(ஐக்கிய விவசாயிகள் முன்னணி)
சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM)
பத்திரிகைச் செய்தி
2023, மார்ச் 20
* >>> டெல்லியில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா நடத்திய விவசாயிகளின் மகாபஞ்சாயத் மாபெரும் வெற்றி !*
>>> விவசாயத்தின் மீதான கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியெழுப்ப, இந்திய விவசாயிகளுக்கு SKM அறைகூவல் விடுத்துள்ளது !
>>> நிலுவையில் உள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதச் சட்டத்தை உடனடியாக இயற்றி, அமல்படுத்தவும் ஒன்றிய அரசுக்கு SKM மனு கொடுத்துள்ளது !
>>> கார்ப்பரேட் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர, நாடு தழுவிய அளவில் பெரிய போராட்டங்களைத் தொடங்குவதற்காக, மாநில மாநாடுகள் மற்றும் அகில இந்திய யாத்திரைகள் நடத்தவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக மக்களை அணிதிரட்டவும் SKM வேண்டுகோள் விடுத்துள்ளது !
>>> கடன் சுமையில் சிக்கியுள்ள மோடி அரசு, விவசாயத் துறை, விவசாய நிலம், காடுகள் மற்றும் இயற்கை வளங்களை, கார்ப்பரேட் இலாபம் ஈட்டுபவர்களுக்கு விற்பதை மகாபஞ்சாயத்தில் பேசியவர்கள் கண்டனம் தெரிவித்தனர் !
டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் இன்று சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் அழைப்பின் பேரில், மாபெரும் வெற்றிகரமான விவசாயிகளின் மகாபஞ்சாயத் நடைபெற்றது, இதில் நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மகாபஞ்சாயத்தில் 50க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் விவசாயத்தின் மீதான கார்ப்பரேட் கட்டுப்பாடு மற்றும் மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக SKM தனது போராட்டங்களைத் தொடரும் என்று வலியுறுத்தினர். விவசாயிகளைத் திரட்டுவதற்காக SKM உடனடியாக மாநில மாநாடுகளையும், யாத்திரைகளையும் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
SKM இன் 15 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்றிய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரை கிருஷி பவனில் சந்தித்து, அவரிடம் 2 மனுக்களைக் கொடுத்துள்ளது. SKM உடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலுவையில் உள்ள மற்றும் விவசாயிகளைக் கொதிப்படைய செய்யும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க, அரசு ஒப்புக்கொண்டுள்ளது. காலக்கெடுவுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மேலும் போராட்டங்களை SKM அறிவிக்கும் என்று அமைச்சரிடம் SKM குழு அறிவித்துள்ளது.
அமைச்சரைச் சந்திக்கச் சென்ற SKM பிரதிநிதிகள் குழுவில்,
(1) ஸ்ரீ ஆர். வெங்கையா – அகில இந்திய கிசான் சபா (2) டாக்டர் சுனிலம் – கிசான் சங்கர்ஷ் சமிதி (3) ஸ்ரீ பிரேம் சிங் கெஹ்லாவத் – அகில இந்திய கிசான் மகாசபா (4) ஸ்ரீ வி வெங்கட்ராமையா – அகில இந்திய கிசான் மஸ்தூர் சபா (5) ஸ்ரீ சுரேஷ் கோத் – பாரதிய கிசான் மஸ்தூர் யூனியன் (6) ஸ்ரீ யுத்வீர் சிங் – பாரதிய கிசான் யூனியன் (7) ஸ்ரீ ஹன்னன் மொல்லா – அகில இந்திய கிசான் சபா (8) ஸ்ரீ பூட்டா சிங் புர்ஜ்கில் – பாரதிய கிசான் யூனியன் (டகுண்டா) (9) ஸ்ரீ ஜோகிந்தர் சிங் உக்ரஹா – பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹா) (10) ஸ்ரீ சத்யவான் – அகில இந்திய கிசான் கெத் மஸ்தூர் சங்கதன் (11) ஸ்ரீ அவிக் சாஹா – (வாழ்க விவசாயி இயக்கம்)ஜெய் கிசான் அந்தோலன் (12) ஸ்ரீ தர்ஷன் பால் – கிராந்திகாரி கிசான் யூனியன் (13) ஸ்ரீ மன்ஜீத் ராய் – பாரதியா கிசான் யூனியன் (தோபா) (14) ஸ்ரீ ஹரிந்தர் லகோவால் – பாரதிய கிசான் யூனியன் (லகோவால்) (15) ஸ்ரீ சத்னம் சிங் பெஹ்ரு – இந்திய விவசாயிகள் சங்கம், ஆகியோர் இடம் பெற்றனர்.
மீடியா செல் – சம்யுக்த் கிசான் மோர்ச்சா
தொடர்புக்கு: samyuktkisanmorcha@gmail.com
தமிழில் வெளியீடு : ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு.