தோழர்களே! வழக்கறிஞர் அருள்மொழி தமது பதிவினில், மதிவதனிக்கு ‘மாலைமுரசு’ நடத்திய ‘மக்கள் மன்ற’த்தில் நடந்த விவாதத்தில், ரவுடி அர்ஜுன் சம்பத் மற்றும் சில சங்கிகள் நடந்து கொண்ட இழிவான செயல்களை வைத்து, இனி எதிர்காலத்தில் அப்படிப்பட்ட பொறுக்கிகளை ஊடகங்கள் அழைப்பதாக இருந்தால், நாம் பங்கேற்க முற்படத் தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில் கருத்துப் பதிவினை செய்துள்ளார். இது சரியானது அல்ல. இன்னும் சொல்லப்போனால், இது காவிக் கூட்டத்திற்கு வெற்றிக் களிப்பை ஈட்டித் தருவதாக அமைந்து விடும். நாம் நமது கருத்துக்களை எந்தெந்த தருணத்திலும் முன்வைத்துப் போராடுவதற்குத் தயாராய் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் ஊடகங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தும் பொழுது இப்படிப்பட்ட பொறுக்கிகளினுடைய தராதரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, இனி அவர்களை அழைக்கக் கூடாது என்று அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். ஏன் ஊடகங்கள் அப்படி எடுப்பதில்லை?

ஏன் என்றால், இப்படிப்பட்ட விபச்சார ஊட கங்களுக்கு, ஒன்றிய அரசின் அரவணைப்புத் தேவைப்படு கிறது. இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் ஒரு MLA சீட்டோ(அதிமுக தயவில் பெற்ற நான்கைத் தவிர) , ஒரு MP சீட்டோ கூடப் பெறத் தகுதியற்ற – துப்புக் கெட்ட அந்த சங்கிகளைக் கண்டு அச்சப்படவும் செய்கிறார்கள். அத்துடன் காசு பணம் சம்பாதிக்க வேண்டிய பிச்சைக்காரத் தனமான கொள்கை களும் இப்படிப்பட்ட விபச்சார ஊடகங்களுக்கு அவசியமா கிறது. இப்படிப்பட்ட ஊடகங்கள் எதற்காக விளம்பரத்திற்காகவும் பணத்திற் காகவும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்?

அப்படிப்பட்ட இழிந்த செயல்களில் ஈடுபடுவோரை தடுத்து நிறுத்த வக்கற்ற நிலைமையில் ஒரு ஊடகம் இருக்குமே ஆகின் அதனுடைய போக்கினை நாம் எவ்வாறு கணக்கில் கொள்வது? அனுமதிப்பது? எனவே எந்த ஊடகம் அழைத்தாலும் நாம் பங்கேற்போம்! இனி நாமும் ஜனநாயக சக்திகளைத் திறட்சியாகத் திரட்டிக் கொண்டு போய் அரங்கத்தில் அமர வைத்து ஊடகத்திற்கும் எச்சரிக்கை விடுவோம்! எதிரிகளுக்கும் அவர்கள் ‘மொழி’-யிலேயே பதிலடி கோடுப்போம்! எச்சரிக்கை விடுப்போம்!!

அதற்கு அடுத்து இதில் காவல்துறை வெறுமனே பார்வையாள ராக இருப்பது நியாயமற்றது! அப்படிப்பட்ட கலவரத்தில் ஈடுபடுபட்டோரை – செருப்பைத் தூக்கிக் காண்பித்தோரை – பாய்ந்து சென்று அடிக்க முற்பட்டோரை ஏன் காவல்துறை கைது செயதிருக்கக் கூடாது? அவர்களும் சங்கி ஆதரவாளராகமாறிவிட்டார் களா? அல்லது அச்சப்படுகிறார்களா? இதில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி மேடை முன் நின்று உரையாற்ற முற்படும் மதிவதனி அவர்களிடம் சென்றுதான் ஏதோ கிசுகிசுக்கிறார்களே தவிர அந்த பொறுக்கி அர்ஜுன் சம்பத் அருகில் எட்டிக் கூட பார்க்கவில்லை. இது இழிவானது.

இப்படிப்பட்ட கயவர்கள் நடமாடுவதை – ரவுடிகள், கொலைகாரர்கள், தில்லுமுல்லுக் காரர்கள் – இப்படிப்பட்டவர்களுடைய செயல்பாட்டை முளையிலேயே கிள்ளி எறிய ‘திராவிட மாடல் அரசு’ என்று பீற்றிக் கொள்ளக்கூடிய அரசு ஏன் முனைய க்கூடாது? ஏன் கண்டும் காணாத விதமாக இருக்கிறது அரசு? இதுவும் வெகுவாக கண்டிக்கத் தக்கது.

குறிப்பாக, இந்த ‘திராவிட மாடல் அரசு’ நடத்திய பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் இந்தப் பொறுக்கி அர்ஜுன் சம்பத்தை ‘மேடையிலேயே அலங்காரமாக’ அமர வைத்தது கேளிக்குரியது! கேவலமானது! இதற்காக தமிழ்நாடு அரசாங்கத்தை வன்மையாகக் கண்டிக்கலாம்.

இதில் அமைச்சர் சேகர் பாபுவின் தான்தோன்றித்தனமான செயலுக்கும், அதற்கு அரசு உடந்தையாக இருந்திருக்குமேயானால் அரசுக்கும், நமது பலமான கண்டனத்தைத் பதிவு செய்வோம்!

இவ்வளவு களபேரத்திற்கிடையில் இம்மியளவும் அச்சமின்றி, மிகத் துணிச்சலாக மேடைமீது நின்று “நான் கோழை இல்லையடா; வந்து பாருடா… ” என்று கம்பீரம் காட்டிய, திராவிடர் கழக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனிக்கு நமது புரட்சிகரமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பதிவு செய்வோம்!

இதற்கு முன்பு பேராசிரியர் நன்னன் மூலமாக இந்த எதிரிகளின் மூலவரான ராமகோபாலன் கூட்டத்திற்கு கருத்தியல் ரீதியான செருப்படி கொடுக்கப் பட்டிருக்கிறது! அதற்குப்பின் தோழர் சுந்தரவல்லி செருப்படி கொடுத்துள்ளார்! ஆளூர் ஷாநவாஸ் செருப்படி கொடுத்துள்ளார்!இப்படி பட்டியல் நீளும்! இன்னும் இதனை கம்பீர மாகத் தொடர்வோம்!

எது எப்படியோ, பார்க்கலாம்… சங்கிகளா? தமிழர்களா?– என்று!

காவிப் பாசிசத்தையும், அவர்களின் மூலவர்களான கார்ப்பரேட் பாசிசத்தையும் ஒருசேரப் புதைகுழியில் தள்ள உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து களம் காண்போம்!

  • கார்ப்பரேட் -காவிப் பாசிசத்தை வீழ்த்துவோம்!
  • ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்!

எழில்மாறன்

1 COMMENT

  1. இது பெரியார் மண்..
    திராவிட மண்..
    காவிகளால் எதுவும் செய்ய முடியாது.
    என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தான்..
    . இந்த பார்ப்பன அடிமை சங்கீ எகிறி வருகிறான்

    திராவிட மாடல் அரசு
    திராவிடத்தை அழிக்க துடிக்கும் ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலை, வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவதற்கான வேலையை செய்யாவிட்டால்..
    ஆரியம் அதன் கடமையை செய்யும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here