பாஜக நியமித்த இந்துக்களின் நிர்வாகத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் ரூ.200 கோடி ஊழல்!
இப்படிப்பட்ட முறைகேடுகள் எதுவும் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்தான் கோயில்கள் இருக்க வேண்டும் என்று நேர்மையானவர்கள் அனைவரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

யோத்தி பாபர் மசூதியை “தேசிய அவமானம்” என்று கூறி இந்து மதவெறியூட்டி, கலவரங்கள் செய்தது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்ததன் வழியாக மசூதியை இடித்து பிறகு கட்டப்பட்ட “தேசிய நாயகன்” ராமனின் கோவிலில் ரூ 200 கோடி ஊழல் நடந்துள்ளது.

அயோத்தியின் ராமர் கோவில் Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust
என்ற அறக்கட்டளையின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளை 2019 ஆம் ஆண்டு டெல்லி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசால் அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அவற்றில் 12 பேர் மோடி அரசால் பரிந்துரைக்கப்பட்டவர்கள். பாசிச பாஜக அரசால் அமைக்கப்பட்ட இந்த அறக்கட்டளை மத்திய மாநில அரசுகளால் கட்டுப்படுத்தப்படாத தன்னாட்சி (autonomous) உரிமை பெற்றது.

எனவே அறக்கட்டளை குறித்து, அதாவது இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்தவித தகவலையும் பெற முடியாது என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் தான் ராமர் கோவிலுக்கு, தேசிய நாயகனான கோதண்ட ராமனுக்கு பக்தர்கள் கொடுத்த நன்கொடை, உண்டியலில் போட்ட காணிக்கை சுமார் 200 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து பாசிச பாஜக அரசால் தற்பொழுது விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் முறைகேடுகள் நடப்பதெல்லாம் சாதாரண விசயம் இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்று சிலர் நினைக்கலாம். அப்படி நினைக்கும் வாசகர்கள் தமிழகத்தில் “இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இந்து கோயில்கள் இருக்கக் கூடாது அதை இந்துக்களிடமே ஒப்படைத்து விட வேண்டும்” என்று பல ஆண்டு காலமாக ஆர்எஸ்எஸ் – பாஜகவினர் கூக்குரலிட்டு வருவதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அரசின் கட்டுப்பாட்டில் இந்துக் கோயில்கள் இருந்தால் கோயில் சொத்துக்கள் திருடப்படும் என்றும் இந்துக்களிடமே அதை ஒப்படைத்தால் தான் கோவிலை சிறப்பாக நிர்வகிக்க முடியும், ஊழல் நடக்காமல் தடுக்க முடியும் என்றும் சங்கிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். சங்கிகளின் இந்த கூற்று எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை சிதம்பரம் நடராஜர் கோயில் விசயத்தின் மூலமாக அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் – நிர்வாகத்தில் உள்ளது. இந்த தீட்சிதர்கள் கோயிலுக்கு வரும் பெண்களின் கழுத்தில் உள்ள நகைகளை திருடுவது, கோவிலில் உள்ள தங்க நகைகளை திருடுவது என்பதை தங்களது வழக்கமாக கொண்டிருந்தனர். கோவில் நிலங்களை போலி ஆவணங்களை தயாரித்து முறைகேடாக விற்றுள்ளனர். அதுமட்டுமின்றி கோவிலுக்குள்ளேயே தீட்சிதர்கள் பெண்ணை கொன்று கோயிலுக்குள் உள்ள குளத்தில் வீசியுள்ளனர். இதுகுறித்து பலர் வழக்கு கொடுத்தும் அது உரிய முறையில் விசாரிக்கப்படாமல் ஊத்தி மூடப்பட்டுள்ளது உலகறிந்த உண்மை.

அதுமட்டுமின்றி தீட்சிதர்கள் கோயிலில் உண்டியல் வைத்து காணிக்கை பெறுவதோ அந்தக் காணிக்கைகளை முறையாக கணக்கு வைத்து மக்களுக்கு கூறுவதோ இல்லை. “எங்களின் (தீட்சிதர்களின்) அர்ச்சனை தட்டில் விழும் பணம் கோவிலை பராமரிப்பதற்கு கூட போதுமானதாக இல்லை. நாங்கள் வறுமையில் இருக்கிறோம்” என்று தீட்சிதர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்; கூறி வருகின்றனர்.

ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயில் 2009 ஆம் ஆண்டில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகு அந்தக் கோயிலில் அரசாங்கத்தால் உண்டியல் வைக்கப்பட்டு கோவிலின் நன்கொடைகள் முறையாக கணக்கு வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை கிடைக்கிறது; இந்த நன்கொடையை தீட்சிதர்கள் அதுநாள் வரையிலும் கொள்ளை அடித்து வந்துள்ளனர் என்ற விவரம் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.

படிக்க:

 சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களைக் கைப்பற்றி அதில் பாடுபட்ட உழைக்கும் மக்களுக்கே பிரித்துக் கொடு!

 அரசே, அறநிலையத்துறையை காப்பாற்று! அறநிலையத்துறையே, கோவில்களை காப்பாற்று!!

இந்திய அரசு துறைகளில் தீட்சிதர்களுக்கு உள்ள செல்வாக்கு காரணமாக இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோயில் மீண்டும் தீட்சிதர்களின் கைக்கே சென்று விட்டது. தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் இப்பொழுது ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது; எவ்வளவு செலவாகிறது; எவ்வளவு மீதம்? என்ற எந்த விபரமும் மக்களுக்கு அறிவிக்கப்படுவது இல்லை. தற்பொழுது கோவில் வருமானம் அனைத்தும் தீட்சிதர்களின் வாய்க்குள் சென்று கொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட முறைகேடுகள் எதுவும் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்தான் கோயில்கள் இருக்க வேண்டும் என்று நேர்மையானவர்கள் அனைவரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் சங்கிகளும் சங்கிகளின் ஆதரவாளர்களும் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையை கலைத்து விட வேண்டும் கோயில்களை இந்துக்களின் கைகளில் ஒப்படைத்து விட வேண்டும் என்று தொடர்ந்து கூக்குரலிட்டு வருகின்றனர்.

“கோயில்களை இந்துக்களின் கட்டுப்பாட்டில் கொடுக்க வேண்டும்” என்று சங்கிகள் கூறுவதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? கோயிலை ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினருக்கு நெருக்கமான பார்ப்பனர்களின் ஆதிக்க சாதியினரின் கைகளில் கொடுக்க வேண்டும். கோயிலின் சொத்துக்களை, கோவிலின் வருமானத்தை இவர்கள் கொள்ளை அடிப்பதற்கு வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். அதேசமயம் அப்பாவி இந்துக்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் இந்துக்களின் கைகளில் கோவிலை ஒப்படைக்க வேண்டும் என்று சங்கிகள் தொடர்ந்து கதறிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் தொடர்ந்து கூறி வருகிறோம்.

நாம் இவ்வளவு கூறிய போதும், சங்கிகளின் வார்த்தைகளை நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி இந்துக்களின் முகத்தில் அறைவது போன்று அயோத்தி ராமர் கோவிலில் நடந்துள்ள முறைகேடு இப்பொழுது வெச்சத்திற்கு வந்துள்ளது.

இனியாவது அப்பாவி இந்துக்கள் திருந்தட்டும்! சங்கிகளின் அயோக்கியத்தனங்களுக்கு எதிராக கிளர்ந்து எழட்டும்!!

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here