விவசாயத்துறையை காா்ப்பரேட்டுகள்
விழுங்குவது பற்றி
பஞ்சாப் தேர்தல் கட்சிகள் அடக்கி வாசித்து ஏன்!


பேராசிரியர் சுக்பால் சிங்
கௌரிலங்கேஷ் செய்திகள்

20.02.2021.

வரலாற்றுச் சிறப்புள்ள ஓராண்டு விவசாயிகள் போராட்டத்தின் அரசியல் அடிநாதம் என்ன? அது கார்ப்பரேட் எதிர்ப்பு – டெல்லிக்கு வெளியே பல பத்தாயிரம் விவசாயிகள் முகாமிட்டார்கள். மூன்று சட்டங்களை உடனே திரும்பப் பெறு என்று முழங்கினார்கள். கோடிகளில் மிதக்கும் முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் கிராமங்களில் நுழைந்து விவசாயத்தையே விழுங்கி அழிக்கப் போகிறார்கள் என்று அபாய எச்சரிக்கை விட்டார்கள். எது எப்படிப் போனால் என்ன என்பதுபோல் பஞ்சாப் மாநிலப் பெரிய கட்சிகள் இது பற்றி மூச்சுக் கூட விடவில்லை. ஏன்? தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு சொல்கூட பேசாமல் பம்மி இருந்தார்கள். ஏன்?

விவசாய நெருக்கடி, மிக மிகக் கொடிய வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், குண்டர்கள் “மாஃபியா அரட்டல்- உருட்டல்- மிரட்டல். இந்தப் பின்னணியில் பஞ்சாபில் 117 இடங்களுக்கான தேர்தல் பஞ்சாப் மக்கள் மொத்த அதிர்ச்சியோடு மன அமைதியற்று போய் ஒரு மாற்றம் வேண்டும்” என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் பாரம்பரியமாக ஆதிபத்தியம் காட்டி வந்த காங்கிரஸ் அகாலிதளத்துக்கு மாற்றாக வேறு கட்சி இல்லாத இந்த நேரத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உள்ளே நுழைந்து இருக்கிறது. ஒரு மாற்றம் இல்லை என்றால் முன்னேற முடியாது என்ற கருத்து மக்களிடம் வளர்ந்து வருவதை மோப்பம் பிடித்து விட்ட ஆம் ஆத்மி காங்கிரசுக்கு சவால் விட்டது. மார்ச் 10 முடிவுகள் வந்துவிடும் என்றாலும் ஆம் ஆத்மி பெரும்பான்மையாக வந்துவிடும் என்று ஆய்வு ஆருடம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

தேர்தல் பிரச்சாரக் களம் சூடு படத் தொடங்கியதுமே பெத்த கட்சிகள் ஓடிவா ஓடிவா இலவச மின்சாரம் தரேன் தண்ணி காட்றோம் பெண்களுக்கும் மாத அலவன்ஸ் விவசாயிகளுக்கு கடன் வட்டி தள்ளுபடி என்றெல்லாம் அள்ளிவிட்டார்கள். கேப்டன் அவலமான ஆட்சியால் மக்கள் வெறுப்படைந்து விட்டதை பார்த்த காங்கிரஸ் தலைகள் கேப்டனுக்கும் சித்துவும் ஊர் சண்டை வலுப்பதை நிறுத்த சரண்ஜித் சிங் சன்னி என்ற ஒரு தலித் தலைவரை ’முதலமைச்சர் வேட்பாளராக’ அறிவித்தது; ராகுல்காந்தி சன்னி ஏழை எளியவர் என்று ஊதி ஊதி பெரிசாக்கி பிரச்சாரம் செய்து பார்த்தார்.

