வ்னர் பீடி —
புகைகிறது,
வெறுமனேபுகைகிறதா ?
ஆர்எஸ்எஸ் டெல்லி கம்பெனி
கொளுத்திவிடுவதால் புகைகிறது,
தெளிவாய்ப் புரிகிறது.
வேறுஎதுவும் வெடிப்பதற்காகப் போட்டதா,
இனி தெரியும் !
இப்போதைக்கு நாமறிந்து
கவ்னர் பீடி —
புகைகிறது…..

ரொம்பநாளா உள்ள
பழைய பிரிட்டிஷ் பிராண்ட்
மேதகு சின்ன பீடி ( சுருட்டு ) கவ்னர்;
பெரிய சுருட்டு
டெல்லி என்கிறார்கள்.
அடி ஆத்தீ, எம்மாம் பெரிய
பங்களா – தோட்டம், காடு, அரமணை ?
150 ஏக்கராமில்லே ?

இதுதான்யா கவ்னர் வூடு !
என்ன வளமான பூமி?
உழுது பயிரிட்டால்
ஆயிரம் குடும்பச் சாப்பாட்டுக்கு ஏத்த
நெல்விளைச்சல்  வருசத்துக்கும் காணும்,
வேலைக்கு ஆகும்;
சென்னைநகரிலிருந்து
கண்ணகிநகருக்குத் தூக்கிஎறியப்பட்ட
அத்தினிக் குடும்பங்களுக்கும்
குடியிருப்பாய்த் தேறும்,
தலைமுறை தலைமுறையா
மக்கள்  மானத்தோடு வாழ்வார் !

பரிணாமக் கோட்பாடு,
திராவிடம்,
கார்ல் மார்க்ஸ் பற்றியெல்லாம்
ஏகத்துக்கும் இரையும்
முட்டாள் ஏஜென்ட்டான
ஒரேஒரு கவ்னர்பீடி
கக்குகிற விசம்  அப்புறப் படுத்தினால்
யே யப்பா, சென்னை என்ன —
மொத்த தமிழ்நாட்டுக்கும் தேவைப்படும்
ஆக்சிஜனே விளையும் !

தன் கம்பேனி விளம்பரம் தவிர
வேறவேல செய்யாத கவ்னரை
உள்ளூர் ஆட்சியின் நியாயஸ்தர்
கணக்கு கேட்டதால்  —  கவ்னரின்
கோடி ஸூர்ய முகம் சிவக்கிறது;
உச்சரிக்கும் சொல் ஒவ்வொன்றின்மீதும்
பார்ப்பன நூலிழை கொந்தளித்து நகர்கிறது;
” என் கணக்கை பிரம்மா தான் கேட்பார்,
நீ யார் கேட்க! — எங்கள்
குருமூர்த்தி வேண்டுமானால் கேட்கட்டும்,
நீ யார் கேட்க! ”  என்று சீறுகிறது!
கவ்னர் பார்த்துவிட்டு வந்த
வடகிழக்குஊரில் ஆடிய ஆட்டத்தில்
வீசிய வாளிலிருந்து
ரத்தக் கசிவு நிற்காததால்
வாய் திறந்தாலே கவிச்சி மணக்கிறது!

கையைச் சுடுகிறது,
உதறி எறிவோம் — கவ்னர் பீடியை !
போவதற்குமுன்,
அவர் கம்பேனிக் கணக்கையெல்லாம்
அரசுச் செலவில் காட்டுவதாய்ப்
புகார் இருக்கிறது, பதில் சொல்லட்டும் !
கவ்னர் வூட்டில்
ஆட்டம் பாட்டம்
வேறு ஆக்சனுக்காக ஏற்பாடுசெய்தவகையில்
மிச்சமீதி ரத்தக்கறை இருந்தால்
துடைத்து வைக்கட்டும் !

மக்களே, எளிய மக்களே,
பழைய பாரதக் கணக்குக்கும் சேர்த்து
நாம கணக்குத் தீர்க்கோணும்
கவ்னர் பீடியின்
தற்காலப்
புகைச்சலை அடக்கோணும் !

  • பீட்டர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here