சென்னையை விட மூத்த வரலாற்றைக் கொண்டது பழவேற்காடு. சென்னை நகரின் தண்ணீர் தேவையை பழவேற்காடு ஏரியும், பக்கிங்காம் கால்வாயும்தான் தன் வயிற்றில் சுமந்திருக்கிறது. பழவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி. இந்த ஏரியையும் கடலையும் நம்பி காட்டுப்பள்ளி முதல் ஆரம்பாக்கம் வரை 60 கிராமங்களில் மக்கள் வசிக்கிறார்கள். இப்போது பழவேற்காட்டைச் சுற்றி வசிக்கும் அத்தனை கிராமங்களையும் அதானியின் தனியார் துறைமுகத்திற்காக காலி செய்யச் சொல்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பே எல் அண் டி நிறுவனத்திற்காக காலி செய்யப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்ட காட்டுப்பள்ளி துறைமுகம் இப்போது அதானியின் கைகளுக்கு மாறி விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்த விரிவாக்கம் நடந்து கொண்டே இருக்கும் விரிவாக்க விரிவாக்க காட்டுப்பள்ளியைப் போல அத்தனை கிராமங்களும் அப்புறப்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. மொத்த பழவேற்காட்டையும் அதானிக்கு தாரை வார்த்திருக்கிறது தமிழக அரசு. காட்டுப்பள்ளி களவாடப்பட்டது எப்படி? அந்த கொடிய நிகழ்வு எப்படி நடந்தது?

நன்றி:
அருள் எழிலன்.
ஊடகவியலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here