நீட் – போராட்டமே தீர்வு!

0
நீட் போன்ற தேர்வுகளை உருவாக்கி பெரும் லாபம் சம்பாதிக்கும் முதல் பத்தொண்பது நிறுவனங்களின் லிஸ்ட். இவர்களைப்போல இன்னும் நூறு நிறுவனங்கள் சந்தையில் இருக்கலாம். இவர்கள் லாபி டெல்லியில் சிறப்பாக செயல்படுவதால் மத்திய அரசும் பிஜேபியும் நீதிமன்றமும் நீதிபதிகளும் இந்த நிறுவனங்களின் வலையில். பார்ப்பனிய உயர்சாதி நலன் இந்த வணிகத்தோடு
இணைந்து இருப்பதால் இந்த கல்வி வாணிபம் புனிதமாகிவிடுகிறது. கல்வி மறுக்கப்படுகிற வர்க்கங்களால் இந்த அரசியலை புரிந்து கொள்ள ஓரளவு தமிழ்நாட்டில் மட்டுமே முடிகிறது. தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களில்
தேசிய,மாநில கட்சிகள் பிஜேபியோடு ஐக்கியமாக போவதை எப்படி புரிந்து கொள்வீர்கள். காங்கிரஸ்,இடதுசாரிகள்,பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏதாவது ஒரு வழியில் இந்த “தகுதி தேர்வு லாபியை” ஆதரிக்கின்றன. இந்த லட்சனத்தில் தமிழக மாணவர்களின்
நலனுக்கான போராட்டத்தின் முடிவு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. தைப்போராட்டம் போல மொத்த தமிழகமும் கொந்தளித்து எழுந்தால் நமது கல்வி உரிமையை இந்திய பேராதிக்க சக்திகளிடம் இருந்து மீட்கலாம் வேறுவழியில்லை.
list of top Education companies of india
  1. ACE Edutrend Ltd
  2. Arihant Institute Ltd
  3. CAREER Point Ltd
  4. CL Educate Ltd
  5. DMC Education Ltd
  6. Educomp Solutions Ltd
  7. Everonn Education Ltd
  8. Golden crest Education&sServices Ltd
  9. Greycells Education Limited
  10. Humming bird Education Ltd
  11. MT Educare Ltd
  12. Shanti Educational Initiatives Ltd
  13. Siddharth Education services Ltd
  14. Sylph Education Solutions Ltd
  15. Tree house Education Accessories Ltd
  16. Vantage Knowledge Academy Ltd
  17. Virtual Global Education Ltd
  18. VJTF Edu services LTD
  19. Zee Learn Ltd
நன்றி: Umayan Natarajan
முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here