இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க உ.நீ.ம. அனுமதித்தது அவமானம்!

அர்ஜூன் சம்பத் மற்றும் இவன் சார்ந்த சங்கிக் கூட்டம் அம்பேத்கரை உரிமை கொண்டாடுவதும், அம்பேத்கரையே பக்கா இந்துவாக ஜோடித்துக் காண்பிப்பதும், அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த முற்படுவதும் கேவலம்! அவமானம்! வெட்கக்கேடு!

0
இந்து முன்னணி அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க உ.நீ.ம. அனுமதித்தது அவமானம்!
இதிலிருந்து ஒன்று புலப்படுகிறது. நீதிபதிகள் பலர் பாசிச காவிக் கூட்டத்தில் கரைந்து போயினர். இன்னும் பலர் அச்சத்தால் நடுங்கி ஒடுங்கிப் போயினர்.

“அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்”- என்பது நாட்டுப்புற வழக்கு சொல். ஆனால் தமிழ்நாட்டில் கூட இந்த பழமொழியை பொய்யாக்கும் வகையில் இஸ்லாமியர் இந்துக்களுடைய இணக்கமான உறவு சிறப்பாகவே நீடிக்கிறது.

ஆனால், தீண்டாமையால் தன் வாழ்நாளில் பட்ட அவமானங்களை எல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு அதிலிருந்து மீண்டும்கூட பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் உதவியால் சட்டத்துறை உட்பட எண்ணற்ற பட்ட படிப்புகளை வெளிநாடுகளுக்குச் என்று படித்து பட்டங்கள் பல பெற்றவர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர்.

அம்பேத்கர் குருவாக ஏற்றோரில் முக்கியமானவர் ஜோதிராவ் பூலே. அம்பேத்கரின் உயர்வுக்கு உறுதுணையாக நின்றவர் சாகு மகாராஜ். 1940-ல் பம்பாயில் ஜின்னாவின் இல்லத்தில் தந்தை பெரியார் குழுவினருடன் சமூகத்தின் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் குறித்து அம்பேத்கர் கலந்து பேசி இருக்கிறார்.

சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட, இழிவாக கருதப்பட்ட, தீண்டபபடாத வகுப்பில் தோன்றிய அம்பேத்கர் தான், இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உருவாவதற்கு அடி கோளிட்டவர் என்ற பெருமையையும் பெற்றார். புகழின் உச்சிக்கே சென்றார்.

ஆனாலும் தமது மகர் சாதி தாழ்த்தப்பட்ட மக்கள் படும்பாட்டினை கண்ணெதிரே பார்த்துவிட்டு அவர் அதனை சாதாரணமாக கடந்து செல்ல விரும்பவில்லை. பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்க மறுக்கப்பட்டார்கள் தாழ்த்தப்பட்ட ‘இந்து’ மக்கள்.
மீறியவர்கள் பலர் கட்டி வைத்து உரிக்கப்பட்டார்கள். இதைப் போல எண்ணற்ற கொடும் துன்ப துயரங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்தார்கள்.

இவற்றையெல்லாம் ஆழமாக பரிசீலித்தார் அண்ணல் அம்பேத்கர். இவற்றிற்கெல்லாம் அடிப்படை சாதிய கட்டுமான அமைப்பு, ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, ஒடுக்குமுறை… இவை யாவற்றுக்கும் அடித்தளம் சனாதன பார்ப்பனிய ‘இந்து’ மதம் என்பதனை கண்டு உணர்ந்தார். அதன் வழியே பலவற்றையும் கற்று ‘சாதியை ஒழிக்க வழி’ என்ற அரிய நூலை படைத்து வெளிக் கொணர்ந்தார்.
அதனை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து தமிழ்நாட்டில் வெளியிட்டவர் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்.

