தந்தை பெரியாரின் இறுதிக்கால நேர்முக உதவியாளராக பணியாற்றி விட்டு 1973 அக்டோபர் 21 இல் அரசுப் பணியில் சேர்ந்திட என்னை வழி அனுப்பி வைத்தார் தந்தை பெரியார். அன்றைய ‘உண்மை’ பத்திரிக்கை ஆசிரியர் புலவர் இமயவரம்பன் உடன் இருந்தார்.
நான், ‘அரசுப் பணி எனக்கு தேவையில்லை; அய்யாவுடனேயே பொது வாழ்க்கையில் தொடர்கிறேன்’ என நான் கூறிய பொழுது தந்தை பெரியார் இப்படிச் சொன்னார்:
‘எனது உழைப்பு என்பது நமது பிள்ளைகள் அரசு பணிக்குச் செல்ல வேண்டும்; அதிகாரிகளாக வரவேண்டும்; பார்ப்பனர்களுக்கு எதிராக நாம் அனைத்து துறைகளிலும் தடம் பதிக்க வேண்டும்; நானும் நாள் கணக்கிலா? அல்லது மாதக் கணக்கிலா? என்ற இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டேன்;
எனக்கு உதவிக்கு இருக்கக்கூடிய நபர்களை வைத்து பார்த்துக் கொள்ளலாம்; அல்லது தேவைப்பட்டால் வேறு நபர்களை அமர்த்திக் கொள்ளலாம்; நீங்கள் கிடைத்த அரசுப் பணியை நழுவ விடாமல் உடனே சென்று பணியில் அமருங்கள்’ – எனக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார் தந்தை பெரியார்.
அவர் குறிப்பிட்டுச் சொன்னதைப் போலவே, தந்தை பெரியாரை விட்டு நான் விடைபெற்றுச் சென்ற சரியாக 64 வது நாளில், 1973 டிசம்பர் 24-ல் தந்தை பெரியார் தமது 95-வது வயதில் மரணத்தைத் தழுவினார். ஆம், அவரது நெடும் பயணத்தை நிறுத்திக் கொண்டார்.
ஈரோட்டில் கூலி நிலையில் இருந்து உழைப்பால் உயர்ந்து பெரும் வணிகராகவும், பணக்காரராகவும் உருவெடுத்த வெங்கடப்ப (நாயக்கர்), சின்னதாயம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் பிறந்தவரே ஈ.வெ.ராமசாமி எனும் தந்தை பெரியார். நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாதிருந்த அவரது பெற்றோருக்கு பெரியாரின் அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி 1877 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். அதற்குப் பின் தந்தை பெரியார் பிறந்தார். அதன் பிறகு அவரது சகோதரிகள் பொன்னுத்தாயம்மாள் இரண்டு ஆண்டுகள் கழித்தும், இவருக்கு பின்னால் 10 ஆண்டுகள் கழித்து திருமதி கண்ணம்மாள் பிறந்தார். இவர்தான் தந்தை பெரியாரின் பல கட்டப் போராட்டங்களில் தோள் கொடுத்து நின்றவர். குறிப்பாக வைக்கம் போராட்டத்தில் சிறை ஏகியவர்.

அவரது கல்வி நிலை மிகவும் வேடிக்கையானது மட்டுமல்ல; வினோதமானதும்கூட. அவரே இப்படிக் கூறுகிறார்:
“நான் என்னுடைய ஒன்பதாவது, பத்தாவது வயதிற்கு மேல் எந்த பள்ளிக்கூடத்திலும் வாசித்தவனும் அல்ல; அந்தப் பத்து வயதிற்கு உட்பட்ட காலத்திலும், என் பெற்றோர்கள் என்னை பள்ளிக்கு அனுப்பிய காரணம் எல்லாம், நான் வீட்டில் இருப்பவர்களுக்குத் தொல்லை விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டு, ஓர் இடத்தில் என்னை காவலில் வைப்பதற்காகவே” என்று அவரே பதிவிட்டுள்ளார்.
இது நமக்கு வேடிக்கையாகப்படவில்லையா?
ஆக, ஆரம்பக் கல்வியைக் கூட முழுமையாக படிக்காத தந்தை பெரியார் தான் தமிழ்நாட்டில் மாபெரும் சமூக சீர்திருத்தப் புரட்சியை நிகழ்த்திக் காண்பித்து விட்டுச் சென்றார்.
இன்றைய காலத்திலேயே இந்தியாவில் ஆர் எஸ் எஸ்- பாஜக- இந்துத்துவ- பாசிச காவிக் கூட்டம் தலைவிரித்தாடி, ஒற்றைச் சர்வாதிகாரத்தின் கீழ் நாட்டை நிலை நிறுத்த முற்பட்டுக் கொண்டிருக்கின்ற கோரத்தாண்டவ ரத்தக் களரிகளை ஏற்படுத்தும் கொலைகார நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.
வடநாட்டில் மட்டும் இந்தத் தில்லாலங்கடி கோரத்தாண்டவங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த இந்த ஈனர்கள் தற்போது பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தில் வட்டமிட ஆரம்பித்துள்ளனர்.
இன்றைய நிலையிலேயே சனாதன பார்ப்பன கூட்டம் இந்த ஆட்டம் போடுகிறது என்றால் தந்தை பெரியார் காலத்தில் எப்படிப்பட்ட கொடுமைகளைச் சந்தித்து இருப்பார்? அதற்காக எத்தனை? எத்தனை? போராட்டங்களை முன்னெடுத்திருப்பார்? எவ்வளவு ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் சந்தித்திருப்பார்? எத்தனை கல்லடிகளையும், சொல்லடிகளையும், செருப்பு வீச்சுக்களையும், மலம் அடைத்த முட்டை ஓட்டினை முகத்தில் வீசிய கொடுமைகளையும் சந்தித்திருப்பார்? சொல்லி மாளாது; சொல்லி மாளாது!
காங்கிரஸ், நீதிக்கட்சி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் எனப் பயணப்பட்ட தமது நெடும் பயணம் குறித்து விவரிக்க வேண்டும் என்று சொன்னால் தனி ஒரு நூலாகத் தான் வெளியிட முடியும்.
காஞ்சிபுரத்தில் தந்தை பெரியாரின் முயற்சியால் பார்ப்பனர் அல்லாதார் மாநாடு அவ்வமைப்பின் தலைவர் கோவை டி.ஏ.ராமலிங்கம் (செட்டியார்) தலைமையில் நடைபெற்றது. அவரைத் தலைமை தாங்க, தந்தை பெரியார் முன்மொழிந்து அழைத்த பொழுது இவ்வாறு கூறினார்:

“தேசத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமேயாகும். இவ்வாறு பிரிவினை இல்லை என்று எவ்வளவு தான் மூடி வைத்த போதிலும் காங்கிரசிலும் கூட இத்தகைய பேதம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. பிராமணர், பிராமணர் அல்லாதார் பிரிவினை இல்லை என்பது உடலில் உள்ள புண்ணை மூடி வைத்து அழுக விடுவதற்கு ஒப்பாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து, உடல்நலத்தை கெடுக்கும் புண்ணை ஆற்ற முயல்வதே பொதுநோக்குடைய அறிஞர்களின் கடமையாகும்…” என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் வேரூன்றியிருந்த ஆரிய பார்ப்பனர்களின் கபட வேடங்களையும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் மீது சனாதனப் பார்ப்பனர்கள் தொடுத்த யுத்தங்களையும், உரிமைப் பறிப்புகளையும் பல்வேறு தளங்களில் நின்று போராடியவர் தந்தை பெரியார்!
ஆரியப் பார்ப்பனர் ராஜ கோபாலச்சாரியின் பல்வேறு விதமான அரசியல் அயோக்கியத்தனங்களை உணர்ந்து “பார்ப்பனர்கள் எப்பொழுதும் தங்கள் வகுப்பு நலத்தையே தான் நாடுவார்கள்” என்று தோளுரித்தார் தந்தை பெரியார். அக்காலக் கட்டத்தில் சர் பி.டி.தியாகராயர் “அரசியலில் பார்ப்பனர்களை ஒருபொழுதும் நம்பி விடாதீர்கள்” என்று அவருமே தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
சாதி தீண்டாமை ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்குதல், அய்யா வைகுண்டரைத் தொடர்ந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோல் சீலைப் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், இட ஒதுக்கீடுப் போராட்டம், வைக்கம் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம், ஹிந்தி – சமஸ்கிருத எதிர்ப்பு போராட்டம், ராமனுக்கு எதிரான ராவண லீலா போராட்டம்…. இப்படியாக அவர் நடத்திய போராட்டங்கள்; நடத்திட்ட மாநாடுகள்; நடத்திட்ட பொது கூட்டங்கள்; நடத்திட்ட வீதிப் பிரச்சாரங்கள் பட்டியலிட முடியாதது. அவர் வெளியிட்ட நூல்களும் கணக்கில் அடங்காது. சூத்திர பஞ்சம மக்களை அவர் மேல் தூக்கிவிட பட்ட பாடு அளப்பரியது.

