பார்ப்பான்களும், பாசிஸ்டுகளும் இழிவுபடுத்தும் ‘பறையன்’ எனும் சொல்!

புடினை ‘அனைத்துலகப் பறையன்’ எனவும் , ருசியாவினை ‘பறையர் தேசம்’ எனவும் தமது ஆதிக்க வெறியினைக் காட்டும் அமெரிக்கத் தலைவர் பைடன், இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலாளர், மேற்கத்திய ஊடகங்கள்.

இவர்களின் அகராதியில் ‘பறையர்’ என்றால் ஒதிக்கி வைக்கப்பட்டவர் எனவும் , ‘பறையர் தேசம்’ ( Pariah state) என்றால் ஒதுக்கி வைக்கப்பட்ட நாடு என்பதுமே பொருள். அப்படிப்பட்ட நாட்டுடன் எந்தவிதப் பொருளாதார- சமூக உறவுகளையும் கொள்ளக்கூடாது எனவும் இவர்களது அரசியல் கலைச்சொல் அகராதி பொருள் கூறுகின்றது. ‘ பறையர்’ என்ற சொல்லுக்கான மூலமாக தென்னிந்தியாவில் பிரித்தானிய காலணி ஆட்சி இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட சாதி முறைப் பெயர் என்பதனையும் கூட இவர்கள் அறிந்தே பயன்படுத்துகிறார்கள். இவ்வளவும் அறிந்த பின்பும் இந்த வசைச் சொல்லினை/ இந்தப் பாகுபாட்டினை ஊக்கப்படுத்தக் கூடிய சொல்லினை இவர்கள் பொது வெளியில் கூச்சமே இல்லாமல் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்.

தன்பால் ஈர்ப்பாளராக இருக்கும் ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண் குடும்பத்தாலும் சுற்றத்தாலும் ஒதுக்கப்படுவது குறித்த அந்தப் படத்திற்கு பறையா என பெயரிட்டிருந்தனர்

இதுதானா இவர்கள் பேசும் நாகரிக உலகம், மக்களாட்சி எல்லாம்.
இச் சொல்லாட்சி முழுத் தமிழர்களையும் இழிவாகக் கருதும் செயல். “துடியன் பாணன் பறையன் கடம்பனென்று , இந்த நான்கல்லது குடியும் இல்லை” எனப் புறநானூறு ( 335: 7-8) பாடுகின்றது ( குடி வேறு சாதி வேறு). அத்தகைய தமிழ்க் குடியினை இழிவுபடுத்துவது தமிழர்களை இழிவுபடுத்துவதுதானே. பழைய அகராதி ஒன்றில் தமிழருக்கு இரு பொருள்கள் கொடுக்கப்பட்டிருந்தன; ஒன்று பறையர், மற்றையது ‘விளிம்பில்லாத பாத்திரம்’. இன்று புடினை ‘ உலகப் பறையன்’ ( Global Pariah) என்பது போல; சில ஆண்டுகளுக்கு முன் சுப்பிரமணிய சுவாமி ஒருவரை ‘ அனைத்துலகப் பறையன்’ ( International pariah) எனக் குறிப்பிட்டிருந்தார். அது யாரைத் தெரியுமா ? அவர் குறிப்பிட்டது புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களை. பிரபாகரன் செயலில் ஒரு சாதி மறுப்பாளர், பிறப்பினடிப்படையில் கூட அவர் ‘ பறையர்’ என்ற சாதிக்குள் வரமாட்டார், அவ்வாறிருக்க ஏன் அவரை அவ்வாறு சுப்பிரமணிய சுவாமி அழைத்தார். இரு காரணங்கள் ; 1. உள்நாடு சார்ந்து தமிழன் = பறையன் ( சிங்களவர்கள் பறைத் தமிழோ என அழைப்பதனைப் பொருத்திப் பார்க்க), 2. அனைத்துலக மட்டத்தில் அவரைத் தனிமைப்படுத்த . எனவேதான் இச் சொல்லாட்சியினை முழுத் தமிழருமே சேர்ந்து எதிர்க்க வேண்டிய தேவையுள்ளது.

இரு நிலைகளில் இச் சொல்லாட்சிக்கு எதிரான போரினை நாம் செய்ய வேண்டும்.

  1. மேற்குலக நாடுகளிலுள்ள முற்போக்காளர்களுடன் இணைந்து , மேற்குலக அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் இச் சொல்லாட்சியின் தாக்கத்தினை விளக்கி, அதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.
  2. தமிழ்நாடு அரசு மூலமாகவும் இந்திய முற்போக்காளர்கள் மூலமாகவும் அங்குள்ள மேற்குலக தூதரகங்களுக்கு அழுத்தம் கொடுத்தல்.

” இன்னும் இங்கு பள்ளுப் பறை எனச் சொல்லும் மடைமைகள் உள்ளதடா….
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்கதடா”

வி. இ. குகநாதன்.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here