அம்பேத்கருக்கும், தந்தை பெரியாருக்கும் கொள்கை வழியில் ஏற்பட்டுவிட்ட மிக இணக்கமான நல்லுறவு காரணமாக, இந்து மதத்தில் இனி நீடிப்பது சரியல்ல; எனவே தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட சாதியை ஒழிக்க விரும்பும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் இணைத்துக் கொண்டு இந்தக் கொடும்ப பாதக பார்ப்பன இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்த மதத்தை தழுவ முடிவு எடுத்தார் அண்ணல் அம்பேத்கர். இதன் பொருட்டு அம்பேத்கர், தந்தை பெரியாரை நேரில் சந்தித்து
தான் எடுத்துள்ள முடிவினை அறிவித்து பெரியாரையும் அவர் திரட்டி உள்ள மக்கள் கூட்டத்தையும் தன்னுடன் சேர்ந்து பௌத்த மதத்தை தழுவ அழைப்பு விடுத்தார்.
ஒரு வழியில் தந்தை பெரியார் அம்பேத்கரின் இம்முடிவின்மீது  மகிழ்ச்சி கொண்டாலும், மறுபுறம் இந்திய நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் அறியாமையின் காரணமாக ‘இந்து மதம்’ (பார்ப்பன சனாதன மதம்) எனும் புதைச் சேற்றில் சிக்கித் தவிக்கும் தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட- பழங்குடியின மக்களைப் பற்றிய கவலை அவரைப் பற்றிக் கொண்டது.

எனவே பெரியார், அம்பேத்கரிடம் இப்படி கூறினார்: “நீங்கள் எடுத்த முடிவு மிக மிக வரவேற்கத் தகுந்த முடிவு. எனவே உங்கள் தலைமையில் பல லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களையும் பிறரையும் அணி திரட்டி மிகப் பிரமாண்டான நிகழ்ச்சியின் மூலமாக இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மதத்தை தழுவுங்கள்! அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இப்போதைக்கு நான் ‘இந்து’ மதத்தை விட்டு வெளியேறுவது சிறந்த முடிவாக அமையாது. ஏனெனில் இந்து மதத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடிய அப்பாவி மக்களை தவிக்க விட்டு விட்டு நான் சில ஆயிரம் பேரோடு மதம் மாறுவது சரி அன்று. நான் அந்த கேடுகெட்ட ‘இந்து’ மதத்தின் உள்ளே இருந்து கொண்டே பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் நார் நாராகக் கிழித்து மக்கள் முன் அம்பலப்படுத்தி அந்த மதத்தையே ஒழிக்கக் கூடிய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய கடுமையான பணி என் முன்
காத்துக் கிடக்கிறது. எனவே, நீங்கள் உங்கள் சிறந்த முடிவுப் படி காரியத்தை வெற்றிகரமாக நடத்தி முடியுங்கள்; நான் என் பணியை விடாமுயற்சியுடன் மேற்கொள்கிறேன்…” என்ற பாணியில் பதிலளித்தார். பெரியாரின் இம்முடிவு சரியெனப் பட்டதால் அம்பேத்கரும் அதனை ஏற்றுக் கொண்டார்.

“நான் சாகும்போது இந்துவாகச் சாக மாட்டேன் “
-அம்பேத்கர்.

1950 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் ‘இந்து'(மத) திருத்த சட்ட மசோதா முன்மொழிவுகளை அம்பேத்கர் முன்மொழிந்து பேசினார். குறிப்பாக இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமை, திருமண முறை, மண விலக்கு, சொத்துரிமை உள்ளிட்ட குறைந்தபட்ச அம்சங்களை மட்டுமே முன் வைத்து உரையாற்றினார். அம்பேத்கர் உரையாற்றும் பொழுது இந்து சட்டத் திருத்த மசோதாவை முற்போக்கானது என்றோ புரட்சிகரமானது என்றோ கூறுவது தவறாகும். முன்னேற்றத்திற்கான புது வழிகளுக்கு இந்தச் சட்டத் திருத்த மசோதா ஒப்புதல் அளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் ‘வைதீக பழக்கங்களை அது எதிர்க்கவில்லை’. இதிலிருந்து இந்து திருத்த சட்ட மசோதா எதிரிகளின் பலத்தைக் கணக்கிற்கொண்டு டாக்டர் அம்பேத்கரால் எந்த அளவிற்கு அரைகுறை அளவில் முன் வைக்கப்பட்டது என்பதை உணர முடியும். ஆனால் ஜவஹர்லால் நேரு மட்டும் அம்பேத்கருடைய கருத்துக்களுக்கு உடன்பட்டார். ஆனால் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், உள்ளிட்ட பார்ப்பன கண்ணோட்டத்தை உடையோர் அம்பேத்கரின் இந்து சட்ட திருத்த மசோதா இக்காலத்திற்கு ஏற்றது அல்ல என்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

