குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் !
தீண்டாமையுடன் சாதி ஒழிப்பையும் சட்டமாக்கு!
குடிநீரில் மனித கழிவு , இரட்டை குவளை!

கருவறை தீண்டாமை, தனி சுடுகாடு, பெண் அடிமைத்தனம்! ஆகியவற்றை பாதுகாக்கும் பார்ப்பனிய சனாதன நச்சு மரத்தை வேருடன் சாய்ப்போம் !

என்கிற முழக்கத்தின் அடிப்படையில் திருச்சியில் மரக்கடை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் 10.01.23 இன்று காலை 11 மணியளவில் மக்கள் அதிகாரத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் கார்க்கி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கை வயல் இறையூர் கிராமத்தில் அரங்கேற்றிய சாதி வெறியின் பயங்கரவாதத்தை கண்டிக்கும் விதமாக எழுச்சி மிகுந்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கண்டன உரையாற்ற வருகை தந்த ஜனநாயக முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த தோழர்களை திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் செழியன் வரவேற்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் தமிழாதன் , பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஐயா சின்னதுரை மாவட்டத் தலைவர் தமிழக விவசாயிகள் சங்கம். தோழர் ஜீவா – மாவட்ட செயலாளர் மக்கள் கலை இலக்கிய கழகம், தோழர் காளியப்பன் மாநில பொருளாளர் மக்கள் அதிகாரம், தோழர் ராஜ்குமார் புறநகர் மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தோழர் முபாரக் மாவட்ட தலைவர் SDPI கட்சி. தோழர் சம்சுதீன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு. தோழர் ரவிக்குமார் மாவட்ட தலைவர், சமூக நீதிப் பேரவை. தோழர் செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழு தோழர் லதா பாடல் பாடினார். மேலும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலர் தோழர் மணலி தாஸ், அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம் தோழர் சைனி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர். ஆதிநாரயணன், திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன் , மக்கள் உரிமை கூட்டணி மாவட்ட தலைவர் தோழர் காசிம் … முன்னிலை வகித்தனர்.

இறுதியாக திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் நன்றி கூறினார். எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்துகொண்டனர்.

தகவல்

மக்கள் அதிகாரம்
திருச்சி மாவட்டம்.
போன். 94454-75157.

கோவை

கோவையில் 7 ஆம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

ஆவடி

09 ஆம் தேதி ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம்
ஆவடியில் ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம்,இறையூரில் உள்ள வேங்கைவயலில்…
குடிநீர் தொட்டியில் மனித கழிவு!
ஆதிக்க சாதி வெறியின் கொடூரம் – அமைதி காப்பது அவமானம்!
குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்!
தீண்டாமையுடன் சாதி ஒழிப்பையும் சட்டமாக்கு!
குடிநீரில் மனித கழிவு, இரட்டைக்குவளை, கருவறை தீண்டாமை, தனி சுடுகாடு, பெண்ணடிமைத்தனம்
ஆகியவற்றை பாதுகாக்கும் பார்ப்பனிய சனாதனத்தை அடியோடு வெட்டி சாய்ப்போம்!
என்ற தலைப்பில் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக இன்று 09/01/23 மாலை 5.00 மணியளவில் ஆவடி அண்ணா சிலை அருகில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் பு.ஜ.தொ.மு. மற்றும் விசிக கட்சி, SDPI கட்சி,தந்தை பெரியார் திராவிடர் கழகம்,ஆகிய ஜனநாயக,முற்ப்போக்கு அமைப்புகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதில் கலந்து கொண்ட அனைத்து அமைப்புகளும் பார்ப்பனிய சனாதன வர்ணாசிரம கட்டமைப்பை நம் நாட்டில் தகர்த்து எறியப்பட வேண்டும் கண்ணோட்டத்தில் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்,
.சாதிய வன்கொடுமையை விளக்கும் விதமான புரட்சிகர பாடல் பாடப்பட்டது, ஆர்ப்பாட்டத்திற்கு
*தோழர் சே, பெரியசாமி
மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர், தலைமை தாங்கினார், *தோழர் பிரகாஷ்
மக்கள் அதிகாரம்
மாவட்ட இணைச் செயலாளர் கண்டன உரையாற்றினார்.
* தோழர், வடிவேல்
மாவட்ட பொருளாளர் நன்றியுரையாற்றினார்..
இடையில் RSS BJP சங்பரிவார கும்பலை அம்பலப்படுத்தியும் கண்டித்தும் முழக்கமிடப்பட்டது ..

 

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாலை 05மணியளவில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் தேரடித்திடலில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவிட்ட கயவர்களை வன்கொடும்மை சட்டத்தில் கைதுசெய்யக்க்கோரி ஆர்ப்பாடம் நடபெற்றது, இதில் புதுக்கோட்டை மாவட்டம் பெரியார் அம்பேத்கார் கூட்டமைப்பின் தோழர் செல்வராஜ் வி சி க நகரச்செயலாளர் தோழர் வெற்றி மற்றும் சி பி ஐ எம் மாவட்டக்குழு தோழர் திருநாவுக்கரசு ஆகியோருடன் மக்கள் அதிகாரம் மாநில செயர்குழு உறுப்பினர் தோழர் கோ.நாகராசன் சிறப்புரையாற்றினார் மாவட்டப்பொருளார் தோழர் கல்யாணக்குமார் நன்றியுரையுடன் நிகழ்ச்சிமுடிவுற்றது திரளான மக்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம்

ஆர்ப்பாட்டத்தில் விசிக மாவட்ட செயலாளர் ஆற்றலரசு
சிபிஐ மாவட்ட செயலாளர் சௌரிராஜன்.
எஸ் டி பி ஐ ரபிக்
மாவட்ட எ சி எஸ் டி காங்கிரஸ் எம் கே சேகர்.
பாரிபாபு.
மருதம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.
இறுதியாக ‌கன்டன‌
முழக்கத்துடன் ஆர்ப்பாடட்ம் முடிந்தது.
தகவல்
கு.ஏழுமலை மாவட்ட செயலாளர்
மக்கள் அதிகாரம் விழுப்புரம் மாவட்டம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here