இவற்றுக்கெல்லாம் மூல காரணமான ஆரியப் பார்ப்பனியம் அதன் மனுஸ்மிருதி, பகவத் கீதை, கம்ப ராமாயணம், மகாபாரதம் அனைத்தையும் தீயிட்டு பொசுக்க வேண்டும் என்று பிரகடனப்படுத்தினார்.
மாவீரன் பகத்சிங் எழுதிய ‘நான் நாத்திகன் ஆனது ஏன்?’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தியமைக்காக மொழிபெயர்த்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்களும், பதிப்பக உரிமை பெற்றிருந்த தந்தை பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும் சிறைப்பட நேர்ந்த காலமும் பிரிட்டிஷ் காலமாக இருந்தாலும் அது பார்ப்பனீய காலமே!
“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யை முதலில் தமிழில் மொழி பெயர்த்து வெளிக்கொணரக் காரணமாக இருந்தவரும் தந்தை பெரியாரே!
1931-ல் சோவியத் ரஷ்யா சென்று இருந்த பொழுது மூன்று மாதங்கள் தங்கி இருந்த நிலையில் இறுதியில் ஆசான் ஸ்டாலினை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய கொடுமைகளை எல்லாம் தந்தை பெரியார் பிற்காலத்தில் பதிவிட்டு இருக்கிறார். அப்படித் திரும்பியவுடன் தமிழ்நாட்டில் “தோழர்” (Comrade) என்ற சொல்லை தமிழில் அறிமுகப்படுத்தியவரும் தந்தை பெரியாரே!
ரஷ்யாவில் இருந்து திரும்பியவுடன் ஈரோட்டில் சுயமரியாதை இயக்க பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தோழர் மா.சிங்காரவேலருக்கு ஒப்புவிக்கப்பட்ட ஈரோட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு காரணமானவரும் தந்தை பெரியாரே! ஈரோட்டுத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு எங்கும் 145 சமதர்மச் சங்கங்கள் கட்டியவரும் தந்தை பெரியாரே! அத்தனை சங்க கூட்டங்களிலும் கலந்து கொண்டு ஈரோட்டுத் திட்ட விளக்கவுரை ஆற்றிய வரும் தந்தை பெரியாரே!
பெரியாரின் மன உறுதிக்கு ஒரு உதாரணம்!
திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டராக இருந்த பழுத்த அனுபவம் வாய்ந்த ஆர்.எஸ்.மலையப்பன் ஐஏஎஸ் அவர்கள் குளித்தலை தாலுகாவில் நிலம் பயிரிடுவது (நிலச்சுவான்தார் – குடியானவர் தகராறு) சம்மதமாக பிறப்பித்த இரண்டொரு உத்தரவுகளை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததுடன், அவ் விசாரணையில் ஈடுபட்ட இரண்டு பார்ப்பண நீதிபதிகள், இந்த கலெக்டர் தமிழர் என்ற காரணத்தால் எவ்வளவு தாக்கி தமது தீர்ப்பில் எழுத முடியுமோ அவ்வளவும் எழுதி உடனே இவரை அவ்வேளையை விட்டே நீக்கி அனுப்ப வேண்டியது சர்க்காரின் கடமையாகும் என்று கருதப்பட தீர்ப்புரையில் எழுதினார்கள்.
இத்தகைய ‘ஒரு குலத்துக்கொரு நீதி’-யான அநீதி தீர்ப்பை கண்டித்து திருச்சி வாழ் மக்கள் மாபெரும் கண்டனம் எழுப்பினர். இத்தீர்ப்பு கண்டு மனம் மகிழ்ந்த அய்யங்கார் ‘இந்து’ பத்திரிக்கை முன்னேற்பாடு செய்தபடி “சர்க்கார் உடனே இதில் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனே வீட்டுக்கு அனுப்பி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும்” என்று ஓலமிட்டது. அத்தகைய ‘இந்து’ பத்திரிக்கையை அன்றைய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி ஆண்டி தலைமை தாங்கி சுமார் 50,000-க்கும் மேற்பட்ட ‘இந்து’ பத்திரிக்கையை தீயிட்டுப் பொசுக்கினர்.