படிக்க:

நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்

அம்பேத்கரை இழிவு படுத்திய ஆர்எஸ்எஸ் அமித்ஷா பார்ப்பன பாசிச பயங்கரவாத கும்பல்.

இதே காலக்கட்டத்தில் மதராஸ் உயர்நீதிமன்ற முடிவுகளும், உச்ச நீதிமன்ற முடிவுகளும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் மக்களவையில் இடங்கள், அரசு அதிகார ஒதுக்கீடுகளுக்குத் தடை ஏற்பட்டன. இவற்றையும் அம்பேத்கர் கடுமையாக சாடுகிறார். ஆனால் பாராளுமன்றத்தில் அன்றைய நாளில் அம்பேத்கரின் குரல் எடுபடாமலே போயிற்று.

இந்து திருத்தச் சட்ட மசோதாவிற்கு ஆரம்பத்தில் ஜவஹர்லால் நேரு அம்பேத்கருக்கு ஓரளவு ஒத்துழைப்பு வழங்கினாலும், பார்ப்பன உயர்மட்ட அரசியல்வாதிகளின் விடாப்பிடியான ‘போராட்டத்தால்’ நேருவும் பின்வாங்கினார்.  ஆக, மிக குறைந்தபட்ச இந்து மத திருத்தச் சட்ட மசோதாவிற்கே வெற்றியை ஈட்ட முடியவில்லையே என்ற காரணத்தினால் 27-09-1951-ல் அம்பேத்கர் அமைச்சர் பதிவில் இருந்து ராஜினாமா செய்தார். அரசியல் சட்டத்தின் பிதாமகர் என வர்ணிக்கப்படும் அம்பேத்கரின் இம்முடிவு பார்ப்பனக் கூட்டத்திற்கு உள்ளூர மன மகிழ்ச்சியை அளித்தது.
அதன் பின்னரே அம்பேத்கர் இனியும் இந்து மதத்தில் தாம் நீடித்திருக்கக் கூடாது; அதிலிருந்து வெளியேற வேண்டும்; இருக்கக்கூடிய மதங்களில் ஓரளவு ஒழுக்க நெறி கொண்ட பௌத்தத்தை தழுவ வேண்டும் என்ற உள்ளுணர்வுக்கு ஆட்பட்டார்.
‘நான் சாகும்போது இந்துவாக சாகமாட்டேன்’ என்ற வெளிப்படையான அறிவிப்பினையும் செய்தார்.

பர்மா: “உலக பௌத்த மாநாடு – அம்பேத்கர் பெரியார் பங்கேற்பு!

03-12-1954-ல் பர்மாவில் உலக பௌத்த மாநாடு எழுச்சியோடு நடைபெற்றது.
அதில் அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் பெரும் கூட்டத்தினருடன் கலந்து கொண்டனர். அப்பொழுது தான் தனி அறையில் சந்தித்து கலந்துரையாடிய பொழுது, முந்தைய பத்திகளில் தெரிவித்துள்ளது போல அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவ முடிவு எடுத்த விடயத்தையும், அதற்கு பெரியார் அளித்த பதிலையும் அவர்களது கருத்து பரிமாற்றத்தின் மூலமாக பரஸ்பரம் ஒருமித்த கருத்துக்கு வரலாயினர்.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

