சோவியத் இளம் வீரர்கள்| நூல் அறிமுகம்

சோவியத் இளம் வீரர்கள்

1917, ருஷ்ய சோசலிசப் புரட்சியை வழிநடத்தியது பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் என்பதும் அதன்பின் பல்வேறு ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களுக்கிடையே புரட்சியை தொடர்ந்து வழிநடத்தி மாபெரும் சோசலிச கட்டமைப்பை உருவாக்கியவர் தோழர் ஸ்டாலின் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

தலைவர்களாக போற்றப்படும் தோழர்களின் பங்களிப்பைப் போலவே, பெயர் தெரியாத எண்ணற்ற தோழர்களின் தன்னலமற்ற உழைப்பும், அளப்பரிய பங்களிப்பும் இன்றி புரட்சியும், சோசலிச கட்டுமானமும் சாத்தியமாகியிருக்காது. அத்தகைய தோழர்களின் வாழ்க்கையை படிக்கும் போது ஏகாதிபத்திய முதலாளித்துவம் இன்று உருவாக்கி இருக்கும் வாழ்க்கை பற்றிய கற்பிதங்கள் தவிடுபொடியாகும்.

”நீ தனி ஆள், உனக்கு உள்ளது ஒரு வாழ்க்கைதான். ஆகவே நீ அதிக இன்பம் பெற வழி தேடு. முடிந்தவரை உனக்கு அதிக வசதியைக் தேடிக் கொள்” என்று இன்பம் துய்ப்பதே வாழ்க்கையின் லட்சியம் என்ற பிற்போக்கு கருத்தை கலை, இலக்கியம், ஊடகம், கல்வி, மதம் என எல்லா வழிகளிலும் முன்னிறுத்தப்படும் காலத்தில் சோவியத் இளம்வீரர்களில் சிலரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது எங்கள் கடமை எனக் கருதுகிறோம்.

அந்த வகையில் ‘புரட்சியில் இளைஞர்கள்’ என்ற தொகுப்பு நூலில் இருந்து நான்கு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து “சோவியத் இளம்வீரர்கள்” என்ற சிறு வெளியீட்டைக் கொண்டு வந்துள்ளோம்.

வாசகர்கள் இந்த வெளியீட்டை வாங்கிப் படித்து அந்த இளம்வீரர்களின் புரட்சிகர உணர்வையும், தன்னலமற்ற உழைப்பையும் வரித்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர இயக்கங்களில் இணைந்து நமது நாட்டிலும் புரட்சியை நடத்த பங்களிக்க வேண்டும் என்பதே கீழைக்காற்று வெளியீட்டகத்தின் அவா!

புரட்சிகர வாழ்த்துகள்!

 

இந்நூல் நவம்பர் 7-ல் வெளியிடப்படுகிறது. முன்பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

விலை ரூ.130

கீழைக்காற்று வெளியீட்டகம்
33/17 திருவள்ளுவர் தெரு,
நேருநகர், வேளச்சேரி,
சென்னை - 42

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here