கேட்கிறவன் கேனையனாக இருந்தால் பூனை புல்லட் ஓட்டும் காலம் இது. டிஜிட்டல் மாஃபியா கும்பல் மூலமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பாசிச கோமாளி விஜய் ஆட்சியின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் நடந்த ஆலோசனைகள், பரிசீலிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பார்க்கும்போது எந்திரன் படம் நமக்கு நினைவுக்கு வருகிறது.

இந்த ஆலோசனைக் குழு கூட்டம் நடந்த நேரம் வெறும் 1.25 மணி நேரம்தான் ஆனால் அதற்குள் 438 திட்டங்களை பரிசீலித்து அதற்கு முதலமைச்சர் ஆலோசனை கூறியதாக உலக மகா உருட்டு ஒன்றை உருட்டி உள்ளனர்.

புதிய ஜனநாயகம்  தினசரி இதழில் காத்திரமான கட்டுரைகளை எழுத வேண்டும். பாட்டாளி வர்க்கம் சந்திக்கின்ற பிரச்சனைகளையும், உலக அரசியல் முதல் உள்நாட்டு அரசியல் வரை பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் பார்வையில் நின்று கட்டுரைகளை எழுத வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற கோமாளித்தனங்களை பார்க்கும் போது அதை விமர்சித்து எழுதாமல் இருக்க முடியவில்லை.

கடந்த சில வாரங்களாக புதிய ஜனநாயகம் தினசரி வெளியிடுகின்ற கட்டுரைகளுக்கு பின்னூட்டம் போடுகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச குண்டர் படையின் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திடமிருந்து, ஆபாச – வக்கிர வசனங்கள், வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு வக்கிரங்கள், அவர்களின் மூளையில் இதுவரை என்ன உள்ளதோ அதை எழுத்துகளாக பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க தமிழகத்தை ஆட்சியைப் பிடித்துள்ள பாசிச கோமாளி விஜய் மற்றும் அவரது சகபாடிகள் அடிக்கின்ற கொட்டத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று எழுதினால், திமுக ஆட்சியில் வாயை திறக்கவில்லை என்பதுதான் சங்கிகளும் தற்குறி கூட்டத்தினரும் கொடுக்கின்ற பதிலாக உள்ளது.

‘தூய சக்தி’ ஆட்சியில் அதன் அமைச்சரவை உறுப்பினர்கள் அபார சக்தியுடன், எந்திரன் பட பாணியில் மக்கள் நலத்திட்டங்களை 12 வினாடிக்கு ஒரு திட்டம் என்ற வீதத்தில் பேசி முடித்துள்ளதை பார்க்கும்போது 2030 ஆம் ஆண்டு தமிழ்நாடு உலகின் முதல் ‘வளர்ச்சி பெற்ற நாடாக’  அதாவது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி ‘வளர்ச்சியில்’ முன் வரிசையில் நிற்கப் போகிறது.

இத்தகைய சாதனை புரிந்துள்ள அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், “இன்றைய தினம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் வரும் காலங்களில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 436 திட்டங்களை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு துறையும் என்னென்ன இலக்குடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரிவான அறிக்கையை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

காலை 10:05க்கு துவங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் 11:20க்குள் முடிந்துள்ளது இந்த 1.25 நிமிடங்களுக்குள் 438 திட்டங்களைப் பற்றி பேசியுள்ளனர் என்ற செய்தி தமிழக மக்களையும், வளர்ச்சி திட்டங்களையும் பற்றி இந்த தற்குறி கும்பலின் பரிசீலனை முறையையும், மக்கள் பிரச்சனைகளை பற்றிய இவர்களின் கண்ணோட்டத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

படிக்க:

 சந்தேகமே இல்லை! விஜய் தற்குறிதான்! தலைக்கனமேறிய அசல் சங்கிதான்!

 விஜய்யின் ‘சிங்கப்பெண் அதிரடி படை’யும்  கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலையும்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் படித்திருந்தாலும் சரி; படிக்காமல் இருந்தாலும் சரி; தற்குறியாக இருந்தாலும் சரி; புத்திவானாக இருந்தாலும் சரி, ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகார வர்க்கம், போலீசு மற்றும் நீதித்துறை இவர்களை இயக்குகின்ற முதலாளிகள் என்ன நினைக்கின்றார்களோ அவை தான் திட்டங்களாக அமல்படுத்த முடியும் என்பதெல்லாம் தெரிந்த கதைதான்.

என்றாலும் மக்களை ஏமாற்ற ஒரு அளவே இல்லை என்ற அளவிற்கு இந்த தற்குறிகளின் அராஜகம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. ரீல்ஸ் மோகத்திலும் வாங்கிய காசுக்கு  மேல் மாரடிக்கின்ற ரெட் பிக்ஸ் ஜெரால்ட் முதல் திடீர் திடீரென்று தோன்றியுள்ள பல்வேறு பிழைப்புவாதிகள் வரை இத்தகைய அராஜகங்களுக்கு காவடி தூக்கி வருகின்றனர்.

‘ தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ என்ற கீழ்த்தரமான பாடல்களை பாடி திரையுலகில் கவர்ச்சி நாயகனாக வலம் வந்த திருவாளர் விஜய் அரசியலில் குதித்த பிறகு பாசிச கோமாளியாக மாறி உள்ளார் என்பதற்கு முதல் அமைச்சரவை கூட்டம் மற்றும் அதில் விவாதிக்கப்பட்ட நலத்திட்டங்கள் பற்றிய விவரங்கள் ஆகியவை சாட்சியமாக உள்ளன.

இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி எழுதினாலோ,  பேசினாலோ ஆறு மாத காலம் அமைதியாக இருக்கிறேன் என்றார்கள்; ஆறு நாள் கூட தாங்கவில்லை என்று கூச்சலிடுகின்றார் பாசிச கோமாளி விஜய்.

“மாற்றம் நான் ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியில் இருந்து அமுல்படுத்தப்படும்” என்று தொண்டை கிழிய ஸ்கிரிப்ட் வசனங்களை கத்திக் கொண்டிருந்த இந்த பாசிச கோமாளி ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலம் முடிகின்ற தருவாயில் செய்துள்ள விவரங்களை தொகுத்து பார்த்தால், வெறும் வெத்து வெட்டு அறிவிப்புகள்; ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட திட்டங்களை பெயர் மாற்றி அறிவிப்பது; அதைவிட கார்ப்பரேட்டுகளுக்கு அறைகூவல் விடுத்து மூலதனத்தை தமிழகத்தில் கொட்டுவதற்கு ஒற்றை காலில் நின்று தவம் புரிவது போன்றவை அனைத்தும் தமிழகத்தை இந்திய ஒன்றியத்திலேயே பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக மாற்றப் போகின்ற திசையில் வேகமாக  நடை போட துவங்கியுள்ளது.

இத்தகைய அவலத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்பதுதான் நாம் முன்வைக்கும் செய்தியாகும்.

  • செட்டில்டு சண்முகம்

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here