திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் எனும் பெயரில் இந்து முன்னணி கலவரத்தை தூண்ட முயற்சி!

“திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் ” எனும் பெயரில் இந்து முன்னணி் கலவரத்தைத் தூண்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த முப்பதாண்டுகளாக ஆர்எஸ்எஸ் , இந்து முன்னணி மேற்கொண்ட முயற்சியினை தற்போதைய ஒன்றிய பா.ஜ.க ஆட்சியைப் பயன்படுத்தி செயல்படுத்த முனைகிறது.

ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றிவிட்டதாகப் பொய்களைப் பரப்பிய பா.ஜ.க , ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட சனாதனக் கும்பல் தற்போது மலையின் மேல் உள்ள சிக்கந்தர் மலைக்கு அருகே தான் தீபம் ஏற்றுவோம் என கலவரத்தைத் தூண்ட முயற்சித்து வருகிறது. திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்ற முழக்கத்தோடு களமிறங்கியிருக்கும் இந்தக் கும்பல் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்புடைய நீதிபதிகளை வைத்து எப்படியாவது மலையில் தீபம் ஏற்றிவிடலாம் என கனவு கண்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வெவ்வேறு தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுகிற உரிமை இந்து அறநிலையத்துறையை சார்ந்தது எனத் தீர்ப்பளித்திருக்கிற நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் திருத்திப் புரட்டி மலை மீது தீபம் ஏற்ற அனுமதியளித்துவிட்டதாக பச்சைப் பொய்யைப் பரப்பி கலவரத்திற்கு அடித்தளமிடுகிறது.

மதுரையைக் குறிவைத்து இந்து முன்னணி , ஆர்.எஸ்எஸ் அமைப்புகள் கலவரத் திட்டத்துடன் களமிறங்கியிருப்பதை எதிர்த்து

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கு!

தமிழ்க்கடவுள் முருகனுக்குத் தமிழிலே அர்ச்சனை செய்!

இந்து அறநிலையத் துறை முடிவுகளில் மதவெறி அமைப்புகளின் தலையீட்டைத் தடுத்து நிறுத்து!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மதநல்லிணக்கக் கூட்டமைப்பின் தோழர்கள் திருப்பரங்குன்றத்தில் இன்று காலை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகியுள்ளோம்.

திருப்பரங்குன்றத்தில் கலவரத்தைத் தூண்ட திட்டமிட்ட சனாதனக் கும்பலுக்கு இந்நிகழ்வு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கைதான தோழர்கள் திருப்பரங்குன்றத்திலுள்ள RSD மண்டகத்தில் வைக்கப்பட்டுள்ளோம்!

மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு .

தொடர்புடைய கட்டுரைகள்

 

3 COMMENTS

  1. திருப்பரங்குன்றத்தை காவி பாசிச கும்பல் மீண்டும் ஒரு அயோத்தியாக மாற்ற துடிக்கிறது.
    அதற்கு ஒத்து ஊதும் வகையில் நீதிமன்றமும் நீதிபதிகளும் தீர்ப்பை வழங்குவது என்பதை ஏற்க முடியாது.
    மக்கள் காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக போராடுவதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

  2. திருப்பரங்குன்றம் மாலையில் தீபம் ஏற்றுவோம் என்று இந்து முன்னணி கலவரத்தை தூண்ட முயற்சி !

    ஆர் எஸ் எஸ் பாஜக காவி கும்பல் தமிழ்நாட்டில் எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்ற அதற்கு ஒரு கலவரத்தை உருவாக்க மதுரை திருப்பரங்குன்றம் மலையை கலவரத்திற்கான ஒரு கருவியாக பாசிச குண்டர்கள் பயன்படுத்துகிறார்கள் குண்டர்களுக்கு துணையாக நீதித்துறையும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனும் பாசிச கோமாளிகளின் தொங்கு சதையாக செயல்படுகிறார் Dஇது பெரியார் பூமி சனாதன காவிகளுக்கு இறுதி கல்லறை எழுப்பும் நாடு தமிழ்நாடு!

  3. ஆர்எஸ்எஸ்- பாஜக- இந்துத்துவ -மதவெறி – காவிப் பாசிஸ்ட்டுகள், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை எல்லாம் ஒட்டடைகளைப் போல் ஒதுக்கித் தள்ளிவிட்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாடு முழுவதுக்கும் மசூதிகளை இடிப்பது, தேவாலயங்களை இடிப்பது, தர்காக்களை இடிப்பது… நாட்டை கலவரப் பூமியாக்குவது
    உயிர்ப்பலிகளை உண்டாக்குவது… என்பது தான் அவர்களது தொழில் முறை சார்ந்த ‘பணி’யாகிப் போனது. அதனுடைய நீட்சியாகவே மதுரை திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள ஆண்டாண்டு காலமாக இஸ்லாமியர்கள் அனுபவித்து வருவதும், பிரிட்டிஷ்காரன் காலத்திலேயே உச்ச நீதிமன்றமாக கருதப்பட்ட லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்று இஸ்லாமியர்களுக்கு சொந்தமே சிக்கந்தர் தர்கா எனத் தீர்ப்பாகிய பின்னும், அதனை நோக்கிய அவர்களது கலவரப் பயணம் தொடர கதையாக நீள்கிறது. இதற்கு அதிகார வர்க்கமும் குறிப்பாக பார்ப்பன ஆர் எஸ் எஸ் கண்ணோட்டம் உடைய நீதிபதிகளும் பக்க பலமாக இருக்கின்ற கொடுமை நீள்கிறது. ஆனாலும் தமிழ் மக்கள் குறிப்பாக முற்போக்கு இயக்கங்கள், ஜனநாயக சக்திகள் மதுரை, திருப்பரங்குன்றம், மேலூர் உள்ளடக்கிய, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து காவிப் பாசிஸ்ட்டுகள் தடம் பதிக்க விடாமல் துரத்தி அடிக்க வேண்டியது மிக முக்கிய நமது கடமையாகக் கொள்வோம்! மத நல்லிணக்கம் போற்றும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ உள்ளிட்ட பிற மதங்களின் ஒற்றுமையை நிலைநாட்ட பாடுபடுவோம்! 1008 சாதிகளை வைத்துக் கொண்டு அதற்கு ஒரு மதம் என்ற பெயரிலே இந்து மத வெறியை ஊட்டி மக்களை துண்டாட நினைக்கும் சனாதன பார்ப்பனிய காவி பாசிஸ்ட்டுகளுக்கு தமிழ் மண்ணில் சமாதி கட்டுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here