இன அழிப்புக்கு
வெளிப்படையாகவே ஓர் அழைப்பு


ருக்குது, ஆனா இல்ல; நாடாளுமன்றம் – இருக்குது, பேருக்கு இருக்குது. சட்டம், அரசியல் சாசனம் எல்லாம் பேருக்கு இருக்குது.இது தான் நாட்டு நிலைமை.

உண்மையான சாரமும் பின்னணியும் அமெரிக்க ஒற்றைத் துருவ வல்லரசின் தலைமையில் மறுகாலியாக்கக் கொள்கையின் கட்டுப்பாட்டின் கீழ் நெகிழ்ச்சியான ஒரு பொருளாக, மசிவான ஒரு பொருளாக இந்திய நாடு. இதற்கான அரசாங்கம் இருக்குது ஆனா இல்ல!

மேடையில் வெளிப்படையாக இந்து மதவெறிக் கூச்சல்

அரசியல் சாசனம் ‘ நாடு மதச்சார்பற்றது என்று எழுதலாம்;இனிமேல் நாங்கள் கண்ணாமூச்சி ஆடமாட்டோம் என்றும் இன அழிப்புப் படுகொலை நடத்து முசுலீமை அப்புறப்படுத்து “என்று வெளிப்படையாக அறிவித்து வருகிறது காவி(காலி)ப்படை ஹரித்துவார் நகரில் டிசம்பர் 17 முதல் 19 வரை தர்ம சன்சாத் என்ற மதநாடாளுமன்றம் நடத்தி காவிச்சாமியார்கள் ஆட்டம் போட்டு முழங்கி இருக்கிறார்கள்.

காவி (மத) நாடாளுமன்றத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒரு ஆளான பிரபோதானந்த் (இந்து ரக்‌ஷ சேனை) பேசியதைக் கேளுங்கள் : மியான்மரில் நடந்ததை போல, போலிஸ் – இராணுவம் மற்றும் ஒவ்வொரு இந்துவும் ஒன்று சேர்ந்து ஆயுதம் தூக்கி தூய்மைப் படுத்தும் வேலைக்குத் தயராக வேண்டும்”. இதன் பொருள் முஸ்லிம்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதே.

மற்றொரு பேச்சாளர் சாத்வி அண்ணபூர்னா என்ற ‘பெண் துறவி’ சொன்னார்: “முஸ்லிம் இனத்தை அழிப்போம்; ,அவர்களின் ஜனத்தொகையை குறைக்க வேண்டுமானால், அவர்களைக் கொல்ல வேண்டும். அவர்கள் 20 லட்சம் பேர், நாம் ஒரு நூறே பேர் தயார், அவர்களை வெற்றிகரமாக அழித்து விடுவோம்.”

மற்றொரு ஆள் யதி நரசிங்கானந் சரஸ்வதி. இவர் வெறுப்பு அரசியலை எப்போதும் துப்பிக் கொண்டே இருப்பதில் மிகவும் பேர் போனவர், அதற்காக இதுவரை எந்த ஒரு தண்டனையும் அனுபவிக்காதவர் , அவர் சொன்னார்: “முஸ்லீம்களை பொருளதார ரீதியில் அடித்தால் போதாது, ஆயுதம் எடுக்காமல் நாம் பிழைக்க முடியாது…. வாளை காட்டுவதெல்லாம் மேடையில் நடக்கும் வித்தை மட்டுமே…”

இன்னொரு காவி மதகுரு தரம்தாஸ் ஒருபடி மேலே தாவி முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன்சிங்கை “(காந்தியைக் கொன்ற) நாதுராம் கோட்சே வழியில் போய்” படுகொலை செய்ய வேண்டும் என்று கொக்கரிக்கிறார்.

ஏறக்குறைய ‘தர்மசன்சாத்’தின் (மதநாடாளுமன்றம்) தொடர்ச்சியான எதிரொலி போல ‘இந்து யுவ வாகினி’ என்ற இந்து மத குழு டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருக்கிறது. அங்கு டிசம்பர் 19 அன்று பேசிய ஆர்எஸ்எஸ் ஊது சங்கான ‘சுதர்சன் செய்தி’ தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவங்கே என்ற சங்கி அரங்க மேடையிலேயே ஒரு கும்பலுக்கு ‘சத்தியபிரமாணம்’ செய்து வைத்திருக்கிறார். அதாவது இந்து ராஷ்டிரம் அல்லது இந்து நாட்டுக்காக “உயிர் கொடுப்போம், உயிரையும் எடுப்போம்” என்பது அந்த உறுதிமொழி.

கொடூரம்: விளம்பரமாக

அதிர்ச்சியான இந்த அதிரடிச்செய்தி அடிக்கடி கேட்கிற ‘அற்ப செய்தி’யாகவும் ஆக்கப்பட்டுவிட்டது. முசுலிம்களுக்கு எதிரான வெறுப்பு செய்தி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதைத்தொடர்ந்து வன்முறைச் சம்பவம் நடப்பதும் வழமையாகிக் கொண்டே இருக்கிறது. தலித்துகளை சாட்டையால் அடிப்பது, பொதுவெளியில் இழிவுபடுத்துவது சில வருடங்களாக தொடர்ந்து நடக்கிறது. டிசம்பர் 14 அன்று அரியானாவில்’முசுலீம் நம்பிக்கை உள்ளவன்’ என்று கூவிக்கூவி ஒரு இளம் முஸ்லிம் அடித்தே சாகடிக்கப்பட்டார்.

