கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி பேச்சில் பொளந்து கட்டும் “மனதின் குரல்”( மன் கி பாத்) 100வது நிகழ்ச்சி வானொலியில் ஒளிபரப்பானது.
இந்த உரையை கட்டாயம் கேட்க வேண்டும் என்று பள்ளி , கல்லூரிகளில் மாணவர்களுக்கு நிர்பந்தம் கொடுக்கப்படுள்ளது. அப்படி நிர்பந்தம் செய்த போதிலும் மாணவர்களில் பலர் இந்த நிகழ்ச்சியை கேட்க வரவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிக்கரில் உள்ள PGIMER( Post Graduate Institute of Medical Education and Research, Chandigarh) கல்வி நிறுவனத்தில் பயிலும் 36 மாணவிகள் பிரதமரின் “மனதின் குரலை” கேட்க வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த நிர்வாகம் இந்த 36 மாணவிகளையும் ஒரு வாரத்திற்கு விடுதியை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளது ; அதாவது வீட்டுச் சிறையில் வைப்பதைப் போல மாணவிகளை விடுதிச் சிறையில் வைத்து விட்டது.
ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியை வைத்து நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் “மன் கி பாத்” நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் நகரில் உள்ள ஒரு பள்ளியில்
இதே நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்டாதவர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாததால் நிகழ்ச்சியை கேட்க வரவில்லை என்று கூறினால், அவர்கள் மருத்துவரின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: வாரிசு அரசியலும் மோடியின் மன்கிபாத் உரையும்
நாடாளுமன்றத்தில் தன்னை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காத மோடி….
தன்னிடம் கேள்வி கேட்டால் தன்னால் பதில் கூற முடியாது என்பதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பை எப்போதும் தவிர்த்து வரும் மோடி….
தான் படித்து வாங்கியதாக கூறப்படும் பட்டம் போலியானது என்று உலகம் முழுக்க நாறிக்கொண்டிருந்தாலும் அது பற்றி வாய் திறக்காத மோடி….
தனது பேச்சை தர்க்க அறிவுடைய மக்கள் மதிப்பதில்லை என்பது தெரிந்தே நூறாவது தடவையாக “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
அப்படிப்பட்ட மோடியின் பேச்சை கட்டாயப்படுத்தியாவது
நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்களை கேட்க வைக்க வேண்டும் என்று சங்கிகள் முயற்சித்துள்ளனர்.
அதற்கு ஒத்துழைக்காத மாணவர்களின் மீது அடக்கு முறையை ஏவி விட்டுள்ளனர்.
இந்த காவிபாசிஸ்டுகளை இப்படியே செயல்பட விட்டுக் கொண்டிருந்தால்…
புராண இதிகாசங்களில் வரும் கற்பனைகளையே அறிவியல் என்று பள்ளி கல்லூரிகளில் மாணவர்களை படிக்க வைத்து விடுவார்கள்; மனுதர்மத்தைச் சட்டமாக்கி நாட்டையே இருண்ட காலத்திற்குள் தள்ளி விடுவார்கள்; நாட்டை -நாட்டு மக்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்றுவிடுவார்கள்.
எனவே காவிகளை வீழ்த்தும் பணியில் ஒன்றிணைவோம்! ஒளிமயமான எதிர்காலத்தை படைப்போம்!!
- பாலன்