டெல்லி JNU வில் ABVP குண்டர்கள் மீண்டும் வன்முறை!


டெல்லியில் உள்ள JNU பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் பாசிச கும்பலின் மாணவர் ABVP வேண்டும் தனது வன்முறை வெறியாட்டத்தை துவங்கியுள்ளது.

கடந்த ஆண்டு CAA, NRC சட்ட திருத்தங்களுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது கொலைவெறியுடன் தாக்கி பலரையும் படுகாயப்படுத்தியது ABVP குண்டர் படை.

டெல்லி போலீசோஅவர்களை தேசவிரோதிகள் போல சித்தரித்து ஆள் தூக்கி கருப்பு சட்டங்களான UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டுக்கும் மேலே சிறை வைத்துள்ளது.

JNU பல்கலைக்கழகத்தில் உள்ள காவேரிவிடுதியில்ஞாயிறன்று வழக்கமாக அசைவ உணவு சாப்பிடுகின்ற மாணவர்களுக்கு அசைவ உணவும், சைவ உணவு சாப்பிடுகின்ற மாணவர்களுக்கு பன்னீர்மூலம் உணவும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் உணவு உண்ணும் உரிமையில் தலையிட்ட ABVP குவுண்டர்கள் ஞாயிறு இரவு விடுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மாணவிகள் மதுரிமா, அக்தரிஸ்தா அன்சாரி மற்றும் AISA மாணவர் அமைப்பின் தலைவர் சாய் பாலாஜி ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.,

வழக்கம்போலவே பாசிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்து போராடுபவர்களை ஒடுக்குகின்ற போலீஸ் சம்பவ இடத்தில் இருந்த போதிலும் குண்டர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த சூழலில் மீண்டும் போலீசே வழக்கு பதிவு செய் என்று போராடுவது எதிரிகளுடன் நிழல் சண்டை போடுவதற்கு சமமானது.

தான் என்ன உணவு உண்ண வேண்டும் என்ன உடையை உடுத்தவேண்டும் என்று தீர்மானிக்கின்ற உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு. ஆனால் பாசிஸ்டுகளின் சாம்ராஜ்யத்தில் “ஒரே உணவு, ஒரே உடை” என்று பன்முகத் தன்மையை மறுக்கின்ற ஒற்றை கலாச்சாரம் அதுவும் பார்ப்பன கழிசடை கலாச்சார மேலாதிக்கம் தலைவிரித்தாடுகிறது.

தனது இயல்பிலேயே ஆதிக்க வெறியும், ஜனநாயக மறுப்பும் கொண்ட பாசிஸ்டுகளை வெறும் கண்டன குரல் எழுப்புவதன்மூலம் மட்டும் தடுத்துவிட முடியாது. அவர்களுக்கு புரிகின்ற மொழியில் பதிலடி கொடுப்பதற்கு தயாராவது மட்டுமே இதற்கு தீர்வு! தயாராவோம்!

ஆசிரியர் குழு
மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here