இந்தியா திரும்பிய அம்பேத்கர் மராட்டிய மாநிலம் முழுவதும் மகர் சாதி மக்கள் உட்பட இந்து மதத்தின் கொடுமைகளை அனுபவிக்கும் அனைத்து மக்களையும் பௌத்த மதத்தில் இணைய அறைகூவல் விடுக்கிறார். காந்தி உயிருடன் இருந்த காலத்திலேயே அவருடன் பல விடயங்களில் முரண்படுகிறார்; கடுமையான விவாதப் போர் தொடுத்து மண்ணைக் கவ்வச் செய்துள்ளார். நேருவினுடைய செயலற்ற தன்மையையும் புரிந்து கொண்டார். பாம்பே, நாக்பூர் உட்பட பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். இலங்கை பௌத்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். அம்பேத்கர் நிறுவிய சித்தார்த்தா கல்லூரியினை தமது கொள்கை பிரச்சாரத்திற்கான கேந்திரமாகப் பயன்படுத்துகிறார்.

இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மதத்தில் இணைந்தார் அம்பேத்கர்!

14-10-1956-ல் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் (தற்போது தீட்சா பூமி என்று அழைக்கப்படும் இடம்) மூன்று லட்சம் மக்களுடன், அம்பேத்கர் தலைமையில் கொடும்பாதக மதமான இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்த மதத்தை தழுவினார். அடுத்தடுத்த நாட்களில் 15, 16, 17-10-1956 நாட்களில் 10 லட்சம் பேருக்கு மேல் பௌத்த மதத்தில் இணைந்திடச் செய்தார் அம்பேத்கர். ஆக, அவர் முன்னர் அறிவித்தது போல “நான் சாகும் பொழுது ‘இந்து’வாக சாகமாட்டேன்” என்பதை நடைமுறைப்படுத்திக் காண்பித்தார் அண்ணல் அம்பேத்கர். இதன் மூலம் அம்பேத்கர் எப்படி இந்து மத பரம விரோதி என்பதனை சாமானியரும் புரிந்து கொள்ளலாம்.

இந்து மத வெறியன் அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கலாமா?

அம்பேத்கர் பற்றிய மிக மிகச் சுருக்கமான உண்மை வரலாறு மேற்கண்டபடி இருக்கின்ற பொழுது, இந்து மத வெறியனும், கோயம்புத்தூர் மதக் கலவரத்திற்கு வித்திட்டு இஸ்லாமியர் பல 10 பேர் மரணத்திற்கு காரணமானவனும், பல வீடுகள் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டதற்கு அடி கோளியவனும், இந்த ‘சாதனை’க்காகவே தமிழ்நாட்டின் இந்து மக்கள் கட்சி தலைவர் பதவியை ஒன்றியத்தின் ஆர்.எஸ்.எஸ் பாஜக தலைமையகத்தில் இருந்து பெற்றுக் கொண்டவனுமான நெற்றியிலே பட்டையை தீட்டிக்கொண்டு வளம் வருகின்ற சூத்திர பிராணியுமான அர்ஜூன் சம்பத் மற்றும் இவன் சார்ந்த சங்கிக் கூட்டம் அம்பேத்கரை உரிமை கொண்டாடுவதும், அம்பேத்கரையே பக்கா இந்துவாக ஜோடித்துக் காண்பிப்பதும், அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த முற்படுவதும் கேவலம்! அவமானம்! வெட்கக்கேடு!

இந்நிலையில்  காவல்துறையினரிடம் “அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்க மாட்டோம்; நெற்றியிலே திருநீறு, சந்தனம், குங்குமம் சாத்த மாட்டோம் என்று காவல்துறைக்கு எழுதிக் கொடுத்தும் கூட 14-04-2025-ல் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணி மண்டபத்தில் எங்களுக்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுக்கிறார்கள்” என தமிழ்நாடு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது‌.

அம்பேத்கரை காவிமயமாக்கிய இந்து மக்கள் கட்சியின் போஸ்டர்

இவ்வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி திரு ஜி.கே.இளந்திரையன் கீழ்க்கண்டவாறு தீர்ப்புரை வழங்கி உள்ளார். “மனுதாரர் தந்துள்ள உத்தரவாதத்தை ஏற்று பட்டினப்பாக்கம் காவல்துறை வாகனத்தில் சென்று பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். உத்திரவாதம் மீறப்பட்டால் அது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம்”. இதுதான் உயர் நீதிமன்ற தீர்ப்புரை.

