மிழகத்தை பாசிச கோமாளி விஜய் ஆட்சி செய்ய துவங்கியது முதல் பாசிச பாஜகவின் பினாமி ஆட்சியாகவும், பார்ப்பன பாசிசத்தை அமல்படுத்துகின்ற ஆட்சியாகவும் நடத்தி வருகிறது என்பதை மேலும் ஒரு நிகழ்வு நமக்கு உணர்த்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை  கிளையின் நீதிபதிகளான ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு இஸ்லாமியர்கள் மதம் மாறினால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மதம் மாறியவர்களின் சாதி மாறுகிறதா?

பார்ப்பன (இந்து) மதத்தின் கொடுங்கோன்மையிலிருந்து மதம் மாறி செல்கின்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பை வழங்கியுள்ளது.

“சனாதனத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு, சாதி தீண்டாமை கொடுமைகளை சகித்துக் கொண்டு இந்து மதத்திலேயே இருந்து வாழ்ந்து சாகவேண்டும்” என்பதை அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கின்றது என்பதால் அதன் வழிகாட்டுதலில் தான் தீர்ப்பளிக்க முடியும் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் படியே மதம் மாறுகின்ற உரிமையும், மீறி மதம் மாறினால் அவர்களுக்கு கிடைக்கின்ற இட ஒதுக்கீடு உரிமையும் ரத்தாகும் என்பதை முன்வைத்து அதையே தங்களது தீர்ப்புகளாகவும், சட்டமாகவும் ஆக்கியுள்ளனர்.

அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது என்ற நிலை தான் 1956 வரை நீடித்தது. அதற்கு எதிராக  மதம் மாறிய சீக்கியர்கள் கடுமையாக போராடியதன் காரணமாக 1956ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும் 1990ஆம் ஆண்டு பெளத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும், பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

இதே போன்ற திருத்தத்தைத்தான் கிறித்தவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவர்களும், இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் நடக்கின்ற போராட்டங்களாகும்.

இந்தசூழலில் 2024-ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது.  “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) அல்லது பட்டியலினத்தவர் (SC) ஆகிய பிரிவுகளில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும் ஒருவர், இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிமாக கருதப்படலாம் என்றும்; அவ்வாறு மதம் மாறும்போது, அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராகக் குறிப்பிட்டு சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதியினர் பிரிவில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஒருவர் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)’ எனக் கருதலாம். மதம் மாறிய பிறகு லெப்பை உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழ் வழங்கலாம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

படிக்க: சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்

இந்த அரசாணையின் அடிப்படையில், தனக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் (BCM) சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சமீர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்து கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட  நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பாலாஜி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்துகின்ற வகையில் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி உத்தரவிட்டுள்ளனர்.

அந்தத் தீர்ப்பின்படி தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மூன்றரை சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்துள்ளனர்.

“இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்கள் ஏதேனும் ஒரு வடிவில் தொடர்ந்து இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே, மாநில அரசு இத்தகைய முறையை மேற்கொண்டுள்ளது. இது,அரசு கையாண்ட இந்த அணுகுமுறையில் உள்ள உள்ளார்ந்த குறைபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது”  என்று கூறி திமுக அரசு போட்டிருந்த அரசாணையை ரத்து செய்தனர்.

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்த பாசிச பாஜக 2023 ஆம் ஆண்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அதே வழியில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கொடுத்துள்ள தீர்ப்பானது இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்வதை நோக்கி பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி கொண்டுள்ளது.

படிக்க: இந்தி திணிப்பு, உயர்சாதி ‘ஏழை’களுக்கான 10% இடஒதுக்கீடு! இந்திய மக்கள் மீதான இரு பெரும் தாக்குதல்கள்!

புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கு எதிராக செயல்படுகின்ற, ஊசலாடுகின்ற சமரச பிரிவாக இருந்தாலும் திமுக உள்ளிட்ட கட்சியினரை ஆதரிப்பதை கடுமையாக விமர்சித்து வந்தனர் பாசிசத்தை பற்றி புரிந்து கொள்ளாத அரசியல் அறிவிலிகளும், தற்குறிகளும்.

நிலவுகின்ற சமூக அமைப்பிற்குள் ஆட்சி மாற்றம் என்பது குறித்தும், அரசியல் கட்சிகள், அவர்களின் வர்க்கத் தன்மை காரணமாக அவர்களுக்குள் உள்ள வேறுபாடுகள் குறித்தும் மார்க்சிய லெனினிய இயக்கவியல் பார்வை கொண்டிராத இத்தகைய தற்குறிகள் பாசிச எதிர்ப்பு என்பதை சுருக்கி திமுக ஆதரவு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே விமர்சனங்களை முன்வைத்து சாமியாடி கொண்டிருந்தனர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட்டு பாசிச கோமாளி விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், அதுவும் மதச்சார்பற்ற தன்மையுடன் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் வழியில் நடக்கும் ஆட்சி வந்துள்ளதாகவும் முற்போக்கு முகாம் என்று கூறிக் கொண்டவர்கள் பலரும் சிலாகித்து வந்தனர்.

இதற்கு ஒரு படி மேலே சென்று தனது ஆட்சிக்கு ஆதரவு கேட்டு நாடாளுமன்ற இடதுசாரிகளையும், பாஜக எதிர்ப்பு கூட்டணியில் திமுகவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்த சில கட்சிகளையும் சென்று சந்தித்தபோது நடிகரை பார்த்த ஆகர்ஷத்தில், ‘கட்டிப்பிடி வைத்தியம்’ செய்து மகிழ்ச்சியடைந்தனர்.

படிக்க: இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஆதரவும், எதிர்ப்பும்!

ஒரு கட்சியின் கொள்கையையும், அதன் வர்க்கத் தன்மையையும் வைத்து அவர்கள் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறார்கள்; நாட்டின் பிரதான அபாயமாக உள்ள பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை எல்லாம் சீர்தூக்கி பார்ப்பதற்கு மூளையை கசக்கி கொள்ளாத போலி முற்போக்கு கும்பல் பாசிச கோமாளி விஜய்யை தூக்கி வைத்துக் கொண்டாடியது.

புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தது முதலே அது கார்ப்பரேட் ஆதரவு பெற்ற பாசிச பாஜகவின் பினாமி ஆட்சி தான் என்பதை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யப் போகிறோம் என்று ஒரு வாரத்திற்கு முன்னரே கூறிய பிறகும் பாசிச கோமாளி விஜயின் அரசாங்கமானது அதற்கு எதிராக ஒரு துரும்பையும் எடுத்து போடவில்லை.

இவையெல்லாம் தெரியாமல் செய்கின்ற தவறு என்று டெக்னிக்கலாகவும், சங்கடமாகவும் வருத்தமும் தெரிவிப்பதன் மூலம் பாசிச கோமாளி விஜய் ஏதோ நோக்கமற்று அரசியலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைப் போலவும், ஏற்கனவே ஆண்ட திமுக செய்த தவறுகளை சரி செய்து தமிழகத்தை முன்னேற்றப் போகிறார் என்று கற்பனையில் மிதப்பது மட்டுமின்றி தானும் ஏமாந்து பெரும்பான்மை மக்களையும் ஏமாற்றுகின்ற வேலையை போலி இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு சக்திகள் செய்து வருகின்றனர்.

எனவே தனது அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் பாசிச பாஜகவின் பினாமி ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதை நிரூபித்துக் கொண்டுள்ள பாசிச கோமாளி விஜய் ஆட்சியின் யோக்கியதையையும், மக்கள் விரோத தன்மையையும், மதச் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி தூக்கி எறிய வேண்டும்.

  • கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here