மாநிலத்தில் தலித்துகள் 32% என்பதால் தலித் தலைமை காட்டி காங்கிரஸ் சாதகமாக்கிக் கொண்டு விடுமோ என்று அஞ்சிய எல்லா கட்சிகளுமே அதை சரி கட்டுவதற்காக தலித்துகளுக்கு சலுகை பேசி தாஜா செய்ய தொடங்கினார்கள். சிரோன்மணி அகாலி தளம் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி கைமேல் துணைமுதல்வர் பதவி தலித்துகளுக்கு என்று அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி முகம் பற்றி எடுத்துச் சொல்லி மாநில கட்சி என்ற முறையில் உண்மையான கூட்டாட்சி தத்துவத்துக்காக வாதாடும் என்று SAD அள்ளி விட்டது. தேசம் காப்போம் என்று ஊதிப் பார்த்த பாஜக தலித் தான் அடுத்த முதலமைச்சர் என்று தன் பங்குக்கு சொல்லி வைத்தது. மோடி பிரச்சார மேடைகளில் வழமையான ஸ்டைல் காட்டி நேரு-காந்தி குடும்பத்தைச் சாடி நாடு மோசமான நிலைக்கு போனதற்கு அவர்கள்தான் காரணம் என்று உரக்க கத்தி தீர்த்தார். சன்னிக்கு எதிரான காங்கிரசுக்குள் இருக்கிற சீக்கிய பிரிவை உசுப்பி மணல் கொள்ளை, கேபிள் கொள்ளை, மாஃபியா கும்பல் துரத்திவிட்டு ஊழல் இல்லா ஆட்சி தருவோம் என்று வாளை வீசினார்கள். ஆம் ஆத்மி கட்சியோ டெல்லி மாடல் நல்லாட்சி என்று விளம்பரம் செய்தது.

ஏற்கனவே தலை வரை கடலில் மூழ்கி விட்ட பஞ்சாபில் அடுக்கடுக்காக மேலும் சலுகைகளை ஆளாளுக்கு வீசினார்கள். மக்களுக்கு என்ன பிரச்சனை, விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை; விவசாயத்துறைக்கு வெளியே வேலை வாய்ப்பு எப்படி வரும் முக்கியமான எந்த ஒரு பொருளாதார பிரச்சினை பற்றியும் ஒரு கட்சி கூட தேர்தல் பிரச்சாரத்தில் விவாதிக்கவில்லை.

நாட்டையே குலுக்கிய விவசாய போராட்டத்திற்குப் பிறகு ஒரே மாதத்திற்குள்ளாக தேர்தல். எல்லா விவசாய சங்கங்களும் ஓராண்டு இயக்கம் எடுத்து சவால்விட்டு, திருட்டு முழி முழித்த மோடி மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்கிய சூழ்நிலை; மோடிக்கு தோல்வி மட்டுமல்ல கார்ப்பரேட்டுகளுக்கு பின்னடைவு; உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் இந்திய விவசாயத்துறைகுள்ளே வேகமாக குழிப்பறித்து உற்பத்தியை களவாண்டு விடலாம்; சந்தையில் விளையாடலாம் உற்பத்தியை நுகர்வதற்கு போட்டியில் நின்று வென்றுவிடலாம் என்று கண்ட கனவு கொஞ்சம் நொண்டி விட்ட சூழ்நிலை

மக்கள் பெருந்திரள் போராட்டத்தின் மூலம் பஞ்சாபின் விவசாயிகள் அதானி, அம்பானியை இலக்கு வைத்து தாக்கி எதிர்த்தார்கள். இது இந்திய வரலாற்றிலேயே முதல் முறை. மூன்று (மோடி) சட்டங்களும் விவசாயத்தை கையில் எடுத்து கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் தந்திரம் என்று நேருக்கு நேர் குற்றச்சாட்டை வைத்த போராட்டம். விவசாயிகளின் நிலைப்பாட்டை எல்லாக் கட்சிகளுமே ஒருவித நிர்பந்தத்தில் அப்போது ஏற்றன. இந்த நேரம் பஞ்சாபுக்கு வந்த ராகுல் காந்தி “கார்ப்பரேட் குடும்பங்களின் கையில்” அவர்களது நலனுக்காக ஆளும் ஒரு பொம்மையே மோடி அரசாங்கம் என்று சொல்ல வேண்டியிருந்தது.