எவ்வளவு அலங்கோலமான தீர்ப்புரை பாருங்கள்? காவிக் கூட்டத்தின் சொல்லுக்கும் செயலுக்கும் என்றுமே சம்மந்தம் இருந்தது இல்லை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ காவல்துறை வாகனத்தில் சென்று இந்து மத வெறியர்கள் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட அனுமதிக்கிறார்களாம். இத்தருணத்தில் அர்ஜுன் சம்பத்தின் கோவை கலவரம் தொடர்பான ‘பங்களிப்பு’ என்ன? அத்வானி தலைமையில் ரத யாத்திரை என்ற பெயரில் பல்வேறு உத்தரவாதங்களை அளித்துவிட்டு பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியவர்களின் வரலாறு தான் என்ன? மிக அண்மையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் 144 போலீஸ் தடை உத்தரவு இருந்தும் கூட, கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக இந்து மத வெறியர்கள் எச்.ராஜா, அர்ஜுன் சம்பத் தலைமையில் வெளியில் இருந்து ஆட்களை கூட்டி வந்து ஆயிரக்கணக்கில் திரட்டி முருகன் கோயிலுக்குள்ளேயே பாஜக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியது, ‘திருப்பரங்குன்றம் மற்றொரு அயோத்தியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை’என எச்.ராஜா ஊளையிட்டது…(இதற்காக அந்தப் பிராணி மீது எவ்வித நடவடிக்கையும் நீதிமன்றமோ காவல்துறையோ அரசோ மேற்கொள்ளவில்லை என்பது வெட்கக்கேடு) என எண்ணிலடங்கா மனிதநேயத்திற்கு புறம்பான காவிக் கூட்டத்தின் உதாரணங்களை இந்திய நாடெங்கினும் பரவி விரவிக் கிடப்பது இந்த நீதிபதிகளுக்கு தெரியாதா?

அதே நேரத்தில் மதுரை மாநகரில் மனிதநேய கண்ணோட்டத்தில் சாதி மதம் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் மத நல்லிணக்கத்துடன் அமைதியாக வாழ்வதற்கான நற்பாடம் போதிக்கப்படல் வேண்டும் என்ற சீறிய நோக்கத்துடன் “மத நல்லிணக்கப் பேரணி – மற்றும் பொதுக்கூட்டம்” நடத்துவதற்கு அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி டீபன் தரப்பினர் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்த போது அதனை மயிருக்குச் சமமாக மதித்து நியாயமான கோரிக்கையை புறந்தள்ளியது நீதிமன்றம்.  இது எந்த வகையில் நியாயம்?

இதிலிருந்து ஒன்று புலப்படுகிறது. நீதிபதிகள் பலர் பாசிச காவிக் கூட்டத்தில் கரைந்து போயினர். இன்னும் பலர் அச்சத்தால் நடுங்கி ஒடுங்கிப் போயினர். இவை இரண்டைத் தவிர நீதிபதிகளின் ஏற்றத்தாழ்வான தீர்ப்புரைகளுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?  இதை மீறுபவர்களுக்கு காவிக் கூட்டத்தினரால் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்பதே எதார்த்தம்!

எனவே, கொடுங்கோன்மையான இந்து மதத்தை விட்டு வெளியேறி ஒழுக்க நெறி கொண்ட மதம் எனக் கருதிய பௌத்த மதத்தைத் தழுவிய அம்பேத்கர் பிறந்த நாளுக்கு, இந்து மத வெறியர்கள் எந்த வகையிலும் மரியாதை செலுத்துவது என்ற பெயரில், மாலை அணிவிப்பது என்ற பெயரில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று மரியாதை செலுத்த அனுமதி கொடுத்திருப்பது என்பது கேவலம்! அவமானம்! வெட்கக்கேடு!

  • எழில்மாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here