ன்னதான் இருந்தாலும்…
எப்படித்தான் ஆனாலும்…
குழந்தைகளை தேர்வுக்கு அனுப்பி இருக்கணும், அப்படித்தானே?

அசாமில் ஏற்கனவே ஜெயிலை கட்டி வைத்து இஸ்லாமிய மக்களை அடைத்து வைத்து விட்டார்கள்.

சாஹீன்பாகில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றும் விட்டார்கள்.

என் ஆர் சி இப்போதும் கைவிடப்படவில்லை, கணக்கு எடுப்பவர் ‘சந்தேகத்துக்கு உரியவர்’ என்று எழுதி விட்டால் வாழ்க்கை அதோடு முடியும்.

கடைசி நம்பிக்கை ஆன நீதிமன்றங்கள் சிரித்துக்கொண்டே இசுலாமிய மக்களின் கழுத்தை சீவுகின்றன, எதிர்கால ராஜ்யசபா காரட்டுளுக்காக நீதிமான்கள் நாக்குத்தள்ள ஓடுகின்றார்கள்.

படிக்க:

ஹிஜாப் தீர்ப்பு: ஆர்எஸ்எஸ் காவி கும்பல் பிடியில் நீதித்துறை!

உபதேசம் செய்ய முற்படுபவர்களின் முகமூடிகளுக்குள் அசிங்கமாக மறைந்து இருப்பது மேல் சாதீய அபிமானம் அன்றி வேறில்லை. ஒரே ஒரு மெல்லிய கோடு மட்டுமே இவர்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும், எப்போது வேண்டுமானாலும் அதை தாண்டி விடக் கூடும் இவர்கள்! அதுவரை முற்போக்கு, இடதுசாரி என்று பேசிக்கொண்டு இருக்கலாம் முகநூலில்.

இந்தியாவில் தலித்துகளின் உணர்வையும் இசுலாமிய மக்களின் உணர்வையும் அவர்களால் மட்டுமே உணர முடியும், எழுத முடியும் என்று சில தோழர்கள் சொல்லும்போது ‘ஏன் மற்றவர்களால் உணர முடியாதா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கின்றேன்.

உயிர் வாழ்வதே அல்லது உயிரை தக்க வைத்துக்கொள்வதே வாழ்க்கை பிரச்சினை ஆகி விட்ட நிலையில் படிச்சு என்ன மயிரை புடுங்க போறோம் என்னும் நியாயமான ஆவேசத்தில் தேர்வுகளை புறக்கணிக்கும் இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை இந்த முகமூடி முற்போக்காளர்கள் புரிந்துகொள்ள போவதும் இல்லை, புரிந்து இவர்களால் ஆகப்போவதும் ஒன்றும் இல்லை. ஹாட் ஸ்டார், ஓ டி டியில் படங்களை பார்த்துவிட்டு முகநூலில் ஆவேசப்படுவதை தவிர இவர்களால் இதுவரையிலும் ஒன்றும் நடந்துவிடவில்லை.

தலித்துகளின் உணர்வையும் இசுலாமிய மக்களின் உணர்வையும் அவர்களால் மட்டுமே உணர முடியும், எழுத முடியும் என்று அத்தோழர்கள் சொல்வது சரிதான் என்று நம்பத்தக்க அளவில்தான் இங்கே முற்போக்கு முகமூடிகளின் உபதேசக் கூச்சல் பெருங்கூச்சலாக உள்ளது.

கள்ளிக்காட்டில் தனியாளாக பிள்ளை பெற்றுக்கொண்டவளின் வலியை அப்படியே உணர்ந்து கண்ணீர் வடிய எழுத்தில் வடிக்கும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை, உண்மைதான். ஆனால் பிள்ளை பெற்றுக்கொள்வது என்னவோ கடைசியில் பெண்தான் என்ற உண்மை பொய் ஆகாதுதானே. பிள்ளையும் அவளும் பிழைக்கலாம், இருவரில் ஒருவர் பிழைக்கலாம், அல்லது இருவருமே சாகலாம். பிரசவ வாதை அவளுக்குத்தான், எழுதியவனுக்கு அல்ல.

மு. இக்பால் அகமது.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here