ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு படுகொலை தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை ஊடகங்களில் வெளியாகி மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் தமிழக அரசும், போலீசும் சேர்ந்து கார்ப்பரேட் முதலாளி வேதாந்தா நிற்காத படுகொலை நடத்தியுள்ளார்கள் என்று அம்பலமாகியுள்ளது.
13 உயிர்களை காவு கொண்ட இந்த படுகொலைக்கு காரணமான போலீசையும் அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், கலெக்டர் அலுவலகத்தில் புகுந்து கலவரத்தை உருவாக்கிய சிசிடிவியில் பதிவான 20 பேர் யார் என்றும், தெரியபடுத்த வேண்டும். இவர்கள் அரசினால் ஏவப்பட்ட கூலிப்படையா? அல்லது வேதாந்தா வினால் ஏவப்பட்ட கூலிப்படையா?
இது குறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் விளக்குகிறார்.
மேலும் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி மதுரையில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடு, சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடு என மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மதுரை வாழ் மக்களை அழைக்கிறோம்.