இவை புதியவை அல்ல. ஆனால் இந்த கிரிமினல் செயல் செய்பவர்களை, குற்றவாளிகளை அரசாங்கம் வெளிப்படையாக ஆதரிப்பது புதியது. எடுத்துக்காட்டாக 2017-ல் ஜார்க்கண்ட் மாட்டு வியாபாரி சாட்டையால் அடிக்கப்பட்டார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தினார் ஒரு மத்திய அமைச்சர். 2020-ல் டெல்லி தேர்தல் பிரச்சார ஊர்வலத்தின் போது “தேச துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்” என்று மற்றொரு மத்திய அமைச்சர் கூட்டத்தைப் பார்த்து அறைகூவல் விட்டார். டிசம்பர் 16-ல் ‘இந்துக்கள் வேறு மதத்துக்கு மாற்றப்படுவதை தடை செய்து’ கர்நாடகா சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றியது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக திரளும் கும்பல்களுக்கு இது சாராயம் ஊற்றிக் தூண்டுவது போல.

ஹரித்துவார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களில் ஒரு முக்கிய ஆளான பிரபோதானந்த், உத்தரபிரதேச முதல் அமைச்சரைச் சந்திப்பதையும், அதே சந்திப்பில் உத்தரகாண்ட் முதலமைச்சர் அவரது பாதங்களைத் தொட்டு கும்பிடுவதை ஊடகங்கள் பதிவு இட்டன.

பாஜக கை காட்டும் வழியில் போலீஸ் ஆட்சி

இப்படி இந்துமத வெறி அரசியல்வாதிகள் வெளிப்படையாக ஆதரிப்பதால் கிரிமினல் குற்ற நீதிமன்றங்கள் வாலைக் குழைத்துக்கொண்டு படுமோசமாக நடக்கின்றன. 2020 டெல்லி கலவரங்களுக்குப் பிறகு ‘பாஜக வன்முறைக்கு அழைப்பு கொடுப்பதற்கு’ சாட்சியங்கள் இருந்தும் போலீஸ் அலட்சியம் செய்து வருகிறது. பதிலாக, ‘மோடியின் இந்து மத அடிப்படையிலான CAAவை ரத்து செய்யக்கோரி எதிர்த்தவர்களை’ குறிவைக்கிறது.

உத்தரபிரதேசம் ஹத்ராஸ்(HATHRAS) கிராமத்தில் இளம் தலித் பெண் கூட்டு கற்பழிப்பு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கு பற்றிய உண்மை நிலவரத்தை அறிவித்து எழுதியதற்காக, பத்திரிகையாளரும் இஸ்லாமியருமான சித்திக் கப்பன் என்பவர் ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கலவரம் தூண்டியதாக குற்றவழக்கு. இளம் சித்திக் மீதான பொய் வழக்கு பற்றி உச்சநீதிமன்றமும் முகத்தை திருப்பிக் கொண்டு விட்டது.

அதேசமயம் ‘இந்துத்துவ ஊழியர்கள்’ என்று அழைக்கப்படும் சங்கிகள் செய்த அடாவடிச் செயல்களை அரசு கண்டும் காணாது விடுகிறது, அல்லது, செல்லமாக கடிந்தோ, லேசான குட்டி வழக்கு போட்டோ தள்ளிப் போடுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஹரித்துவாரை போல டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு வெறி தூண்டி முஸ்லீம்களை கொல்ல பேசியது வழக்காக வந்தது. ஒரே மாதத்தில் அதற்கு பிணை கொடுத்துவிட்டார்கள்.. 2002 குஜராத் இன அழிப்பு கூட்டுப் படுகொலைகளில், கலவரங்களில் சம்பந்தப்பட் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்ட 17 பேர் கடந்த 2020-ல் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.

மதச்சார்பின்மை’ தூக்கி வீசப்படுகிறது

1950-ல் புதிய அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் அதன் உள்ளடக்கமாக ‘மதசார்பற்ற’ சரத்துக்களை எழுதிவிட முயன்றார்கள். ‘பிரிவினைக்கு’ ஆளாகி லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட பின்னணியில், ‘நவ இந்தியாவைப் படைக்க அது வழி’ என்றும் வாதிட்டவர்களோடு கலந்து பேசினார்கள்.

ஏழு பத்தாண்டுகள் ஓடிவிட்டன. அரசியல்சாசனத்துக்கு வெளியிலிருந்து ஏதும் அபாயமோ அச்சுறுத்தலோ வந்துவிடவில்லை தான். ஆனால் அதை அலட்சியம் செய்தோ ‘மதச்சார்பின்மை’யை வெட்டித் தள்ளி உதைத்து தள்ளுவதை ஆதரித்தோ நிற்பவர்களிடமிருந்து தான் அச்சுறுத்தல் வந்தது என்பதே உண்மை. இப்படியே போனால் இந்திய சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த குடிமக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் தான் இருண்ட காலம் வரும். வரும் என்பதை விட இப்போது இருண்ட காலம் என்பதே உண்மை.

(ஆதாரம்: Shoaib Daniyal, SCROLL.IN, 23.12.2021)

பதிவு: இராசவேல்

https://scroll.in/article/1013524/open-calls-for-the-mass-murder-of-muslims-are-now-an-every-day-affair-in-india

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here