தமிழ்நாடு முழுவதும் எமது புரட்சிகர தோழமை அமைப்புகள் நவம்பர் 7 ரசிய புரட்சி நாளை ஆலைவாயில் கூட்டம், பொதுக் கூட்டம், பகுதி கூட்டங்கள் நடத்தி சிறப்பித்து வருகிறார்கள்.

தோழர்கள் குடும்பங்களுடன் கூட்டங்களில் கலந்துக் கொள்வதுடன் தமது குழந்தைகளையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்து உற்சாகமாக நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள்.

நீலகிரி

கோத்தகிரியில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது.

ரசிய புரட்சி நிகழ்ச்சியை நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தோழர் புவனேஸ் தலைமையேற்றார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொருளாளர் தோழர் ரவி அவர்கள் முழக்கம் எழுப்பினார்.

நிகழ்வின் தொடக்கமாக சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் சுப்பிரமணி கொடியேற்றினார். நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் கணேஷ் உரையாற்றினார். அதன்பிறகு கல்லூரி மாணவி அருந்ததி அவர்கள் மார்க்சியத்தின் வரலாறு குறித்து உரையாற்றினார். பிறகு இந்திய மாணவர் சங்க கூட்டமைப்பின் தலைவர் தோழர் சுகந்தன் அவர்கள் கண்டன உரையாற்றினார். இதன்பிறகு நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் வாகன பிரிவு அரவேணு பகுதியின் தலைவர் தோழர் தாஸ் அவர்கள் உரையாற்றினார்.

இதன்பிறகு நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் தோழர் செல்வம் அவர்கள் சிறப்பு கண்டன உரையாற்றினார். இதனையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர்கள் வெங்கட் கண்டன உரையாற்றினார். சங்கத்தின் உறுப்பினர் தோழர் ஜெய்சங்கர் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

பிறகு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இறுதியாக, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா நிறைவு செய்யப்பட்டது.

வேலூர்

107 -வது ரசிய சோசலிச புரட்சி நாள் இன்று தினத்தில் வேலூர் மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைப்பு சங்கமான தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் புதிதாக வேலூர் பெரியார் பூங்கா இரண்டாவது கேட்டு அருகாமையில் புதிய கிளை துவங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு மாவட்ட இணைச் செயலாளர் தோழர் திருமலை தலைமை தாங்கினார். வாழ்த்துரை தரைக்கடை கிளைச் சங்க செயலாளர் சேட்டு பேசினார். வேலூர் லாங் பஜார் கிளை சங்க செயலாளர் சரவணன் சங்கமாக இருப்பதின் அவசியத்தை குறித்து விளக்கிப் பேசினார்.

மாவட்ட தலைவர் செல்வம் அவர்கள் நவம்பர் 7 குறித்து பேசினார். ம.க.இ.க வின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராவணன் வாழ்த்துரை வழங்கினார். தோழர் பகத்சிங் குறித்து ஆசாத் பேசினார். ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் வாணி அவர்கள் நவம்பர் 7 குறித்தும் சங்கமாக இருப்பது குறித்தும் பேசினார்.

சிறப்புரையாக மாநில இணைச் செயலாளர் விகேந்தர் அவர்கள் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்! என்ற தலைப்பின் கீழ் இன்றைய தேவை குறித்து விளக்கிப் பேசினார். இறுதியாக, நன்றியுரை மாவட்ட பொருளாளர் பாபு தெரிவித்தார். விழாவில் கிளை சங்க தோழர்களும், நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்

புதுச்சேரி

புதுவையில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான விம்கார் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பாக 107 -வது ரசிய சோசலிச புரட்சி தினத்தை முன்னிட்டு தோழர் மகேந்திரன் செங்கொடி ஏற்றினார். தொழிலாளர்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான கோத்ரேஜ் சங்கத்தின் சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் சரவணன் கொடியேற்றி ரசிய புரட்சி தினம் ஏன் கொண்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உரை நிகழ்த்தினார். இதில் தொழிலாளர்கள் ஆர்வமோடு கலந்துக்கொண்டு சோசலிச புரட்சி நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

107 -வது ரசிய சோசலிச புரட்சி தினமான இன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி மாநிலத்தின் இணைப்பு சங்கமான நியூ இந்தியா பாலிமர் புட்ஸ் தொழிலாளர்கள்  சங்கத்தில் செங்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

அழுக்கு சட்டை அரியணை எறிய நாளான இன்று நமது இந்திய நாட்டின் உழைக்கும் வர்க்கத்திற்கான ஆற்ற வேண்டிய கடமைகள் பல உள்ளது.  நம்மை ஆளுகின்ற மோடி அரசின் உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை கொண்டு வந்து ஒடுக்கி வருகிறது. பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு தொழிலாளர் முண்ணனியை கட்டி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆலைவாயில் கூட்டம் நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here