பசுவைக் கட்டியணைத்து காதலர் தினம் கொண்டாடுங்கள் என்று சநாதன xx ஞானிகள் சொன்ன பிறகு எழுதிய பாட்டு இல்லை இது. வள்ளலார் அன்றே சொல்லி விட்டார். கடைசி வரியில் தயவு இல்லார் என்று ஒரு வரி வருகிறது. அது ரொம்ப முக்கியம்.
“கங்கையிலே காவிரியில்
நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில்
கால்தேயச் சுற்றி
வெங்கொடிய பலநோன்பு
ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற
யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை
பணம்அள்ளி தந்து
பசுவதனைப் பூசித்து அதன்
கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை
அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய்
முக்தியதை யடையார்.
திருவருட்பா (இறவா நிலை)