தில்லை சமரில் தமிழ் வென்றது எப்படி? | நினைவுத் தொகுப்பு

1

தில்லை சமரில் தமிழ் வென்றது எப்படி?


நினைவுத் தொகுப்பு

சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் உரிமை சாதாரணமாக வந்து விடவில்லை. 2000 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான தொண்டர்கள், புரட்சிகர அமைப்புகளில் செயல்படுகின்ற ஆயிரக்கணக்கான தோழர்கள், தொடர்ச்சியான பிரச்சாரத்திற்கு ஊக்கமளித்த இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடியதன் விளைவாக தில்லை சமரில் வென்றது தமிழ்.

“ஒரு அமைப்பின் சிறந்த கொள்கைகள் என்பது துவக்கப்பள்ளி மட்டுமே, அதன் கொள்கைகளை ஏற்று செயல்படுகின்ற ஊழியர்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றனர்” என்கிறார் தோழர் ஸ்டாலின்.
இதனை நடைமுறையில் சாதித்துக் காட்டியது எமது புரட்சிகர அமைப்பு.

அந்தப் போராட்டத்தின் நினைவலைகளை மீண்டும் புதிய தலைமுறை வாசகர்களுக்கும், தோழர்களுக்கும் அறிமுகப்படுத்துவதன் மூலம் போராட்டக் களத்திற்கு அறைகூவி அழைக்கிறோம்.
தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

1 COMMENT

  1. “தில்லை சமரில் வென்றது தமிழ்” என்ற வெற்றிவிழா பொதுக்கூட்ட வீடியோ DVD யை சுருக்கி வெளியிட்டிருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here