ந்தியாவில் உள்ள வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குள் உரையாடும் போது ஆங்கிலத்தை கைவிட்டு இந்தியில் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும், ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்; ஒன்பதாவது வகுப்பு வரையிலும் ஹிந்தி ஆரம்பப் பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்கிறார்.

மத்திய அமைச்சரவையில் 70% நிகழ்ச்சி நிரல்கள் இந்தியில்தான் தயாரிக்கப் படுகின்றன என்றும் எட்டு வட கிழக்கு மாநிலங்களில்  22,000 இந்தி கற்பிக்கும் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு  இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

பத்தாம்வகுப்பு வரையிலும் இந்தியை கட்டாய பாடமாக வைக்க அந்த மாநிலங்கள்  ஒப்புக்கொண்டு விட்டனவாம்.

இந்தி மொழி இந்தியா முழுமைக்குமான மொழியாக இருக்க வேண்டும். அது இந்தியாவின் அடையாளமாக உலக அரங்கில் திகழ வேண்டும் என்கிறார்.

இதனால் பிற மொழி பேசும் மக்களுக்கு என்ன பாதிப்பு?

பிற மொழி பேசும் மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான மொழியாக இந்தியை வைத்துக் கொண்டால் அது இந்தியாவிற்குள் மட்டும் தான் பயன்படும் .  உலகளாவிய தொடர்பு மொழி என்ற வகையில் ஆங்கிலத்தை கற்றால்தான் இந்தியாவிலும் உலக அளவிலும் நாம் தொடர்பு  கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

கல்வி, வேலைவாய்ப்பு  போன்ற  போட்டித் தேர்வுகள்  இந்தியில்  நடத்தப்படும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இதில்  எளிதாக  வெற்றி பெறுவார்கள். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும்.

ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் ஆன்மாவையே பலி வாங்க நினைக்கிறது!

இந்தியா இன அழிப்புக்கு தயாராகிறதா?

அரசு அலுவலகங்களிலும் அரசின் தொழில் நிறுவனங்களிலும் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோர் வேலைக்கு அமர்த்தப்பட்டு விடுவார்கள். பிறமொழி பேசும் மக்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.

“ஒரே நாடு, ஒரே மொழி” என்று வரிசையாக ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்க துடிக்கும் காட்டுமிராண்டி கும்பலான ஆர்எஸ்எஸ் முன்வைப்பதை அனுமதித்தால் நாடு முழுவதும் ஒரே பண்பாடு என்று  அமுல்படுத்த துவங்குவார்கள்.

இதன் விளைவு நாம் என்ன துணி உடுத்துவது , எந்த உணவை உண்பது என்பதிலிருந்து  அனைத்தையும் அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். இந்தி பேசாத மக்களின் உணர்வுகள் நசுக்கப்படும். இந்தி பேசாத மக்கள் தமது சொந்த மண்ணிலேயே உரிமைகள் ஏதுமற்ற அகதிகளாக வாழ நேரிடும்.

பார்ப்பன இந்திய தேசியத்திற்கு எதிராக ஒரு நூற்றாண்டு காலம் போராடி பெற்ற உரிமையான மொழி உரிமை பறிக்கப்படுகிறது!

இந்தியா என்பதே பல்வேறு மொழி பேசுகின்ற, தேசிய இனங்களின் கூட்டாட்சிதான் என்பதை மறுத்து, இந்து- இந்தி- இந்தியா என்ற ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவத் துடிக்கின்ற ஆர் எஸ் எஸ்- பாஜக கும்பலின் கனவுகளை தகர்த்தெறிவோம்!

இந்தி பேசாத பல்வேறு மொழிகளை தாய்மொழியாகக் கொண்டு வாழ்கின்ற மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்போம்! கட்டாய இந்தித் திணிப்பை முறியடிப்போம்.

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here