அருந்ததியர் மக்களுக்கு சுடுகாடு அமைத்துக் கொடு! – கரூர் மகஇக

அதிகாரிகள் வருகிறார்கள் பார்க்கிறார்கள் போய்விடுகிறார்கள் என்ன செய்வது என்று அறியாத அருந்ததியர் மக்கள் கரூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பு தோழரிடம் முறையிட்டார்கள்.

ரூர் நிர்வாகமே! சுதந்திரம் கண்டு 77 ஆண்டுகளாகியும் இந்துமத பார்ப்பன சூழ்ச்சித்தால் சாதி எனும் அடுக்கி வைத்த மூட்டைகளில் அடி மூட்டையாக வாழும் அருந்ததியர் மக்கள்  வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் போல்
வாழ்ந்து வருகிறார்கள்.

வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் போல் கருதுகிறது இந்து சமூகம். இதனால் தான் இறந்த பிறகும் இறந்த உடலை புதைப்பதற்கு கூட இடமில்லாமல் தவிக்கும் நிலைமை அருந்ததியர் மக்கள் இதோ இந்த அவல நிலைமை பல கிராமங்களில் உள்ளது.

குறிப்பாக கரூர் மாவட்டம் மன்மங்களா தாலுக்கா பல்லாபாளையத்தில் 30 குடும்பங்கள் 40 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக நான்கு சமூக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதில் மூன்று சமூக மக்களுக்கு பாதுகாப்பான சுடுகாடும் சுற்றுச்சுவர் எடுத்து கேட்டை போட்டு பூட்டி வைத்திருக்கிறார்கள்.

இதில் அருந்ததியர் சமூகத்திற்கு மட்டும் இறந்து விட்டால் சுடுகாடு இல்லை என்று ராஜா வாய்க்கால் அக்கரையில் புதைக்கும் அவலம் உள்ளது. ஆற்றில் வெள்ளம் வந்து விட்டால் தண்ணீரில் இறங்கி அக்கறையில் தான் புதைக்க வேண்டுமா? என்ற அவல நிலைமை புதைத்த பிறகு அதிகம் தண்ணீர் வந்தால் புதைத்த பிணமும் அடித்துக் கொண்டு போய்விடுகிறது. இந்த சூழலில் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் சுடுகாட்டுக்கான எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

சுடுகாடு வேண்டி கரூர் ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர்கள் மற்றும் பொதுமக்கள்.

அதிகாரிகள் வருகிறார்கள், பார்க்கிறார்கள், போய்விடுகிறார்கள்
என்ன செய்வது என்று அறியாத அருந்ததியர் மக்கள் கரூரில்
மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பு தோழரிடம் முறையிட்டார்கள். அதைக் கேட்டறிந்த தோழர்கள்  மாவட்டச் செயலாளர் தோழர் அரசப்பன்
சட்ட ஆலோசகர் தோழர் ஜெகதீசன்
மாவட்ட பொருளாளர் தோழர் ரமேஷ்
ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்களை திரட்டி 23.12.2024 மக்கள் கலை இலக்கியக் கழக அமைப்பு சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் மயான சுடுகாடு அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள்.

இன்றைய தேதி வரை கொடுத்த மனுவுக்கு எந்த பதிலும்  இல்லாததால் கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் முதலில் சுவரொட்டி ஒட்டுவதாக பிறகு பொதுமக்களை திரட்டி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஆலோசித்து வருகிறார்கள். இந்த நிலைமையை தவிர்க்க வேண்டும் என்றால் கரூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடத்தை தேர்வு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம் கரூர் மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here