ர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ மதல் விருபக்சாப்பாவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக 7 கோடியே 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

எம்எல்ஏ மதல் விருபாக்சப்பாவின் மகன் பிரசாந்த் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் (BWSSB)தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார். பாஜக எம்.எல்.ஏ. மதல் விருபக்சாப்பா மைசூர் சாண்டல் சோப்பு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். சோப்பு – டிடர்ஜென்ட் துறைக்கு தேவையான ரசாயன பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் டெண்டர் மூலமாக விடப்படுவது வழக்கம். இந்த டெண்டர் தொடர்பாக 81 லட்சம் ரூபாயை ஒப்பந்ததாரரிடம் எம்.எல்.ஏ மகன் பிரசாந்த் லஞ்சமாக கேட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள விருபக்சப்பாவின் அலுவலகத்தில் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக்ஆயுக்தாவிடம் கையும் களவுமாக சிக்கினார்.

மேலும் விருபக்சாப்பாவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 7 கோடியே 22 லட்சம் பணமும், பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும், வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ”சிக்கிய பணத்திற்கும் தன் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லை. இருந்தாலும், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன்” என அறிவித்துள்ளார்.

கீழே விழுந்தாலும்  மீசையில் மண் ஒட்டவில்லை கதையாய் “ஊழலில் ஈடுபடும் எவரையும், கட்சி வேறுபாடின்றி, எங்கள் அரசு காப்பாற்றாது.  பிடிபட்ட பணம் குறித்து விசாரணை நடத்தப்படும். மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு காங்கிரசு அரசால் மூடப்பட்டது.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மீண்டும் தொடங்கினோம்.” என கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையா  சவடால் அடித்துள்ளார். நியாயமாய் இவரும் ராஜினாமா செய்திருக்கவேண்டும். செய்யவில்லை.

கர்நாடகாவில் சட்டசபைக்கான தேர்தல் நெருங்குகிறது. ஏற்கனவே பா.ஜ.க. மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் பலர் ஊழல் புகார்களில் சிக்கி இருக்கும் பொழுது,  இந்த  ஊழலாலும் பா.ஜ.கவின் பெயர் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போயிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here