இந்த நிகழ்ச்சிகளும், இது குறித்த தந்தை பெரியார் அவர்களின் விரிவான பேச்சும் ‘விடுதலை’ ஏட்டில் வெளிவந்தது.
இவை உயர் நீதிமன்றத்தை அவமதித்த செயல் என்று குற்றம் சாட்டி தந்தை பெரியார் மீதும், அன்னை மணியம்மையார் மீதும் (விடுதலை ஆசிரியர் என்ற காரணத்தால்) அரசாங்கம் வழக்குத் தொடர்ந்தது.
இரண்டு பார்ப்பன நீதிபதிகள், ஒரு தமிழர் கலெக்டரை பற்றி எல்லை மீறிய கடுஞ்சொற்கள் அடங்கிய தீர்ப்பை வெளியிட்டு இருக்கின்றனர் என்றும் மற்றொரு ஐயங்கார் அட்வகேட் ஜெனரல் அதாவது சர்க்கார் வக்கீல் கலெக்டர் சார்பில் வாதாட வேண்டிய கடமையைத் செய்யத் தவறி விட்டார் என்றும், இன்னொரு அய்யங்கார் ஏடு ‘இந்து’ – இத்தீர்ப்பை ஆதரித்து குதூகலப் பட்டிருக்கிறது என்றும், இது ஆரியர் – தமிழர் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதே தவிர, நீதியையோ, நிர்வாகத்தையோ, சட்டத்தையோ, அடிப்படையாகக் கொண்ட பிரச்சனை அல்ல வென்றும் தந்தை பெரியார் 4-11-1956 அன்று திருச்சியில் கூடிய மாபெரும் பொதுக்கூட்டத்தில் விளக்கமாக பேசினார்.
எனினும் பெரியார் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
தமக்குப் பதிலளிக்க தந்தை பெரியார் 15 நாட்கள் அவகாசம் கோரினார். நீதிபதிகளும் அவகாசம் வழங்கினர்.
23-04-1957-ஆம் தேதி தந்தை பெரியார் உயர்நீதிமன்றத்தை நோக்கி படுக்கை சகிதமாகப் புறப்பட்டார்.
தான் கொண்டு வந்திருந்த 30 பக்கங்கள் கொண்ட ஸ்டேட்மென்ட்டை நீதிபதிகளின் அனுமதியின் பேரில் உரக்க வாசித்தார்.
படிக்க:
♦ பெரியார் உயிரோடு இருந்திருந்தால்….
♦ பெரியார் சிலை! தம்பிகளும் சங்கிகளும் கதறுவது ஏன்?
அந்த ஸ்டேட்மெண்ட் நீதித்துறை வரலாற்றில் தந்தை பெரியாரின் ‘தமிழர் போராட்ட சாசனம்’ என்றே கூறப்படுகிறது.
இது பற்றிய முழு விவரம் அறிய “நீதி கெட்டது யாரால்?” என்ற 128 பக்க நூலில முழுமையாக விளக்கப் பட்டுள்ளன.
இன்றைக்கும் நன்றியறிதல் என்ற பண்பை மறந்து நாக்கில் நரம்பின்றி பிழைப்புவாத நோக்கில் ஊளையிடும் சீமான் போன்ற போலி தமிழ்த் தேசியவாதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒலித்த பெரியாரின் கர்ஜனையைக் கேளுங்கள்:
“நான் ஏறக்குறைய சுமார் 50 ஆண்டு காலமாகவே பார்ப்பன மேல் சாதி மக்கள் என்பவர்கள் சட்டப்படி, சாஸ்திரத்தின் படி, மதத்தின் படி என்று தாங்கள் அடைந்திருக்கும் வசதியையும், உயர்நிலையையும் பார்ப்பனர் அல்லாத கீழ்மக்கள் நலனுக்குக் கேடாகப் பயன்படுத்தும் வாய்ப்பை ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறேன். என்னுடைய பிரதான ஒரே தொண்டு இதுதான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டும் இதுதான்”
“பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடே ஆகும். ஆதலால் நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்”
“வாயில் – நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய, வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய, புலி புல்லைத் தின்னாது. அதுபோல்தான் பார்ப்பனர்கள் தன்மை. மனுதர்ம சாஸ்திரத்தின் படி, ஒரு பார்ப்பனரல்லாதவன் (சூத்திரன்) ஒரு நாட்டிலே (அதாவது பார்ப்பனர்கள் வாழும் நாட்டிலே) நீதிபதியாகவோ, நிர்வாக அதிகாரியாகவோ, அமைச்சராகவோ, அரசனாகவோ உயர் பதவியாளனாகவோ இருக்கக் கூடாது என்பது தர்மம் ஆகும். அப்படி இருக்க விடக்கூடாது என்பது பார்ப்பன தர்மம் ஆகும். இந்த மனுதர்மம் தான் நீதிபதிகள் கையாளும் இந்து சட்டத்திற்கு மூலதாரமாகும்”
