கும் முயற்சிக்கான பிரிவு. “விவாதங்களை மதிப்பீடு செய்தல்” என்பதே ஆர் டி டி ( RTD ). இது 2020–ல் தொடங்கப்பட்டது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  விலை உயர்வு பற்றி நடக்கும் விவாதங்களை மதிப்பிடுவது என்ற முகாந்திரத்தில்  வரவேண்டிய செய்திகளைக் கட்டுப்படுத்துவது என்பதே நோக்கம்.

2022–ல் சனவரி முதல் மார்ச் வரை ஐந்து மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு எரிபொருள் விலைகளை ஏற்றாமல் கட்டுக்குள் வைத்தார்கள். தேர்தலுக்குப்பின் ஏற்றிவிடலாம் என்பது திட்டம். இதை எப்படி  டி.வி ஒளித்து மறைத்து  விளையாடியது என்பதுதான் நமது விவாதப் பொருள் !

மார்ச் 7, 2022 : பலகட்ட தேர்தல்கள் முடிந்து முடிவுகளும் வெளியாகின. மார்ச் 22–லிருந்து 14 முறை  பெட்ரோல், டீசலில் ஏறியது.ஏப்ரல் 6—ல் விலை ஏற்ற விகிதம் திரண்டு லிட்டருக்கு பத்து ரூபாய் கூடிவிட்டது.

டி.வி விவாதம் என்றால் நாம் எதிர்பார்ப்பது  5  அம்சங்கள் : ஒன்று, மக்கள்படும் கஷ்டங்களை வெளியே வீதிக்குக் கொண்டுவருவது ; இரண்டு  ஏறிவிட்ட விலையைச் சரிசெய்ய அரசு என்ன மாற்று நடவடிக்கைகள் எடுத்தது என்ற பதிலைக் கோருவது ; மூன்று, இந்திய மக்களைப் பாதித்திராத சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு முக்கியச் செய்திகள் போடாமல் இருப்பது;  நான்கு, நிலைமையை எப்படிக் கையாள்வது என்பதற்கு மாற்றுக்கருத்து, ஆலோசனைகளை அக்கம்பக்கம் திரட்டிக் கொண்டுவருவது ; ஐந்து, யாருக்கு அதிகம் பாதிப்போ ( ஏழைகள், பலதட்டுப் பிரிவினரின் ) அவர்களின் நிலைமை பற்றியும் அவர்கள் மௌனமாக எதிர்கொள்ளும் கடுந்துன்பத்தை கவனம் குவித்துக் கண்காணித்து அம்பலத்தில்  ஏற்றுவது. இவற்றைப் பின்வரும் ஆய்வுகளில் பொருத்திப் பாருங்கள், நிலைமையை நீங்களே உணர்வீர்கள்.

ஏப்ரல் 6, 2022 : முக்கியச் செய்தி நேரம் பற்றி ஆய்வு, 25786 நொடிகள்—அதாவது  சுமார், 430 நிமிடங்கள் : ( படம் 1 பார்க்கவும்.)

டி.வி பார்ப்பவர்கள் செய்திகளின்  முழுப் பரிமாணத்தையும்  தரக்கூடிய பல அம்சங்களையும்  பெறவில்லை. மக்கள் நேரம் ஒதுக்கி டி.வி–யை நாடிப் பார்க்கின்ற முக்கிய நேரங்களில்   இடம் பெற்ற டி.வி நிகழ்ச்சிகள் கவனத்தைச் சிதறடித்தன, திசைதிருப்பின. இவை 10 அலைவரிசைகளிலிருந்து ( சேனல்களிலிருந்து ) அளவிடப்பட்ட விசயங்கள். இதில் 5 ஆங்கிலம், 5 இந்தி. இவற்றில் கண்டெடுக்கப்பட்டவை :

அதிகம் விவாதிக்கப்பட்டவை, 40 % அளவில்  உக்ரைன் போர் பற்றி, ஆராயப்பட்ட  மொத்த 430 நிமிடங்களில் இதற்கு 172 நிமிடங்கள். மற்ற பொது விவரங்களோடு  உக்ரைன் ஜனாதிபதியின் பேட்டியும் இதில் அடங்கும்.

