உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட நாடுகளே ஒன்று சேருங்கள்!
இந்த மறுகாலனிய வடிவம் என்பது பெயரளவுக்கு ஜனநாயகத்தை அங்கீகரிக்கும் பழைய நவீன காலனிய கால வடி வடிவத்தை விட ஆகக் கொடூரமான ன உலக மேலாதிக்க வெறிகொண்ட நவீன பாசிச வடிவம் ஆகும்.
இத்தகைய சூழ்நிலையில், நவீன திரிபுவாத சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் “சீன குணாம்சம் கொண்ட சோசலிசம்” என்ற கோட்பாட்டை பிரதானப்படுத்துகின்றனர். இது எல்லா நாட்டுக்கும் பொதுவான, சாராம்சமான, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் அதன்கீழ் வர்க்கப் போராட்டத்தையும் மறுப்பதாகும்.
பொருளாதார வளர்ச்சியை (உற்பத்தி சக்திகளை வளர்ப்பது) ஏகாதிப த்திய எதிர்ப்பு கொண்ட “தேசிய விடுதலை இயக்கத்தின் மையக் கடமையாக” மாற்றுவதாகும். இது ஏகாதிபத்திய கோட்பாட்டை எல் லா நாடுகளுக்கும் பொதுவிதியாக்கி பாட்டாளிவர்க்க சோசலிச கோட்பாட்டையும், புரட்சியையும் கைவிடுவதாகும். “தேச விடுதலை போராட்டம், தேச விடுதலை இயக்கம்” இனிமேலும் தேவைப்படாத “புதிய கட்டம்” என்பது மறுகாலனிய வடிவத்தையும் அதன் நவீன பாசிச குணத்தையும் மூடி மறைப்பதாகும். மறுகாலனிய வடிவத்தால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆக்கிரமிக்கப்படுவதையும் கொள்ளையடிக்கப்படுவதையும் பூசி மெழுகுவதேயாகும்.
“புது மொந்தையில் பழைய கள்ளு” என்பது போல டெங்-ஜிஜின்பிங் கும்பல் புதிய வடிவமான மறுகாலனியம் என்ற புது மொந்தையில் “குருச்சேவ் கும்பலின் பழைய திரிபுவாத கள்ளு” மறுகாலனியவாதிகள் எல்லோருக்கும் ஊற்றி பரிமாறப்படுகிறது.

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்
33/17 திருவள்ளுவர் தெரு,
நேரு நகர், வேளச்சேரி,
சென்னை – 42
+91 89256 48977
சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்குமிடம்






