(நேற்று) இல்லாத அசுரனின் இறப்பினைக் கொண்டாடி
விரைவில் இறக்கப்போகும் சென்னை நரன்கள் (மனிதர்கள்).
நேற்றைய தீபாவளி கொண்டாட்டங்களில் ஏற்பட்ட 50 இற்கு மேற்பட்ட வெடிப்பு நிகழ்வுகளைகளையும் (பட்டாசு வெடிப்பு), அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் செய்திகள் வழியே ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். கேடு நேற்றுடன் முடியப்போவதில்லை. கீழே படங்களாக இருப்பவை நேற்றைய பட்டாசு வெடிப்புக்களின் பின்னரான காற்று மாசின் அளவு. பொதுவாக காற்றின் தர அளவானது, AQI ( Air Quality Index) 50 அளவிலிருக்க வேண்டும், 100 வரைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம், அதற்கு மேல் கேடு, அதுவும் 500 இனைத் தாண்டினால் பெருங்கேடு. தமிழ்நாட்டிலோ சில இடங்களில் அதன் இரு மடங்கினைத் (1000) தொடுமளவுக்கு இருந்திருக்கின்றது.

இதனால் விரைவில் மூச்சுத் தொடர்பான மற்றும் நுரையீரல் தொடர்பான பல நோய்கள் ஏற்பட்டுப் பலர் இறக்கப் போகின்றார்கள். மேலும் பலர் நோய்வாய்ப்படப் போகின்றார்கள். இல்லாத நரகாசுரன் வதம் (அழிப்பு) கொண்டாடி இறக்கப் போகும் நரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
பருவநிலை மாற்றம் தொடர்பான இறுதி எச்சரிக்கை வந்து, சில நாட்களுக்குள்ளேயே, இப் பெரும் சூழல் கேட்டினை ஏற்படுத்திய அன்பே உருவான மதப் பற்றாளர்களையும், அவர்களை வழிப்படுத்தும் (?) மதத் தலைவர்களையும் நினைக்க அதிர்ச்சியாகவுள்ளது. இறுதியாக, தமிழர்களின் உண்மையான தீப நாள், ஒளி நாள் என்பனவாகிய விளக்கீடு விரைவில் வருகின்றது.

மிச்சம் மிகுதியான வெடிகளை அன்றும் வெடிப்பது சிலரின் பழக்கம். அதனைத் தவிருங்கள். அழிவு எல்லாம் ஆரிய விழாவோடு போகட்டும். விளக்கீட்டில் இல்லாதோர், இருண்டோர் வாழ்வில் ஒளியேற்றுங்கள், இருளை விரட்டும் விளக்குகளையும் ஏற்றுங்கள், குறிப்பாக போரிலும் பொதுச் செயல்களிலும் ஈடுபட்டோருக்காக விளக்கேற்றுங்கள். அதுவே சங்கத் தமிழ் மரபு.

☝படங்களும் தரவுகளும் பூலோகத்தினைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய்க் கடலினுள் வைத்த புராணக்கதை அல்ல; மாறாக பூவுலகின் நண்பர்களின் தரவுகள்
நன்றி: வி.இ.குகநாதன்
முகநூல் பதிவு






