கோ பேக் மோடி மட்டுமல்ல! கெட் அவுட் மோடி!!

நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளங்களிலும் பிறவற்றிலும் ஹேஷ் டேக் போடுவது என்ற யுத்தியை கையாள்கின்றனர்.

மக்கள் அதிகாரம் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கல்வியாளர்கள் அனைவரும் திரண்ட அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறை கூவல் விடுக்கிறோம்.

மிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (SSA) இந்த நிதியுதவி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கப்படுகிறது. அதேநேரம் இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிகளை மாநில அரசுகள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு SSA நிதியை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் நிறுத்திவிட்டது. அந்த வகையில் SSA திட்டத்தின் 2023-24 கல்வியாண்டின் 4-ம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் தமிழகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தமிழகத்தில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகளும், கல்வியாளர்களும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் காலடியில் கல்வியை ஒப்படைத்து கல்வியை முழுக்க முழுக்க வியாபார பண்டமாக மாற்ற முயற்சிக்கின்ற பாசிச மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை தமிழகம் மட்டுமல்ல மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் இன்னமும் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்திய ஒன்றியத்தின் கல்வி அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான் தனது ’சிற்றறிவுக்கு’ எட்டிய வரை தமிழகம் மட்டும்தான் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதாக பச்சையாக புளுகி வருகிறார் என்பதால் அவரது அறிவின் விசாலமே இவ்வளவுதானா என்று நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

படிக்க:

  தமிழகத்தின் கல்விக் கட்டமைப்பைத் தகர்க்கும் பாசிச மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!

மாட்டு சாணியையும், கோமூத்திரத்தையும் பிடித்துக் குடித்து அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று பேசுகின்ற ஆர்எஸ்எஸ் – பாஜகவின் சொல்லிக் கொள்ளப்படும் கல்வியாளர்கள், கல்வியில் சுயசார்பு தன்மையுடன் முன்னேறிய மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களை பின்னுக்கு செல்வதற்கு பல்வேறு சதி திட்டங்களை செய்து வருகிறது.

இதனை எதிர்த்து தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி அதன் கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மற்றும் துணை முதல்வராக உள்ள உதயநிதி ஆகியவர்கள் பேசி வருகின்றனர் என்பதால் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் ரவுடிகளை போல இறங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளங்களிலும் பிறவற்றிலும் ஹேஷ் டேக் போடுவது என்ற யுத்தியை கையாள்கின்றனர்.

”ஒன்றியப் பிரதமர் மோடி அவர்களே, சென்ற முறை நீங்கள் தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது தமிழ்நாட்டு மக்கள் “Go Back Modi” எனத் துரத்தி அடித்தார்கள். இந்த முறை மீண்டும் அதைத் தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தால், “Go Back Modi” கிடையாது, “Get Out Modi” எனச் சொல்லி துரத்துவார்கள், என்பதை மீண்டும் ஒருமுறை அரசியல் கோமாளி அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.” என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

கோ பேக் மோடி என்பது கெட் அவுட் மோடியாக மாறும் என்று எச்சரித்த திமுகவிற்கு எதிராக தமிழகத்தின் பாஜக தலைவர் பாசிச கோமாளியான திருவாளர் அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்று தானும் ஹேஷ்டேக் போடுவேன் என்று பேசியுள்ளார்.

இன்றைய நிலவரப்படி எக்ஸ் வலைதளத்தில் ‘கெட் அவுட் மோடி’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பாஜகவை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேவேளை, இதற்கு பதிலாக ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, திமுகவை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் அதிக கையிருப்பு பணத்தை கையில் வைத்துள்ள கட்சியான பாசிச பாஜக தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒரு சிறு பிரிவினரால் ஊட்டி வளர்க்கப்படுகிறது என்பதால் கோடிக்கணக்கான ரூபாய் கொட்டியளக்கப்படுகிறது. அது மட்டுமல்ல தமிழகத்தின் மீதான வெறுப்பை உமிழ்வதற்கு ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலின் ஐடி விங் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நிலைமையே உள்ளது.

ஏனென்றால் இந்தியாவிலேயே வலுவான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை பாசிச பாஜக கையில் வைத்துள்ளது. இதற்காக லட்சக்கணக்கானவர்களை கூலிக்கு அமர்த்தி தினமும் காலையிலிருந்து இரவு வரை அவர்களுக்கு சம்பளம் கொடுத்து, இப்படிப்பட்ட பொய் செய்திகளை பரப்புவது; எதிரிகளை கடுமையாக விமர்சித்து எழுதுவது; முட்டாள்தனமான அம்சங்களை அறிவியல் போல சித்தரிக்க செய்வது; தனக்கு எதிராக அரசியல் கருத்துகளை பேசுபவர்களை இழிவுபடுத்தி ஹேஷ்டேக்குகளை போடுவது, என்பதை ஒரு வேலையாகவே செய்து வருகின்றனர் என்பதால் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் ”கெட் அவுட் ஸ்டாலின்” என்பது ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள திறனை பயன்படுத்தி போலியாக அதனை ட்ரெண்டிங் செய்யலாம். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பாசிச பாஜகவிற்கும் அதன் பினாமி கும்பல்களுக்கும் ஒருபோதும் அனுமதி இல்லை என்பதை நிரூபிக்கின்ற வகையில் தமிழகம் திருப்பி அடிக்க வேண்டும்.

இதனை ஒட்டி மக்கள் அதிகாரம் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கல்வியாளர்கள் அனைவரும் திரண்ட அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறை கூவல் விடுக்கிறோம்.

  • மாசாணம்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here