இரண்டாவது இடத்தில்,  சில மாநிலங்களில் நடக்கும்  சங்கிகள் தூண்டி நடத்தும் இந்து–முசுலீம் சண்டைகள், இதற்கு 24 %, 103 நிமிடங்கள்.

மூன்றாம் இடத்தில், எதிர்க் கட்சிகள்/எதிர்க்கட்சித் தலைவர்களுடன்  ஒன்றிய அரசு நடத்திய ஆலோசனைகள்  இது 21 % சுமார் 93  நிமிடங்கள், இதுவும் மோடி விளம்பரத்துக்காக.

கடைசியாக, நான்காமிடத்தில், விலைவாசி உயர்வு பற்றி விவாதம், இதுவும் பல அலைவரிசைகளில் ஓரம் ஒதுக்கப்பட்டது. 7 % மட்டுமே. மொத்த நேரத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே.

மார்ச் 19 முதல்  24 , 2022 : முக்கியச் செய்தி நேரம் : விவாத நேரம், 57429 நொடிகள், அதாவது, 957 நிமிடங்கள்.

தேர்தல் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு , 4 அலைவரிசைகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் கண்டுபிடிக்கப்பட்டவை : (படம் 2 பார்க்கவும்.)

விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் மொத்த நேரத்தில் 76 நிமிடங்கள் மட்டுமே.

உக்ரைன் போர்பற்றி 188 நிமிடங்கள் ஆக்கிரமித்தன.  வேலையின்மை  போக்க திட்டங்கள்  பற்றி , விவசாயப் பிரச்சினைபற்றி, கிராமப்புறப் பொருளாதாரம் , எதிர்க்கட்சிகள் நடத்திய  ஆட்சிகளின் போது ஒன்றிய வழிகாட்டுதலில் நிர்வாகச் சீர்கேடுகளை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் ஆகிய அனைத்துக்குமே   மிகக் குறைந்த நேரமே ஒதுக்கப்பட்டது.

1.9.2021 ல் முக்கியச் செய்திகள் 29071 நொடிகள், அதாவது, 485 நிமிடங்கள். 2022 ல் விலைவாசி உயர்வு பற்றிய மறைக்கப்பட்டன. ஒளிபரப்பான செய்திகள் இல்லை. ஆகஸ்டு, செப்டம்பர் 2021 செய்திகளே இங்கு அலசப்படுகின்றன.

( படம் 3 பார்க்கவும்.)

ஆகஸ்டு–செப்.2021-ல்  எல்.பி.ஜி சிலிண்டர், சமையல் எரிவாயு விலை ஏற்றம் ரூ.884.50 டெல்லியில் சரசரவென்று எகிறியது. ஆனால் இந்த மாதிரியான நெருக்கடி மாதங்களில் என்ன செய்திகள் அதிக நேரம் எடுத்துக்கொண்டன ? தாலிபன், ஆப்கனிஸ்தான் பிரச்சினகளுக்கே அதிக நேரம் ஒதுக்கப்பட்டது.உள்நாட்டுப் பிரச்சினை, பாதிக்கப்பட்ட மக்கள் நிலைமை, பெருகிய விலை ஏற்றம், கோவிட் தொற்றுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது, பகுதிகளில் நீர்தேங்கிக் கிடந்ததுபற்றி, வேலைவாய்ப்பற்ற நிலைமைக்கு எதிரான போராட்டங்கள்இன்னபிற மிகக் குறைந்த நேரமே விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு பல கட்டங்களில் முக்கியச் செய்திநேரத்தில் அலைவரிசைகளில் விவாதிக்கப்பட்ட செய்திகள் பற்றி நிமிடவாரியாக எடுத்து அலசப்பட்டு. வேறு என்ன செய்திகள் கவனத்தில் முன் தள்ளப்பட்டன.மக்கள் பிரச்சினைகளைக் கீழே தள்ளி ஏறிமிதித்துவிட்டு வேறு என்ன என்ன விவாதிக்கப்பட்டன என்று ஒப்பிட்டுப் பார்த்தால் அது எத்தனைப்பெரிய என்று உங்களுக்கே புரியும். அவை :

