டந்த குடியரசு தினத்தில் ‘Why I Killed Gandhi?‘, கோட்சே புகழ் பாடும் ஆவணப் படத்தை, லைம்லைட் எனும் OTT தளத்தில் வெளியிட ஆர்வம் காட்டியது சங்பரிவார் கூட்டம்.

நாளை குடியரசு தினம். ‘இந்தியா: தி மோடி கொஸ்டின்’ (India: The Modi Question) குஜராத் கலவரம் (2002) தொடர்பான, பிபிசி யின் ஆவணப்படத்தை தடை செய்திருக்கிறது மோடி அரசு.

மோடியின் குரூர முகம் வெளிப்பட்ட நிகழ்வு குஜராத் கலவரம். ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் மற்றும் அரசபயங்கரவாதத் துணையோடு, நூற்றுக் கணக்கான இசுலாமியர்கள், கொல்லப்பட்ட நிகழ்வு. இக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
உலகில் நடந்த இனப்படுகொலைகள் வரிசையில் குஜராத் கலவரமும் ஒன்று.

குஜராத் கலவரம் காரணமாக, 2012 வரை, மோடியை பிரிட்டிஷ் அரசாங்கம் diplomatic boycot செய்திருந்தது. அமெரிக்க அரசாங்கம் 2005 முதல் 2014 வரை மோடிக்கு விசா வழங்க மறுத்திருந்தது. உலகத்தின் முன் இந்தியா தலைகவிழ்ந்து நின்ற சம்பவமது!

குஜராத் கலவரத்தின் பின்னணி, அதில் மோடி, அமித்ஷா போன்றோரின் பங்கு குறித்து ரகசியமாக விசாரிக்க, ஒரு குழுவை இங்கிலாந்து அரசு குஜராத்துக்கு அனுப்பியிருந்தது. பலரும் குஜராத் கலவரத்துக்கு காரணம் மோடியே! எனக் கருத்து தெரிவித்திருந்ததாக அக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. அவ்வறிக்கை, பிபிசி ஆவணப்படத்தில் காட்டப்படுகிறது.

அதுபோல, ‘குஜராத் வன்முறையில், இசுலாமியர்கள் தாக்கப்படுவதை கண்டு கொள்ள வேண்டாம்! ‘ எனக் காவல்துறைக்கு குஜராத் முதல்வர் உத்தரவிட்டிருந்ததாக, India: The Modi Question ஆவணப்படம் தெரிவிக்கிறது.

இக்கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்திருந்தது. மோடி மற்றும் 63 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என, சிறப்பு புலனாய்வுக் குழு (2012) தன் அறிக்கையை சமர்ப்பித்தது. 2013 இல் உச்சநீதி மன்றம் அவ்வறிக்கையை ஏற்றுக் கொண்டது.
நீதிமன்றம் மோடியை நல்லவர் என்று சொன்ன பிறகு பிபிசி எப்படி மோடி மீது குற்றம் சுமத்தலாம்? மோடி உலகத் தலைவராகப் புகழ் பெற்றிருக்கிறார். அவரது புகழைக் குலைக்க வெளிநாடுகள் சதி செய்கின்றன! எனக் கொதிக்கிறது சங்பரிவார் கூட்டம்.

ஆனால் பாசக ஆட்சி, நீதித்துறையை தனக்கு ஆதரவாக வளைத்திருப்பதை, நடுநிலையாளர்கள் அறிவர். கோத்ரா எரிப்பில் இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி. ஆர். பட்டேலுக்கு, ஓய்வு பெற்ற அன்றே புதிய பதவி வழங்கியது பாஜக அரசு.

சொராபுதீன் வழக்கில் தொடர்புடைய வழக்கான, துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவை விடுவித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி சதாசிவம். இவருக்கு கேரள கவர்னர் பதவியைப் பரிசளித்தது பாசக அரசு. ஆகவே, நீதிமன்றம் விடுவித்ததாலேயே மோடி பரிசுத்தமானவர் என்பதை நம்ப,
இந்தியர் யாரும் தயாராக இல்லை.

India: The Modi Question ஆவணப்படத்தை, பாசகவினர் அயல்நாடுகளின் இந்திய வெறுப்பாக காட்ட முயல்கின்றனர். அதேவேளை, வரலாற்று திரிபுவாதத்தையும், இசுலாமிய வெறுப்பையும் உள்ளடக்கமாகக் கொண்டிருந்த, தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை மோடி, அமித்ஷா, மற்றும் சங்பரிவார் கூட்டம் கொண்டாடியதை
நாம் மறக்கவில்லை.

‘கருத்து சுதந்திரத்தின் மீது எனக்கு அக்கறை உண்டு. என்னை விமர்சிப்பதை வரவேற்கிறேன்!’ என ஒரு முறை கூறியிருந்தார் பிரதமர் மோடி. ஆனால், அவர்தான் இந்த ஆவணப்படத்தை யூ டியூபிலிருந்து அகற்ற அழுத்தம் கொடுத்தார்.

இப்படத்தின் இணைப்பை வெளியிட்ட ட்வீட்டுகள் நீக்கப்பட்டன. நேற்று ஜே.என்.யு வில் பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து அலைபேசித் திரையில் பார்த்தார்கள். அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

பிபிசி ஆவணப்படத்தை வெளியிட அனுமதித்திருந்தால், அது அறிவுஜீவிகளின் விமர்சனங்களோடு நின்றிருக்கும். அதை தடை செய்ததன் மூலம், குஜராத் கலவரமும் மோடியின் மதவெறியும் மைய ஊடகங்களிலும், மக்களிடத்திலும், மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது!

பிபிசியின் ஆவணப்படத்தை தடை செய்யலாம். ஆனால், மதச்சார்பின்மையில் அக்கறை கொண்டோர் மோடி மீது எழுப்பும் கேள்விகள், வரலாற்றில் அவரை துன்புறுத்தியபடி இருக்கும்!

  • கரிகாலன்
    முகநூல் பகிர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here