துரை வழக்கறிஞர் முகமது அப்பாஸ் அவர்களை கைது செய்த NIA மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வைத்துள்ளது. வழக்கறிஞர் அப்பாஸின் பூர்வீக ஊரான பேரையூரில் உள்ள அவர்களது குடும்ப தோட்டத்தை 3 நாட்களாக கண்காணித்த NIA, தற்போது 3 வாகனங்களில் அங்கு சென்று, தோட்டத்தில் வேலை பார்ப்போரை மிரட்டி வருகிறது. தோட்ட வேலைக்காக பயன்படுத்தும் அரிவாளை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கமாக NIA செய்வதுபோல சில பொருட்களை வைத்து எடுக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து மதுரை வழக்கறிஞரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வாஞ்சிநாதன்  பேசுகையில்… “இன்று காலை NIA வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆஜராகி வந்த வழக்கறிஞர் முகம்மது அப்பாஸை சட்ட விரோதமாக கைது செய்த NIA மதுரை ஆயுதப்படை மைதானத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அடைத்து வைக்கப்பட்ட இடம் ஒரு அனாமதேய இடம் போல் உள்ளது. NIA அலுவலகம் என்பதற்கான போர்டு கூட கிடையாது. முறையாக சம்மன் கொடுக்காமல் வழக்கறிஞரை கைது செய்துள்ளார்கள்.

பிரச்சனையை பொருத்தவரையில் வழக்குகளில் ஆஜராக கூடியவர் வழக்கறிஞர் அப்பாஸ். NIA ஒருவரை அடித்த வழக்கில் ஆஜரானவர். NIAவிடம் இந்த வழக்குப்படி நாங்கள் அப்பாஸை சந்திக்க வேண்டும், அல்லது அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அனுமதிக்க மறுக்கிறார்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு NIAவுக்கு செல்லாதா?

 

சட்டப்படி கைது செய்தவரை வழக்கறிஞர் சந்தித்து சட்ட உதவி செய்ய உரிமை இருக்கிறதா என்பதை NIA தான் சொல்ல வேண்டும். இதை தமிழக மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்,” என கேள்வி எழுப்புகிறார் மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.


இதையும் படியுங்கள்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது நரவேட்டையாடும் NIA என்ற கொலைகார உளவுப் படை!


NIA, அதிகார வர்க்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களையும், அவர்களுக்கு துணை நிற்பவர்களையும் சட்ட விரோதமாக ஜனநாயகத்தை மறுத்து ஒடுக்குகிறது. தமிழக மக்கள் வழக்கறிஞர் அப்பாஸூக்கு துணை நிற்க வேண்டும்.

மக்கள் அதிகாரம்
ஊடகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here