டிவி நிகழ்ச்சி ஒன்றில் உங்களுக்கு பிடித்த தலைவர் யார்? என்ற கேள்விக்கு ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டு, “நான் இந்தியாவில் வாழ விரும்புகிறேன்” என நடிகை டாப்ஸி அளித்த பதில் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தற்போது, இந்தி சினிமாவில் பேசப்படும் நடிகையாக வளர்ந்துள்ளார். சமூக பிரச்சினைகளில் அவ்வப்போது தலையிடவும் செய்துள்ளார். குறிப்பாக, டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பின் அவர் வீட்டுக்கு வருமான வரித்துறை ரைடு  நடத்தியது பாசிச பாஜக அரசு.  அதன் பிறகும் தனக்கு பட்ட அரசியல் கருத்தை சொல்ல அவர் தயங்கியதில்லை.

டிவி 9 தொலைக்காட்சியில் டாப்ஸியிடம் நடந்த நேர்காணலின்போது அவரிடம் சில அரசியல்ரீதியான கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் உங்களுக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் யார்? என்ற கேள்விக்கு காந்தி, அம்பேத்கர், சாவர்க்கர் ஆகிய மூவரின் படத்தை காண்பித்துக் கேட்கும் போது சாவர்க்கர் பக்கமே திரும்பாதவர் அம்பேத்கர் பக்கம் நின்று காந்தியை தேர்வு செய்தார்.

அதற்கு அடுத்த கேள்வியில் உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? என அவருக்கு இரண்டு விருப்பங்கள் அளிக்கப்பட்டன. அதில் மோடி, ராகுல் காந்தி இருவரில் பலரும் ராகுல் காந்தியை தேர்வு செய்வார் என எதிர்பார்த்த நிலையில், மோடி படத்தை சுட்டிக்காட்டி கைகளை கூப்பி ஆடியன்ஸ் முன் வந்தவர் “நான் இந்தியாவில் வாழ விரும்புகிறேன்” என்றார் அவர். டாப்ஸியின் இந்த பதிலை கேட்டு ஸ்டுடியோவில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பி சிரித்தனர்.

இதற்கு என்ன அர்த்தம் என்று, கடந்த 11 ஆண்டுகளாக இந்திய அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஒருவேளை அவர் ராகுல் காந்தியை கைகாட்டி இருந்தால் இந்நேரம் சங்கிகள் அவரை மோடி பிடிக்கலைன்னா “பாகிஸ்தானுக்கு போ”, “ஆண்டி இந்தியன்” என மோசமாக பேசியிருப்பார்கள். பாஜக ஐடி விங் அவரது உடலை சமூக ஊடகங்களில் கூறுபோட்டிருக்கும். அவரது நடத்தை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், மோடியை – பாஜகவை – ஆர்.எஸ்.எஸ்-ஐ பிடிக்காதவர்கள் இந்தியர்கள் இல்லை என்பது அவர்களின் கருத்து. அதற்காகவே டாப்ஸி அப்படி ஒரு பதிலை சொன்னார். சில நேரங்களில் எதிர் கருத்து பேசுபவர்களை இல்லாமல் செய்து விடுவார்கள் என டாப்ஸிக்கு நன்றாகவே தெரியும்.

இப்போதும் அவரை சங்கிகள் சும்மா விட்டுவிடவில்லை. அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் சமீபத்திய படமான ஆஷி, பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்தும் ஆணாதிக்கம் குறித்தும் பேசுகிறது. இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என சங்கி கும்பல் கிளம்பியுள்ளது. X தளத்தில் டாப்ஸி-க்கு எதிராக டிவீட் செய்து வருகின்றனர்.

இதை நாம் பார்த்து பழகி விட்டபடியால் நமக்கு ஆச்சரியம் அளிக்காமல் இருக்கலாம். ஆனால், டாப்ஸியின் பதில் பாசிஸ்டுகள் ஆளும் இந்தியாவின் நிலையை தோலுரித்துக் காட்டுகிறது. பாசிச கும்பலின் வெறுப்பை எதிர்கொள்வதற்கு நீங்கள் முஸ்லீமாக  இருக்க வேண்டும் என்பதில்லை. சமூகத்தை நேசிக்கின்ற ஜனநாயகவாதியாக இருந்தாலே போதும். அவர்கள் இந்துவாக இருந்தாலும் இந்துத்துவ கும்பல் ஜனநாயக கருத்தை விரும்பாது.

படிக்க:

 கௌரி லங்கேஷ் கொலையாளிகள் விடுதலையும், பார்ப்பன பாசிஸ்டுகளின் வரவேற்பும்!

 பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்தின் மீது துப்பாக்கிசூடு!

ஏற்கனவே காவி கொலைகார கூட்டத்தினால் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் இவர்களெல்லாம் பிறப்பால் இந்துக்கள். ஆனால், இவர்கள் மதவெறியை எதிர்த்தார்கள்; வர்ணாசிரமக் கொள்கையை எதிர்த்தார்கள்; கார்ப்பரேட் கொள்கை எதிர்த்தார்கள்; அதனாலயே  அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் கொள்கை எதிரியாக இருப்பதினால் கொள்கைக்கு எதிராக சிந்திப்பதினால் கொல்லப்பட்டார்கள். இதனை அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவர் தான் டாப்ஸி.

“நான் இந்தியாவில் வாழ விரும்புகிறேன்” - நடிகை டாப்ஸி!
மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

இவர்களின் வரிசையில் இணைய டாப்ஸி விரும்பவில்லை. இந்துத்துவ மதவெறியர்களைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார். அதனால் தான் மோடியை தேர்ந்தெடுத்து விட்டு “நான் இந்தியாவில் வாழ விரும்புகிறேன்” என்றார். இது டாப்ஸியின் மனநிலை மட்டுமல்ல. பாசிசத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் டாப்ஸியின் சூழலை எதிர்கொண்டு எதிர்கொண்டு வருகிறார்கள்.

இப்படியான மோசமானதொரு சூழலில் இருந்து இந்தியாவை நாம் மீட்டெடுக்க வேண்டும். ஒருவரை பிடிக்கும் என்பதற்கும், பிடிக்காது என்பதற்கும் சுதந்திரமாக கருத்துச் சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும்.  அப்படியாதொரு நிலையை உருவாக்க பாசிச கும்பல் இந்தியாவிலிருந்து அகற்றப்பட வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் ஓரணியில் திரள வேண்டும்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here