கார்ப்பரேட்- காவி பாசிச பேய் நாட்டைப் பிடித்தாட்டுகிறது. அது அரசியல், பொருளாதாரம், பண்பாடு என‌ அனைத்து தளங்களிலும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்கிறது.

மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட சாவர்க்கரை ‘வீர சாவர்க்கர்’ என்றும், தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்க்களத்தில் சண்டையிட்டு உயிர்த்தியாகம் செய்த மாவீரன் திப்பு சுல்தானை இந்து மக்களின் விரோதி என்றும் கட்டமைக்கும் வரலாற்றுத் திரிபு வேலையை செய்துவருகிறது. இதுபோல ஆயிரக்கணக்கான திரிபுகளை மேற்கொண்டு உண்மையை காணாமல் செய்ய முயற்சிக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 50 ஆண்டுகள் ஆன‌ பிறகும் அதனை நடைமுறைப்படுத்த தடைகல்லை ஏற்படுத்தி வருகிறது பார்ப்பன கும்பல். தமிழ்நாடு அரசு செய்த பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்து கருவறை தீண்டாமையை நிலைநாட்டுகிறது உயர்நீதிமன்றம்.

அமைதிவழியில் போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேர் உயிரை பறித்தது ஸ்டெர்லைட்- மோடி- எடப்பாடி போலிசு. அதனை நீதிபதி அருணா‌ ஜெகதீசன் அறிக்கையும் அம்பலப்படுத்தியுள்ளது.15 பேரின் உயிர்த்தியாகத்தில் மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது; தனது கையாட்களை கொண்டு கூவச் செய்கிறது ஸ்டெர்லைட் வேதாந்தா.

இதையும் படியுங்கள்: ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி எங்கே?

இந்த பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை உணர்த்த, தீர்வுகளை நோக்கி போராட மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் அரங்கக்கூட்டம் நடத்த உள்ளது. அனைவரையும் பங்கேற்க அழைக்கிறது.

அனைவரும் வருக!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை
தொடர்புக்கு 7339326807

 

நிகழ்ச்சி நிரல் 

அரங்கக் கூட்டம்
மார்ச் 25 2023 சனிக்கிழமை
மாலை 5.30
ஓட்டல் பிரசிடென்ட், யானைக்கல்,மதுரை.

தலைமை:

பேராசிரியர் அ.சீநிவாசன்
தலைவர்,ம.உ.பா.மையம்,மதுரை

சனாதனத்தின் வரலாற்றுத் திரிபுகள் 

பேராசிரியர் அ.கருணானந்தன்
மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவர்,விவேகானந்தா கல்லூரி,சென்னை,

அனைத்துச் சாதி அர்ச்சகர் நியமனம் ரத்து: அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு

தோழர் மருதையன்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

ஸ்டெர்லைட் பிரச்சனை:
ஆணையத்தின் அறிக்கை – உச்சநீதிமன்ற வழக்குசெய்யவேண்டியது என்ன?

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நன்றியுரை

ம.லயனல் அந்தோணிராஜ்
செயலர்,ம.உ.பா.மையம்,மதுரை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here