லாவணி கலைஞர் டேப்காதர் நினைவு விருது வழங்கல்

03-04-2022 ஞாயிறு மாலை 05.30 மணிக்கு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது.மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில இணைப் பொதுச்செயலர் தோழர்.இராவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தஞ்சை தோழர்.அருள் வரவேற்புரையாற்றினார்.அடுத்து  மறைந்த மக்கள் பாடகர் தோழர்.லெனின் சுப்பையாவின் படத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில பொதுச்செயலர் தோழர் கோவன் அவர்கள் திறந்து வைத்து  நினைவேந்தல் உரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து லாவணி கலைஞர் டேப் காதர் நினைவு விருது லாவணி கலைஞர் கல்யாணி மாரியப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர். காளியப்பன் அவ்விருதினை அளித்து வாழ்த்துரை வழங்கினார்.நிகழ்வின் ஒரு அங்கமாக நடைபெற்ற நூலாய்வு அரங்கில் சென்னை லயோலா கல்லூரிப் பேராசிரியர் முனைவர் காளீஸ்வரன் எழுதிய”உண்மை பேசும் வாய்மொழி வரலாறு” நூலுக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தெ. வெற்றிச்செல்வன்,ஆய்வுரை வழங்கினார்.

லாவணி கலைஞரும் எழுத்தாளருமான தஞ்சை சாம்பான் அவர்கள் எழுதிய “தறிகெட்டுப்போன திசைகள்” நூலுக்கு,  தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், முனைவர் சு.மகேஸ்வரி ஆய்வுரை வழங்கியதைத் தொடர்ந்து நூலாசிரியர் தஞ்சை சாம்பான் ஏற்புரை வழங்கினார்.

படிக்க:

 மார்ச் 23: ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்!

 தோழர் டப்பு ரமேஷுக்குச் சிவப்பு அஞ்சலி !

உண்மை சொல்லும் வாய்மொழி வரலாறு நூலாசிரியரும் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற உறுப்பினருமான முனைவர். காளீஸ்வரன்  அவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்களுக்கும் தஞ்சை இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர். துரை மதிவாணன் மற்றும் நிகழ்த்துக்கலை கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததைத் தொடர்ந்து காளீஸ்வரன் ஏற்புரை வழங்கி  சிறப்புரையாற்றினார்.தஞ்சை நஞ்சை லாவணி கலைக்குழு மற்றும் நாடகக்கலைஞர்கள் சங்கமத்தின் பொருளாளர் கோ. ராஜேந்திரன் நன்றி நவிலலுடன் நிறைவுற்ற நிகழ்ச்சியில் நிகழ்த்துக்கலை கலைஞர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் நிகழ்ச்சியின் இறுதிவரை பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தகவல்:

தஞ்சை நஞ்சை லாவணி கலைக்குழு மற்றும் நாடகக் கலைஞர்களின் சங்கமம், தஞ்சை.  9443827578

மக்கள் கலை இலக்கியக் கழகம்
தஞ்சை.
9443157641

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here