புமாஇமு மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் அன்பு

கடந்த 2014 ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது பாசிச மோடி அரசு. பல்வேறு தரப்பு மக்களின்  எதிர்ப்புகளையும் மீறி, தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ கொண்டு வந்து மொத்த கல்வித் துறையையும் கார்ப்பரேட் – காவிமயமாக்கும் வேலைகளை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக VBSA சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் துடிக்கிறது. மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமலே இந்தச் சட்டத்தை திணிக்கப் பார்க்கிறது பாசிச மோடி அரசு

தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ள இச்சட்ட மசோதா மூலம் பல்வேறு உயர்கல்விப் பிரிவுகளுக்காக இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக்குழு UGC, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் AICTE, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் NCTE ஆகிய அமைப்புகள் கலைக்கப்பட்டு வி.பி.எஸ்.ஏ  (விக்சித் பாரத்சிக்க்ஷா ஆதிஷ்டான்) என்ற கல்வியாளர்களே இல்லாத 12 பேர் கொண்ட ஒரே அமைப்பின் கீழ் உயர்கல்வியைக் கொண்டு வரப்பார்க்கிறது பாஜக அரசு.

 பாசிச மோடி அரசின் VBSA வுக்கு எதிராக கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
தோழர் வழக்கறிஞர் மகேஷ்

இந்தச் சட்டத்தின்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்தும் உயர் கல்வி நிறுவனங்கள் என்ற வரையறைக்குள் வரும். இதன் மூலம் பல்கலைக் கழகங்களுக்குரிய மதிப்பை, அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. அடுத்தபடியாக, மாநில பல்கலைக் கழகங்களுக்கான கொள்கை முடிவுகளையும்,  பாடத்திட்டங்களையும், கல்வித் தரத்தையும் நிர்ணயிக்கும் உரிமையையும் முழுமையாக கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் ஒரேநாடு – ஒரே கல்விக் கொள்கை – ஒரே மொழி தமிழ்நாட்டு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் திணிக்கப்படும்.  குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தகுதி, திறமை என்று நீட் தேர்வைத் திணித்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வியையும் உயிரையும் பறிக்கின்றது. மேலும் VBSA சட்டத்தின் மூலம் BA, B.COM, B.SC  போன்ற பட்படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வைக் கொண்டுவர போகின்றது பாசிச மோடி அரசு.  ஒரு தேர்வைக் கூட நேர்மையாக நடத்த முடியாமல் நீட் தேர்வில் மோசடி, ஊழல், முறைகேடு என்று இவர்களின் முகமுடி கிழிந்துத் தொங்குகின்றது என்பது தனிக்கதை.

படிக்க: செப்- 28 மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் உறுதியேற்போம் | கருத்தரங்கம்

உயர் கல்வியில் தரத்தை மேம்படுத்த இந்த சட்டத்தைக் கொண்டு வருவதாக கூறும் மோடி அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி அளிப்பது பற்றி இச்சட்ட மசோதாவில் எதுவும் கூறவில்லை. இதன் மூலம், மோடி அரசு வந்த பிறகு வெட்டிச்சுருக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கான UGC நிதியும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தேசியக் கல்விக் கொள்கையின் மாதிரிப் பள்ளியான PMSHRI பள்ளிகளை அனுமதித்தால்தான் சட்டப்படி தரவேண்டிய, தமிழ்நாட்டுக்கு உரிமையான கல்வி நிதியை வழங்க முடியும் என்று ஒன்றிய அரசு மிரட்டுகிறது. ரூ.5,109 கோடி நிதியை தராமல் தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வி மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. அதேபோல், தற்போது பல்கலைகழகங்களுக்கும் நிதி வழங்காமல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இது உயர் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கவே வழிவகுக்கும்.

இதனை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறோம். அதன் ஒருபகுதியாக நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

மாநிலப் பல்கலைக்கழகங்களைச் செல்லாக்காசாக்கும் VBSA சட்ட மசோதாவைக் கிழித்தெறிவோம்!

ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்புக்கு எதிராக போராடுவோம்! மாநில உரிமையை வென்றெடுப்போம்!

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பில் நேற்று 21-11-2026 சனிக்கிழமை கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் தோழர் வழக்கறிஞர் மகேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.

தோழர் ஜூலியஸ்

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் ஜூலியஸ் அவர்கள் உரையாற்றினார் மேலும் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மாநில பொதுச் செயலாளர், தோழர் ச.அன்பு, அவர்கள் உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் திலிப் மற்றும் கலந்து பலர் கொண்டனர்

புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
கோவை, தமிழ்நாடு- 9500792976.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here