கருப்புப்  பணத்தை ‘ஒளித்தவரே’ போற்றி!

டாலருக்கு நிகராக இந்திய ரூபாயை ‘உயர்த்தியவரே’ போற்றி!

விலைவாசியை விண்ணைத் தொட வைத்த ‘வித்தகரே’ போற்றி!

ஏழைகளை ஒழித்து, ‘ஏழ்மையை’ ஒழித்த ஏழைப்பங்காளனே போற்றி!

நண்பர்களை உலகப் பில்லியனர் பட்டியலில் சேர்க்க ‘பாடுபட்ட’ பரந்தாமனே போற்றி!

பெட்ரோல் & டீசல் மீதான வரியை ‘கூட்டி’க் குறைத்தவரே போற்றி!

கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை ‘மறைத்தவரே’ போற்றி!

கொரோனா மரணங்களை ‘மறைத்தவரே’ போற்றி!

கொண்டைக்கடலை கொடுத்தவரே,

புலம் பெயர் தொழிலாளர்கள் பாதங்கள் ‘புண்பட’ வைத்தவரே, போற்றி!

தடுப்பூசிக்கு அதிக விலை விதித்த ‘வித்தகரே’  போற்றி!

ஆக்ஸிஜன் இல்லாமல் ‘அல்லல்’ படுத்தியவரே போற்றி!

கொரோனாவுக்கு ‘கோமியம்’ கொண்டு ஆராய்ச்சி செய்த விஞ்ஞானியே போற்றி!

சாணியை ‘சானிடைசர்’ ஆக்கிய சாதனையாளரே போற்றி!

கார்ப்பரேட்டுகளுக்கு வரியைக் ‘குறைத்த’ கடவுளே போற்றி!

பொதுத்துறை நிறுவனங்களை ‘விற்றவரே’ போற்றி!

250 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் கொடுத்தவரே போற்றி!

வரி ‘வசூல் ராஜா’வே போற்றி!

வி’மானத்தை’ விற்றவரே போற்றி!

முக்கிய கூட்டத்தில் கூட, மயிலுக்கு உணவளிக்க ஓடோடிச் சென்றவரே போற்றி!

ஆயிரம் உடை அணிந்த அபூர்வ சிகாமணியே போற்றி!

உலகம் ‘சுற்றும்’ வாலிபனே,

ஏழைகளின் வருமானத்தை எட்டு லட்சமாக உயர்த்திய ‘உயர்ந்த உள்ளமே’ போற்றி!

பணமதிப்பிழப்பு மூலம் ‘தீக்குளிக்க’ முன் வந்தவரே போற்றி!

49% அந்நிய முதலீட்டை எதிர்த்து 100% அந்நிய முதலீட்டை அமல் படுத்திய அரசரே போற்றி!

மானியங்களை ‘மாயமாக’ மறைவித்தவரே போற்றி!

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ‘தாரை வார்த்த’ தர்மப்  பிரபுவே போற்றி!

கார்ப்பரேட் கடன்களை ‘தள்ளுபடி’ செய்த ‘கர்ணனே’ போற்றி!

கார்ப்பரேட்டுகளுக்கு தடையாக இருந்த சட்டங்களை தகர்த்தெறிந்தவரே போற்றி!

‘பகட்டாக’ வாழும்  ஏழைத் தாயின் மகனே!

PM Cares மூலம் ‘கணக்கு’ ‘வழக்கு’ இல்லாமல் வசூலித்தவரே வருக!

இரட்டிப்பு விலையில் ரஃபேல் விமானங்கள் வாங்கிய ‘ராஜதந்திரியே’ போற்றி!

நோகாமல் நேருவை நொடிக்கொரு முறை ‘குற்றம்’ சொல்லும் குருவே போற்றி!

பத்திரிக்கையாளரை கண்டால் ‘பதறியடித்து’ ஓடும் பரமேஸ்வரனே போற்றி!

கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ‘பறித்து’ அவர்களை பக்கோடா விற்கும்  தொழிலதிபர்களாக மாற்றிய பரந்தாமனே போற்றி!

மாட்டுக்காக, மாடாக உழைக்கும் மாடாளுமன்றம் கண்டவரே போற்றி!

லேடியிடம் தோற்ற மோடியே போற்றி!

ராஜேந்திர பாலாஜியின் ‘டாடி’யே போற்றி!

இல்லாத ரயில் நிலையத்தில் டீ விற்றவரே போற்றி!

முதலையை வேட்டையாடியவரே போற்றி!

1988ல் ஈமெயில் கண்டுபிடிக்கும் முன்னர், பயன்படுத்தியவரே போற்றி!

1980 களில் டிஜிட்டல் கேமராவில் போட்டோ எடுத்தவரே போற்றி!

பஞ்சாப் பாலமே போற்றி!

மாறுவேடப்போட்டி மைனரே போற்றி!

பதினைந்து லட்சமே போற்றி!

மதுரை எய்ம்ஸ் நாயகரே போற்றி!போற்றி!

2கோடி வேலை வாய்ப்பே போற்றி!

ஜிஎஸ்டி நிலுவையே போற்றி!

2000 ரூபாய் நோட்டு ‘சிப்பே’ போற்றி!

இழுக்க இழுக்க புடவை தந்து பாஞ்சாலி மானம் காத்த கிருஷ்ணன் போல, கிலோமீட்டர் கணக்கில் துணிகட்டி குஜராத் மானம் காத்த கலியுக ‘கிருஷ்ணனே’ போற்றி!

டிரம்ப் கண்பட்டுவிடும்  என்று குஜராத் மாடலை காக்க ‘பெருஞ்சுவர்’ கட்டிய கர்னலே போற்றி!

மேகத்திற்குள் விமானத்தை மறைத்த ‘மறைபொருளே’ போற்றி!

தமிழ் பாடும் ‘தருமி’யே போற்றி!

 

நன்றி :

புதிய கலாச்சாரம் செய்திகள்

10-04-2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here