ஆனால் தேர்தலின்போது அறிக்கைகளிலும் பிரச்சாரங்களிலும் எந்த கட்சிகளுமே அப்படி பேசவில்லை. பஞ்சாப் விவசாயத்துறையை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கப் போவது பற்றியோ, அதை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்றோ ஒரு கட்சியும் வாய் திறக்கவில்லை. நாடு முழுக்க உலகமய – தனியார்மய – தாராளமய, நவ தாராள கொள்கையை முன்னே நிறுத்தி மத்திய அரசு எல்லா வளங்களையும் மேலடுக்கு தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளுக்கு வாரி இறைப்பதே எல்லா பொருளாதார பிரச்சினைக்கும் ஆணிவேர் என்று ஒருத்தரும் வாய் திறக்கவில்லை.

பஞ்சாப் பொருளாதாரத்தில் மூன்று துறைகள் இருக்கின்றன – விவசாயம், தொழில்துறை சேவைத்துறை. தொழில் துறையிலும் சேவைத் துறையிலும் கார்ப்பரேட் கட்டுப்பாடே நீக்கமற உள்ளது; விவசாயத் துறையிலும் உள்ளீடு பொருட்கள் எல்லாமே கார்ப்பரேட்டுகளின் தயாரிப்புதான்; பசுமை புரட்சி மாடலை எடுத்துக்கொண்டால் உரம், பூச்சிக்கொல்லி, பூச்சி மருந்து, ஹைப்ரிட் விதைகள், நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் எல்லாமே கார்ப்பரேட்டுகள் விவசாயத்தை ஆதிக்கம் செய்ய ஏற்பாடு செய்ததே. விளைவு – ஆளும் வர்க்கங்கள் எதிர்கால எதிர்மறை விளைவுகளை அலட்சியம் செய்ததே.

இன்று பஞ்சாப் எங்கும் கடன் தொல்லை, தற்கொலை, விவசாயத்தில் இருந்து சிறு (ஏழை) விவசாயிகள் தூக்கி வெளியே வீசப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல; பசுமை புரட்சி, நிலத்தடிநீரை உறிஞ்சி எடுத்து விட்டது; நீலம் நீர் இரண்டும் விஷம் ஆகிவிட்டது; நிலம் மலடாகி விட்டது. பசுமை புரட்சி அரங்கேறியதை ஆட்சியாளர்கள் வரவேற்றார்கள். அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை.

இன்று திரும்பப் பெறப்பட்ட 3 விவசாய சட்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள். பசுமைப் புரட்சி, உரம் விதைகள் தொழில்நுட்பம் போன்ற விவசாய உள்ளீடுகளில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை கொண்டு வந்தது என்றால் மூன்று சட்டங்கள் விளைச்சளிலும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டை கொண்டுவர இருந்தது.

உலகப் பொருளாதாரம் தேக்கநிலை நெருக்கடியில் சென்று கொண்டிருக்கிறது. தொழில்துறை வளர்ச்சி விகிதம் சரிகிறது. எனவே கார்ப்பரேட் உலகம் விவசாயத்துறையில் முதலீடு செய்யும் பெரிய வாய்ப்பை கண்டு கொண்டு விட்டது. உணவு உற்பத்தி சந்தை இரண்டிலும் நாக்கில் எச்சில் ஊற இறங்க துடிக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகள் மிக மிக பெரிய அளவில் கணினி மையப்படுத்த ரோபோக்களை பயன்படுத்த செயற்கை அறிவு ஆற்றலை விரிவுபடுத்த தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதிவேகமாக விவசாயிகள் நெட்டி வெளியே தள்ளப்பட்டு கம்பெனிகள் குடிபுகுந்து விடுவார்கள்; நடுத்தர, ஏழை விவசாயிகள் கூலிகள் ஆகிவிடுவார்கள்; பணக்கார விவசாயிகளும் ஒப்பந்த விவசாயத்திற்கும் கம்பெனிகளுக்கு நிலங்களை குத்தகை விடவும் மாறிவிடும் சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் துறை ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்து வருகிறது பஞ்சாபுக்கு வளர்ச்சி கொண்டு வருவோம் என்ற முழக்கத்தின் கீழே தேர்தல் அறிக்கைகளில் எல்லா அரசியல் கட்சிகளும் கூற தொடங்கிவிட்டார்கள். கார்ப்பரேட்டுகளை ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்க தொடங்கிவிட்டார்கள்.

தொடரும்…

தமிழில்

  • இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here