னியார் மருத்துவ கல்லூரிகள் தகுதியற்ற மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்த்து கொள்ளையடிப்பதை தடுப்பதே நீட் தேர்வின் நோக்கம் என்றார்கள். தேர்வில் ‘0’ பெற்றாலும் மருத்துவம் படிக்க தகுதி உள்ளவர்கள் எனில் எந்த ‘தகுதியை’ நிலைநாட்ட நீட் தேர்வு. சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி ஒருவரை வைத்து பேட்டி நாடகம் நடத்தினார். அதையொட்டி நீட் தேர்வின் தகுதி, தரம் குறித்து மருத்துவர். சென் பாலன் பதிவிட்ட ட்வீட்களை தொகுத்தளிக்கிறோம்.

000

Percentage vs Percentile 

இரண்டுமே பார்க்க ஒன்று போல் இருந்தாலும் percentageக்கும் percentileக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள்.

இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. 50 தான்.

பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது. உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள் = 89, 90,90,91,92, 96,98,98,99.

இதில் 50வது பெர்சண்டைல் = 92. அதாவது 50% மாணவர்கள் 92க்கு மேல் பெற்றுள்ளனர். 50th percentile is 92.  இதே தேர்வு சற்று கடினமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்போது மதிப்பெண்கள் = 18,22, 34, 35, 36, 40,41,41,42 50th percentile is = 36 அதாவது 50% மாணவர்கள் 36க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

எனவே பெர்சண்டைல் என்பது எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்களின் மதிப்பெண்ணைப் பொறுத்து மாறும்.

இப்போது இன்னொரு உதாரணம். முதல் தேர்வில் இந்த ஒன்பது மாணவர்களோடு இன்னொரு பத்து மாணவர்கள் பொழுதுபோக்காக தேர்வு எழுதுகின்றனர் என வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர் என வைத்துக் கொள்வோம். அப்போது அவர்களது மதிப்பெண்கள் உதாரணமாக7, 7,8,9,11,11,12,13,14,15,89, 90,90,91,92, 96,98,98,99.

இப்போது 50th percentile – 15 மதிப்பெண்.

இப்படித்தான் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக 93 மதிப்பெண்கள் மட்டும் வருவது.

பெர்சண்டைல் அடிப்படையிலான தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண்ணை குறைப்பது இப்படித் தான். நமக்கே இது தெரியும் போது, பல ஆயிரம் கோடி புழங்கும் நீட் கோச்சிங் இண்டஸ்டரியில் பொழுதுபோக்கிற்காக பெரிய கும்பல் தேர்வு எழுதி ஸீரோ மதிப்பெண் பெற்று அதன் மூலம் கட் ஆஃப் மதிப்பெண்ணை குறைக்கலாம் என்பது யாருக்கும் தெரியாது என நினைக்கிறீர்களா?

சென்ற பதிவில் நீட் பெர்சண்டைல் பற்றி தெரிந்து கொண்டோம் இல்லையா, இப்போது நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வில், தகுதி மதிப்பெண் பெர்சண்டைல் எவ்வளவு எனத் தெரிந்து கொள்வோம்.

தகுதி மதிப்பெண் பெர்சண்டைல் = zero.

அதாவது தேர்வு எழுதிய அனைவருமே தகுதி.

ஏன் அப்படி அறிவித்தனர்?

ஏனென்றால் தனியார் கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் சேர ஆள் இல்லை. இதனால் தனியார் கல்லூரிகளுக்கு பலகோடி நட்டம் ஆகிறது.

இதேபோல தனியார் மருத்துவகல்லூகளில் MBBS இடங்கள் நிரப்பப்படாத நிலை வரும் போது நீட் தகுதி மதிப்பெண்

பெர்சண்டைல் மேலும் குறைக்கப்படும். ஸீரோ ஆனாலும் ஆச்சரியமில்லை.

நீட் என்றாலே தரம் தான், குவாலிட்டி தான், மெரிட் தான். ஸீரோ தான்.

நன்றி: டாக்டர். சென் பாலன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here