வடசென்னை ஏன் மிதக்கிறது?
சென்னையில் 2015ஆம் ஆண்டு வந்த வெள்ள சேதத்தின் போது எடுக்கப்பட்ட ஆவணப் படம் இது.
அப்போது தமிழகத்தை கொள்ளைக் கூட்ட கும்பலான அதிமுக ஆட்சி செய்து கொண்டிருந்தது. மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழகத்தை மொட்டை அடித்துக் கொண்டிருந்த ஒரு கிரிமினல் மாபியா கும்பல், அதிமுக என்ற பெயரில் தமிழகத்த்தை சூறையாடிக் கொண்டிருந்த காலம் அது.
அந்த கனமழை வெள்ளத்தின் அனுபவத்தில் இருந்து சென்னை நகரத்தின் கட்டுமானத்தை குறைந்தபட்சம் சரிசெய்வதற்கு கூட அதிமுக கும்பல் முயலவில்லை என்று பேராசிரியர். ஜனகராஜன் குற்றம் சுமத்துகிறார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட அதே போன்றதொரு பாதிப்பை சென்னை சந்தித்திருக்கிறது.
மழைக்காலத்தின் போது மட்டும் அதன் தீவிரத் தன்மையை பேசிக்கொண்டு ஏதேனும் சிறு சிறு முயற்சிகள் எடுப்பது என்பதை தாண்டி கோடை காலத்தில் இருந்து மழைக்கு தயாராவதும், மழை காலத்தில் வறட்சிக்கு தயாராவது என்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட அறிவியல்பூர்வமான அணுகுமுறையால் மட்டுமே சென்னையை நிரந்தரமாக காப்பாற்ற முடியும்.
புவி வெப்பமயமாதல் காரணமாக சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படை ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் லாபவெறி கொண்ட உற்பத்தி முறைதான்.
நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை முறியடிப்பது என்பது தற்போது சூழலியல் தொடர்பான பிரச்சனையையும் உள்ளடக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை இதுபோன்ற கனமழை, பெரு வெள்ளம் நமக்கு உணர்த்துகிறது.இந்தக் கண்ணோட்டத்தில் 2015-ல் வெளியான இந்த ஆவண படத்தை தற்போது மீள்பதிவு செய்கிறோம்.
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.
ஆவணப் படத்தை எடுத்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்திய DMedia Tamil எமது நெஞ்சார்ந்த நன்றிகள்