மிழ்நாட்டை தமிழக வெற்றிக் கழகம் என்ற பாசிச கோமாளி  விஜய் தலைமையிலான கட்சி  மூலமாக ஆட்சி கைப்பற்றப்பட்டதிலிருந்து ஊடகங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் தனி நபர்கள் தெரிவிக்கின்ற கருத்துகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. தனக்கு எதிராக வருகின்ற விமர்சனங்களை கீழ்த்தரமான வசவுகள், ஆபாச வசவுகள் மற்றும் வாய்க்கு வந்தபடி பேசுவது என்ற முயற்சிகளின் மூலம் மூலம் சரி கட்டுவதற்கான வேலை நடந்து கொண்டுள்ளது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதர்மம் மனோஜ் நடத்திய இணையதளம் முதல் பாஜக ஆதரவு பெற்ற யூ டியூபர் மாரிதாஸ் வரை தமிழக வெற்றிக் கழகத்தின் மீது விமர்சனத்தை முன்வைக்கின்றார்கள். அவர்களின் அமைச்சர்கள் மீது குறிப்பாக ஆதவ் அர்ஜுனா குடும்பத்தினர் மீது சில ஆதாரங்களை காட்டி விமர்சிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக முடக்கப்படுகிறார்கள் மற்றும் கைது செய்யப்படுகிறார்கள்.

திமுக ஆட்சியில் இருந்தபோது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை ஜனநாயக விரோதம், கருத்துரிமை பறிப்பு என்று கூச்சலிட்ட பலரும் தற்போது நடக்கின்ற இந்த கருத்து சுதந்திர பறிப்பு, மிரட்டல்கள் கைது பற்றி அனைத்து துவாரங்களையும் பொத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல யூ டூ புரூட்டஸ் மைனர் முகநூல் பக்கம் முடக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் பற்றி ஆவணப்படம் தடை செய்யப்படுகிறது. பாசிச கோமாளி விஜய்யை விமர்சித்து வெளி வருகின்ற முகநூல் பக்கங்கள் மற்றும் வீடியோக்கள் ஊடக கார்ப்பரேட் மெட்டாவுக்கு ரிப்போர்ட் அடிக்கப்பட்டு நீக்கம் செய்யப்படுகிறது. ஆனால் பாசிசம் பற்றி  நக்கல் நையாண்டி செய்த கூமுட்டைகள் இதைப் பற்றி எல்லாம்  வாயை திறப்பதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் பாசிசம் தோன்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்று பேசிய மாவோயிஸ்ட் கட்சியின் முன்னோடிகளான மக்கள் யுத்த குழுவினர் எமது பல்வேறு கட்ட விளக்கங்கள்; சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு பாசிசம் பற்றி ஒரு புரிதலை உருவாக்கிக் கொண்டனர்.

மக்கள் யுத்தக் குழுவின் சார்பில் வெளிவந்த முன்னோடி( radicals )பாசிசமா பாயாசமா என்று கேலி செய்தது. அதிலிருந்து மாவோயிஸ்ட் கட்சியாக மாறிய பிறகும் பாசிசம் குறித்தும், பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு பல்வேறு நாடுகளில் முன்வைக்கப்பட்ட ஐக்கிய முன்னணி தந்திரம் குறித்தும் தெளிவான பார்வை இன்றி செயல்பட்டுக் கொண்டிருந்தனர். தமிழகத்தில் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் இன்று வரை, “பாசிசம் உள்ளே பூந்திடும்” என்று நக்கல் நையாண்டி செய்து பதிவுகளை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:

 நடிகர் விஜய் மாஸ் ஹீரோ! முதல்வர் விஜய் ஹீரோவா – வில்லனா?

 கவர்ச்சி மோக – பொறுக்கி அரசியலும் நடிகர் விஜய் பதவியேற்பும்!

அதுபோல இடதுசாரிகள் என்ற போர்வையில் உலவுகின்ற பல்வேறு குட்டி முதலாளித்துவ பிரிவினர், புரட்சிகர அமைப்புகளில் தாக்கு பிடிக்க முடியாமல் ஓடிப் போனவர்கள் முதல் பாசிச பாஜக வரை புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் திமுகவை ஊசலாடுகின்ற சமரச சக்தி என்ற முறையில் அணுகி ஐக்கிய முன்னணிக்கு முயற்சி மேற்கொண்டு வருவது மற்றும 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மூடு டாஸ்மாக்கை இயக்கம் முதல் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டு நடவடிக்கை முயற்சிகள் மேற்கொள்வது ஆகியவற்றை தொடர்ச்சியாக நக்கலடித்தும், நையாண்டி செய்தும் பல்வேறு பதிவுகளை போட்டு வருகின்றனர்.

பாசிச எதிர்ப்பு என்பதில் திமுக உள்ளிட்ட ஊசலாடுகின்ற சமரச சக்திகளை பயன்படுத்திக் கொண்டுதான் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பதும், அவர்களின் பின்னால் திரண்டுள்ள கோடிக்கணக்கான மக்களை புரட்சிகர அமைப்புகளின் பக்கம் கொண்டு வருவதற்கே இந்த அமைப்புகளுடன் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது; அவர்களின் தலைமையின் ஊசலாட்டத் தன்மையை அம்பலப்படுத்துவது போன்றவற்றின் மூலம் தான் பாசிசத்தை முறியடிக்க முடியும் என்கிறது புதிய ஜனநாயகம்.

