மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி கனியாமூரில் நடந்த போராட்டத்தில் அப்பாவி பொதுமக்களை கைது செய்த காவல்துறை மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தோழர் ராமலிங்கத்தின் மீது குண்டாஸ் போட்டுள்ளது.  மக்கள் அதிகாரத்தை குறி வைத்து காவல்துறை பொய்யான குற்றசாட்டுகளை புனைந்து கைது செய்தது அனைவருக்கும் தெரியும். உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு இது போன்ற கைதுகளை செய்கிறது காவல்துறை.

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளை நீதிமன்றம் விசாரணை அறிக்கை வெளியாகும் முன்னேயே அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிக்காக போராடியவர்களை பொய்வழக்கில் கைது செய்தது.

இதனை அடுத்து குண்டாஸ் வழக்கில் கைது செய்யபட்டிருக்கும் தோழர் ராமலிங்கம் சார்பாக அறிவுரை கழகத்தில் பேசிய தோழர் தியாகு பல உண்மைகளை உடைத்து பேசியுள்ளார். அறிவுரை கழகமும் தோழர் ராமலிங்கத்தின் மீதான சில குற்றசாட்டுகளை பொய் என கூறியுள்ளது.

இது குறித்த தோழர் தியாகுவின் காணொளியை காணுங்கள்… போலீசின் பொய் வழக்கிற்க்கு எதிராக போராடும் மக்கள் அதிகாரத்திற்க்கு துணை நில்லுங்கள்…

காணொளியை பாருங்கள்… பரப்புங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here