“விழி எழு, கர்நாடகா!” :
பாசிச பாஜகவுக்கு எதிராக மாநிலம் முழுவதும்
வீதிதோறும் பிரச்சாரம், முழக்கம், பாடல்கள்!
கடந்த மூன்று மாதங்களாக, கர்நாடகத் தேர்தலில் பாசிச பாஜக-வைத் தோற்கடிக்கும் ஒரே நோக்கத்தோடு, பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்த “விழி எழு, கர்நாடகா” என்ற பிரச்சார இயக்கம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுவுடைமை, ஜனநாயக இயக்க நட்புறவுகள் மூலம் இதைச் செயல்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார்கள்.
அந்த ஒருங்கிணைப்பின் மையப் பாடலாக “எத்தேளு கர்நாடகா!” என்ற பாடலை வீதிகள்தோறும் பரப்பிவருகிறார்கள்.
“உன் நாடக வேடம் கலைகிறது, வெறுப்பு அரசியலைப் பரப்பும் இந்துமதவெறிக் கும்பலின் முயற்சிகள் ஒவ்வொன்றும் பல்லிளிக்கிறது!” என்பது பாடலின் மையக் கரு.
“பாஜக- வைத் தூக்கி எறிவது” என்பது வீதி முழக்கங்களின் மைய அரசியல் . ஊர்வலங்களில் பாடல் இசைக்கப்படுகிறது; எளிய ஆடல்கள். சிறுபான்மை மதத்தவர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட ஏழை விவசாயிகள் , தொழிலாளர்கள், தனியார் கம்பெனி ஊழியர், சிறுதொழில் முனைவோர், மாணவர், பெண்கள் ஆகியோர் பிரச்சினைகளை மையப்படுத்திப் பரப்புரை நடத்தப்படுகிறது. பனிரெண்டு மணிநேரம் தொழிலாளர் கசக்கிப் பிழியப்படுவதை எதிர்த்த முழக்கங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள்:கர்நாடகத் தேர்தல்: கொலைகாரக்கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் மோடி!
“பாஜக-வைத் தூக்கி எறி, ஜனநாயகத்தைக் காப்பாற்று!” என்பதை அரசியல் முழக்கமாக்கிப் பட்டிதொட்டி எங்கும் ஊர்வலம் வரும் ‘எத்தேளு கர்நாடகா!’ வீடியோப் பாடலைக் கேளுங்கள், பரப்புங்கள்!”