“இந்த நாட்டில் ஜாதி முறை பிரிவு, கீழ் ஜாதி, மேல் ஜாதி இருந்து வருகிறது. ஆட்சியும் ஆதிக்கமும் பெரிதும் மேல் ஜாதிக்குச் சொந்தம். அவர்களிடம் அல்லலும், அவதியும் படுவது கீழ் சாதிக்காரர்களுக்குச் சொந்தம். இது சட்டப்படி, சாஸ்திரப்படி, ‘கடவுள் சிருஷ்டியின்படி’ இந்த நாட்டில் இருந்து வருகிறது. இதை மாற்றுவது தான் எங்கள் முயற்சி. இதற்கு நாங்கள் தக்க விலை கொடுத்தாக வேண்டும். ஆகையால் நீங்கள் கனம் கோர்ட்டார் இஷ்டப்பட்ட விலை போடுங்கள். ஹை கோர்ட் ஆதிக்கம் பார்ப்பனர்களிடமே இருந்து வந்திருக்கிறது. கீழ் சாதிக்காரர்கள் 100-க்கு 90 பேர் உள்ள இந்த நாட்டில், ‘மேல் ஜாதி’ ஜட்ஜுகள் ஏன் 100-க்கு 50, 60, 70 பேர்கள் இருக்கிறார்கள்? கீழ் சாதி ஜட்ஜுக்கள் ஏன் நூத்துக்கு 25 பேர்கள் இருக்கிறார்கள்? இவற்றையெல்லாம் கேட்டால் ‘கன்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்’ குற்றமா?
என்று முழங்கினார் தந்தை பெரியார்.
அன்றைய காலகட்டத்திலேயே பார்ப்பனக் கொடுங்கோன்மையைப் புரிந்து பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக – பார்ப்பன நீதிமன்றத்திற்கு எதிராக கடுமையாக கர்ஜித்தார் தந்தை பெரியார்.

இன்று அதைவிடப் பன்மடங்கு இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பார்ப்பன ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. அல்லது பார்ப்பன அடிவருடிகளாகிப்போன சூத்திர- பஞ்சம ‘ஜந்துகள்’ சுயநல – பிழைப்பாத நோக்கில் காவிக் கூட்டத்தின் காலில் விழுந்து அடியாள் வேலை பார்க்கத் துடிக்கின்றன.
தந்தை பெரியார் காலத்து பார்ப்பன நீதிபதிகள் குறித்த அனைத்து விமர்சனங்களும் இன்று நமது கண் முன் காணும் மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தின் நாயகன் பார்ப்பன நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு முற்றும் முழுதாகப் பொருந்தும் அல்லவா?
ஒருபுறம் மக்களின் வாழ்வாதாரங்களையும் பறித்தெடுத்து அனைத்துத் துறைகளையும் தனியார் மயமாக்கி கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கிறது காவிக் கூட்டம்.
மக்களின் வாழ்வாதார கடும் பிரச்சனைகளை எல்லாம் மடை மாற்றி சாதி – மத வெறி ஊட்டி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அணிசேர்க்கை செய்து நாட்டில் கலவரங்களை உருவாக்கி சர்வாதிகாரத்தில் நிலநாட்ட துடிக்கிறது காவி(லி)க் கும்பல். மதவெறி மூலமாக கொலைபாதகச் செயல்களை அரங்கேற்றத் துடிக்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக- மோகன் பகவத் மோடி – அமித்ஷா கும்பல். அதற்கான வானரப் படைகளையும், பல லட்சம் கோடி பணத்தையும் குவித்து வைத்துக் கொண்டு களமாடுகிறது.
தனது வயிறு நிறைந்தால் போதும்; சேர்த்து வைத்த தனது சொத்து சுகங்களை பாதுகாத்தால் போதும் என்று சில எச்சில் நாய்களாய் போன எடப்பாடி, ஓபிஎஸ், கிருஷ்ணசாமி, அன்புமணி உள்ளிட்ட பல துரோக சூத்திர கும்பல் அவர்களுக்கு எடுபிடி வேலை செய்கிறது. பஞ்சமர்களாய்ப் பிறந்த எல்.முருகன், ராமலிங்கம், துரைசாமி இன்னும் பல நூறு ஜந்துகள் பிழைப்புவாதத்திற்காகவே தமது மக்களை காட்டி கொடுத்து அடியாள் வேலை செய்கிறார்கள்.