29,693 நொடிகள், சுமார் 500 நிமிடங்கள் :

செப்.23, 2021–ல் 11 சேனல் அலைவரிசைகளில் போலீஸ் அத்துமீறல்களில் நடந்த ரத்தப் படுகொலைகளை மறைத்து பிரதமரின் அமெரிக்கச்சுற்றுப் பயணம் விவாதிக்கப்பட்டது.

25470 நொடிகள், அதாவது, சுமார் 425 நிமிடங்கள்  கோவிட் 19 இந்தியாவில் மூன்றாம் கட்டமாகப் பரவிய  23.8.2021 அன்று 11 சேனல் அலைவரிசைகளில் ஆப்கன்  பிரச்சினை அந்த நேரம் முழுவதையும் எடுத்துக் கொண்டது.

இவை எதைக்காட்டின ? பல 25 மணி நேரங்கள் — டி.வி விவாதங்கள் பல முக்கியக் கட்டங்களில் ஒன்றிய அரசாங்கத்தைக் காப்பாற்றிவிட்டன.அதிகாரத்தில் ஊடகங்கள் ஓர் அங்கம் வகிக்கும் என்றால் அதற்குப்பிறகு அவை சுதந்திரமாக இருக்க முடியுமா ? பொருள் உள்ளதாக இருக்க முடியுமா ?

ஊடகங்களுக்கு எஜமானர்கள் இருக்கக் கூடாது.  ஆனால் அப்படியா இருக்கிறது, அப்படியா நடக்கிறது ? அவை கார்ப்பரேட்டுக்களின் (முதலாளிகளின் ) கைப்பிடியில்தானே இருக்கின்றன ? அங்கே ஏதாவது விவாதங்கள் நடந்திருந்தால் அவை தொவைக்காட்சியில் பணிபுரியும் செய்தியாளர்கள்  ‘முக்கியச் செய்தி நேரத்தில் பெரிய போரையே நடத்தி வெற்றிபெற்றதாக அவை இருக்கும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் இந்த உண்மைகள்கூட வெளிவந்திருக்க முடியாது.

( குறிப்பு :

தற்போதைய நிலவரப்படி அனேகமாக இந்திய ஊடகங்கள் காசாலும், கார்ப்பரேட் செல்வாக்காலும், பயமுறுத்தல்களாலும் ஆர்.எஸ்.எஸ்–மோடி கும்பலால் அடக்கிக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன என்றே சொல்லலாம்.

தென்மாநிலங்கள், குறிப்பாகதமிழக–கேரளப் பகுதிகள் ஒன்றிய ஒடுக்குமுறையின்கீழ் போராடிக் கொண்டிருக்கின்றன.இப்பகுதிகளில் ‘ ஊடகச் சுதந்திரம் ‘ பற்றிய ஆய்வுகள் எதுவும் முழுமையாக நடைபெறவில்லை.ஒருசில மட்டும் சிறு கட்டுரைகளாக அங்கே இங்கே என்று முன்வைக்கப்பட்டுள்ளன, முழுமையில்லை. இனிமேல்தான் நடைபெறவேண்டும்.)

மூலம் : தி ஒயர், 27.4.2022.

கோட்டா  நீலிமா, எழுத்தாளர்.

மொழி மறு ஆக்கம் மற்றும் குறிப்பு : இராசவேல்.

https://thewire.in/media/prime-time-diverts-and-distracts-to-shield-government-from-negative-sentiment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here