ஒன்றிய அரசின் பட்ஜெட்:
விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்!


கருத்தரங்கத்திற்கு அணி திரண்டு வாரீர்!

“விவசாயி கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்கிறது முதுமொழி! விவசாயத்தில் ஈடுபட்டால் தானே கணக்கு பார்ப்பதற்கு அதை விட்டு விவசாயிகளை விரட்டியடித்து விட்டால் கணக்கு பார்க்கின்ற சிந்தனை எங்கிருந்து வரப்போகிறது என்ற கொடூரமான வகையில்,
கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு உகந்த வகையில், இந்திய விவசாயத்தை மாற்றுகின்ற அயோக்கியத்தனத்தை மேற்கொண்டு வருகிறது பாசிச மோடி அரசு.

பல நூற்றாண்டுகளாக தனது உடலில் ஒரு பாகமாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் கோடிக்கணக்கான விவசாயிகளிடமிருந்து அவர்களின் உற்பத்தியை பிடுங்கிக் கொண்டு விவசாயத்தை விட்டே விரட்டி அடிக்கின்ற சதித் திட்டம் தான் கார்ப்பரேட் விவசாயக் கொள்கை.

இந்த கார்ப்பரேட் விவசாயக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு துணிச்சலுடன் இந்திய விவசாயத்தின் மீது போர் தாக்குதல் தொடுத்து வருகின்ற பாசிச மோடி கும்பல், வேளாண் சட்ட திருத்தம் என்ற பெயரில் அடக்குமுறைகளை ஏவி விடுகிறது.

விவசாயிகளின் போராட்டத்தில் காரை விட்டு தாக்குதல் நடத்திய பாஜக அரசின் அமைச்சர் ஒருவனின் மகன் துவங்கி உள்ளூரில் செயல்படுகின்ற பாரதிய ஜனதா கட்சி விவசாயத்தை ஒழித்துக் கட்டுவதற்கு பல்வேறு கோணங்களில் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் மீது தாக்குதலை தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“சுழன்றும் ஏர்பின்னது உலகம்”என்கிறது வள்ளுவரின் திருக்குறள். சுழன்றும் கார்ப்பரேட் பின்னது உலகம் என்று திருத்தி பேசுகிறது கார்ப்பரேட் பாசிச ஆர் எஸ் எஸ்- மோடி அரசு. ஒட்டுமொத்த விவசாயத்தையே அழிக்க வருகின்ற கார்ப்பரேட் விவசாயக் கொள்கையை எதிர்த்து போராடுகிறது ஐக்கிய விவசாயிகள் முன்னணி.

இந்த நோக்கத்துடன் நாடு முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டுகின்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சையில் நடக்கின்ற கருத்தரங்கத்திற்கு தங்கள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறது ஐக்கிய விவசாயிகள் முன்னணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here