இவ்வாறு முன் வைப்பதாலேயே புரட்சியே கைவிட்டு விட்டனர்; ஆளுங்கட்சியுடன் ஒன்று சேர்ந்து விட்டனர்; திமுகவுக்கு சொம்பு தூக்குகின்றனர் என்று வசை பாடுவது அவதூறுகளை பரப்புவது என்ற முறையில் மேற்படி கூமுட்டைகள் தனது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தை மறைத்துக் கொண்டனர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் முற்போக்கு என்று பேசிக்கொண்ட சிலரும், குறிப்பாக வினவு கும்பலின் சித்தாந்த தலைவர்களில் ஒருவராக இருந்த யூ டியூபர் திருவாளர் ஃபெலிக்ஸ் ஜெராக்ஸ் உட்பட தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பாசிசத்தின் பி டீம்களின் மத்தியில் முற்போக்கு தேடிக் கொண்டுள்ளனர்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளை தனது அடிப்படை கொள்கையாக தெரிவித்த போதிலும் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய கவர்னரை கண்டிக்க வக்கற்ற நிற்பது முதல் மேகதாட்டு அணை கட்டுவதற்கு காங்கிரசின் சிவக்குமார் துடித்துக் கொண்டிருப்பதை எதிர்த்து வாயை திறக்காதது வரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான பாசிச கோமாளி விஜய் ரெட்டை வேடம் பூண்டு நிற்பதும், உண்மையில் பாசிசத்துடன் கைகோர்க்க ஆளாய் பறந்து கொண்டிருப்பதும் தான் உண்மை நிலவரம் ஆகும்.

படிக்க:

 ரோபோ எந்திரனை மனிதனாக்கினார் இயக்குனர் ஷங்கர். அமைச்சர்களை ரோபோவாக்குகிறார் பாசிச கோமாளி விஜய்

 சந்தேகமே இல்லை! விஜய் தற்குறிதான்! தலைக்கனமேறிய அசல் சங்கிதான்!

இந்தப் பின்னணியிலேயே தனக்கு எதிரான கருத்து பிரச்சாரங்கள் யூ டியூபர் – களின் விவாதங்கள்; அவர்கள் போடுகின்ற வீடியோக்கள் ஆகியவற்றை மட்டுறுத்தல் (Moderation), ரிப்போர்ட் அடித்து அதனை முடக்க முயற்சிப்பது, அவ்வாறு நடக்கவில்லை என்றால் போலீசை ஏவி கைது செய்வது, தனிப்பட்ட முறையில் மிரட்டல்களை விடுப்பது, தனது அல்ற சில்ற கும்பலை வைத்துக் கொண்டு கருத்து பிரச்சாரத்திற்கு எதிராக ஆபாச வக்கிர பதிவுகளை போடுவது என்ற முறையில் தனது கீழ்த்தரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இவையெல்லாம் ஏதோ ஜனநாயக ரீதியாக நடப்பது போலவும், பாசிசம் நேரடியாக வந்து கூமுட்டைகளின் கழுத்தை நெறித்தால் மட்டும் தான் பாசிசம் ஆட்சிக்கு வந்துவிட்டது என்று புரிந்து கொள்வார்கள் போலிருக்கிறது.

பாசிசத்தை அதன் துவக்க கட்டத்திலேயே முறியடிப்பதற்கு தயாராக இல்லாத யாரும் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்று அம்பலப்படுத்தினார் தோழர் டிமிட்ரோவ். ஆனால் தமிழகத்தில் பாசிச அடக்குமுறைகள் துவங்கியுள்ளது மட்டுமின்றி இந்தியாவில் பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்ற சூழலில் கூட அதற்கு எதிராக ஐக்கிய முன்னணி கட்டுவது பற்றியோ, இடதுசாரிகளின் ஒற்றுமை பற்றியோ, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் இணைந்து தற்காலிக இடைக்கால அரசாங்கம் அமைப்பது பற்றியோ எந்த விதமான கருத்தும் இல்லாமல் இருக்கின்ற பல வகையான திருத்தல் வாதிகள், போலி இடதுசாரிகள்,  சில மாஜி புரட்சியாளர்கள் விஜயை ஆதரிப்பதில் வரிசை கட்டி நிற்கின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிவது மட்டுமின்றி இந்தியாவிலேயே பாசிச எதிர்ப்பு மற்றும் ஆரிய பார்ப்பன கனவுகளுக்கு எதிராக களமாடுகின்ற பொருள் முதல்வாத மரபு; பார்ப்பன எதிர்ப்பு மரபு ஆகியவற்றை தொடர்ச்சியாக உயர்த்தி பிடிப்பதன் மூலம் தான் எதிரிகளை வீழ்த்த முடியும் என்பது மட்டுமல்ல. எதிரிகளுக்கு ஆதரவாக ஐந்தாம் படையாக புறப்பட்டு உள்ள கூமுட்டைகளையும் திருத்த முடியும்.

  • ஆல்பர்ட்

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here