படிக்க:
♦ சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு! – தொடர் கட்டுரை
♦ சனாதன எதிர்ப்பு, ஆதரவு நீங்கள் எந்த பக்கம்?
சூத்திர ஜென்மங்களான ஜாதி வெறியன் நயினார் நாகேந்திரன், ஆட்டுக்குட்டி அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தர்ராஜன், கரு. நாகராஜன், அர்ஜுன் சம்பத், ராம சீனிவாசன் போன்ற பொறுக்கித்தின்னிகள் மக்கள் நலனை புறந்தள்ளிவிட்டு மதவெறி கலவரத்தின் நாயகர்களாக தங்களை எஜமானர்களுக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் — பதவி நாற்காலிகளை அபகரித்திட.
ஒருபுறம் எச்ச ராஜா, குருமூர்த்தி, பாண்டே, நாராயணன் திருப்பதி, கே.டி.ராகவன், காடேஸ்வரா சுப்பிரமணியன் போன்ற பார்ப்பனக் கழுகுகள் தமக்குப் பின்னால் ஏமாந்த கூட்டமான சூத்திர- பஞ்சமர்கள் அணி திரண்டு உள்ளனர் என்ற தைரியத்தில் திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள சிக்கந்தர் பாஷா தர்காவை, பாபர் மசூதி போல் இடித்துத் தள்ள திட்டமிடுகின்றனர்.
நிலைமை இவ்வளவு கடுமையாக இருக்கின்றபோது, ஆளுக்காள், கட்சிக்கு கட்சி கூட்டணி பற்றி பேசுவது; வாக்கு விகிதம் பற்றி கணக்கிடுவது; எப்படி இடங்களைப் பகிர்ந்து கொள்வது…
இவற்றில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பிழைப்புவாதிகள்.
ஆனால் மோடி – அமித்ஷா – மோகன் பகவத் கும்பலோ தனக்கு பக்கபலமாக உருவாக்கி வைத்துள்ள தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், CBI,ED, IT, ஐஏஎஸ், ஐபிஎஸ், ராணுவம், போலீஸ் அனைத்தையும் காவிமயமாக்கிக் கொண்டு திருட்டுத் தேர்தல் மூலமாக, தில்லு முல்லு மோசடிகள் மூலமாக, EVM, VVPAT , உள்ளிட்ட வாக்கு இயந்திரங்கள் மூலமாக பல்வேறு மோசடிகளைச் செய்து, மகராஷ்டிரா, அரியானா, பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் களம் ஆடத் தயார் நிலையில் உள்ளனர். அதனை வெளிப்படையாகவே அமித்ஷா அறிவித்துவிட்டார்.
இத்தகு சூழலில் தந்தை பெரியாரின் சனாதனப் பார்ப்பனியத்திற்கு எதிரான வழிமுறைகளும், வழிகாட்டுதல்களும் முன்னிலும் இன்று கூடுதலான தேவையை வலியுறுத்துகிறது.
எனவே, தந்தை பெரியாரின் நினைவு நாளில் நாம் இவ்வாறு சூளுரைப்போம்:
கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவோம்!
ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்!
ஆர் எஸ் எஸ் – பாஜக – அதிமுக மற்றும் அதன் ஒட்டுண்ணிகள்,பாமக, கிருஷ்ணசாமி போன்றோரின் தலித்திய அமைப்புகள், அப்பட்டமான பிழைப்பு வாதிகள் சீமான், நடிகர் விஜய் போன்றோரை தனிமைப்படுத்தி அணிகளை வென்றெடுத்து நாட்டில் புதியதோர் சமூகம் அமைக்க படை திரட்டுவோம்!
பார்ப்பன நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எச்ச ராஜா, குருமூர்த்தி, பாண்டே போன்றோரின் முகத்திரையை கிழித்துத் தொங்க விடுவோம்! அவர்கள் யார்? யாருக்கானவர்கள் என்பதை உலகுக்கு அறிவிப்போம்!
சனாதன பார்ப்பனியக் ‘கொள்கை’களுக்கு சமாதி கட்டுவோம்!
- எழில்மாறன்






