குல்லாவும், தாடியும் வெச்சிருந்தா அடிப்பீங்களா?
இம்ரானின் பயணத் தோழரான அடில் கானும் தாக்கப்பட்டு, அவரது மொபைல் போனை பறித்துள்ளார்கள். இம்ரானின் ₹32,000 மதிப்புள்ள மொபைல் போன் மற்றும் ₹12,000 ரொக்கத்தையும் அக்கும்பல் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

முகமது இம்ரான் என்ற இஸ்லாமியர் மும்பைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ரயில்வே ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரின் மத அடையாளங்கள் மூலம் தாக்கியுள்ளார்கள். இதன் காரணமாக பொதுவெளியில் பயணிக்கும் இஸ்லாமியர்களிடம் கவலையும் அச்சமும் உருவாகியுள்ளது.

பாதிப்புக்குள்ளான முகமது இம்ரான், காக்கிநாடா சீரடி ரயிலில் மகாராஷ்டிராவின் லத்தூருக்கு பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் ஹைதராபாத்தில் உள்ள ஹதீஸ் பேட் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் பரவிய காணொளியில் பார்க்க முடிந்தது.

தாக்குதலுக்குள்ளான இம்ரானின் கூற்றுப்படி, அந்த கும்பல் ரயிலுக்குள் ஏற்கனவே ஒருவரை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது. அவர்கள் ஏன் அந்த மனிதரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்க இம்ரான் முயன்றுள்ளார். அதன்பின் அக்கும்பல் ஏற்கனவே தாக்கிக் கொண்டிருந்தவரை விட்டுவிட்டு இம்ரானை தாக்க ஆரம்பித்துள்ளார்கள்.

இம்ரானின் மத அடையாளங்களை (தாடியும், குல்லாவும்) அந்த கும்பல் கவனித்த பின்புதான் 20 பேர் கொண்ட கும்பல் இம்ரானை ரத்தம் வரும் வரை தாக்கியுள்ளது. ‘தன்னுடைய மத அடையாளங்கள் தான் தன்னை தாக்க தூண்டியிருக்கிறது’ என இம்ரான் கூறுகிறார். இந்த தாக்குதலின் போது இம்ரானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பரையும் அக்கும்பல் தாக்கியுள்ளது. இதனால் அந்த ரயில் பெட்டியே “கலவரம் நடக்கும் இடம் போல காட்சி அளித்ததாக” இம்ரான் கூறுகிறார்.

இம்ரானின் பயணத் தோழரான அடில் கானும் தாக்கப்பட்டு, அவரது மொபைல் போனை பறித்துள்ளார்கள். இம்ரானின் ₹32,000 மதிப்புள்ள மொபைல் போன் மற்றும் ₹12,000 ரொக்கத்தையும் அக்கும்பல் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கை இதுவரை நடந்ததாக காவல்துறை தரப்பில் இன்னும் அறிக்கைகள் விடவில்லை. தாக்குதல் நடந்த பொழுது இரயில் டிடியி-டம் உதவிக் கேட்டும் கிடைக்கவில்லை என்கிறார் இம்ரான். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான பின்னரே பரவலான விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இந்த சம்பவம், மத அடிப்படையில் குறிவைத்து நடைபெறும் வன்முறைகள் அதிகரித்து வருவதை கவலைக்கிடமான முறையில் வெளிப்படுத்துகிறது. சமீபத்தில், “வந்தே மாதரம்”,“ஜெய் ஸ்ரீ ராம்” போன்ற முழக்கங்களுடன் முஸ்லிம் பெண்கள் குறிவைக்கப்படுவது மற்றும் பிற பயணிகள் உடல்ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


படிக்க:

 பாசிச பயங்கரவாதிகள் கையில் இந்தியா! துப்பாக்கி தோட்டா, சிறைச்சாலை இரண்டில் ஒன்றை கொடுக்கப் பிறக்கும் புத்தாண்டு 2026.

 கன்வார் யாத்திரை மூலம் இஸ்லாமிய மத வெறுப்பை வளர்க்கும் பாஜக அரசுகள்!


சமீபத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா துப்பாக்கியை பயன்படுத்தும் வீடியோவுடன், “No Mercy” என்ற தலைப்பில் இரண்டு முஸ்லிம் ஆண்களின் படங்களை நோக்கி அவர் சுடுவது போல AI மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் சங்கிகளால் பரப்பப்பட்டது. வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் மாநிலத் தேர்தலுக்கு முன், மாநில மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரங்களை சர்மா முன்னெடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

1 கோடியே 20 லட்சம் இஸ்லாமியர்கள் வாழும் அசாமில் சமீபத்திய காலங்களில் அவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை அசாம் பாஜக அரசே செய்கிறது. “ரிக்ஷாவில் குறைந்த கட்டணம் செலுத்துவது போன்ற சிறிய செயல்களில் கூட அவர்கள் 5 ரூபாய் கேட்டால், 4 ரூபாய் கொடுங்கள். அவர்கள் (முஸ்லிம்கள்) கஷ்டங்களை எதிர்கொண்டால் மட்டுமே அசாமில் இருந்து வெளியேறுவார்கள்,” என்று அசாம் பாஜக முதல்வர் கூறுகிறார்.

செப்டம்பரில், அசாம் பாஜக, “பாஜக இல்லாத அசாம்” என்ற தலைப்பில் AI யால் (செயற்கை நுண்ணறிவு) உருவாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது. இது முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட மாநிலத்தை சித்தரித்தது. அவர்களை “சட்டவிரோத குடியேறிகள்” என்று சித்தரித்தது.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் குறைந்தது 1318 வெறுப்பு பேச்சுக்கள் பேசப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதில் 98 சதவீதம் இஸ்லாமியர்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்திய பிரதமர் பாசிச மோடி மற்றும் அவரது சகாக்கள் பேச்சும் இதில் அடக்கம்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக தலைவர்களே இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்து வெறுப்பை உமிழும் போது தொண்டர்கள், “எல்லாத்தையும் தலைவன் பார்த்துக் கொள்வான்ப்பா” என இஸ்லாமியர்களை தாக்குவதும், கொலை செய்வதும் என்று மதவெறி மிருகங்களாக வளர்க்கப்படுகிறார்கள். இதனை வேடிக்கை பார்ப்பதா இல்லை பாதிக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு துணை நிற்பதா என்பதை நாம் உடனடியாக முடிவு செய்ய வேண்டும்.

  • சுவாதி

1 COMMENT

  1. குல்லாவும் தாடியும் வச்சிருந்த அடிப்பீங்களா!

    வடமாநிலத்தில் ரயிலில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம் தலையில் குல்லா தாடி வைத்திருந்ததை பார்த்து 20 பேர் கொண்ட ரவுடி கும்பல்கள் அடித்து துன்புறுத்தி உள்ளார்கள்

    வட மாநிலங்களில் அதிகரித்து வரும் மத மோதல்கள் வன்முறைகள் இதற்கு முடிவு கட்ட மக்கள் களத்தில் இறக்க வேண்டும் ஒருவரை தாக்கும் பொழுது அந்த இடத்தில் உள்ள மற்றவர்களும் சூழ்ந்து கொண்டு ரவுடிகளை அடித்து விரட்ட துணிவோடு களம் காண வேண்டும்

    ஆர்எஸ்எஸ் பாஜக சங்கீ கும்பல் தங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக எப்படிப்பட்ட இழி செயலையும் செய்வார்கள் அவர்களை நடுத்தெருவிலே அம்பலப்படுத்தி விழுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here