செங்கொடி எழுகின்றது… உழவனின் செங்கொடி எழுகின்றது… || விவிமு பாடல்

ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் இருந்து செயல்படும் வேளாண் வர்த்தக கார்ப்பரேட்டுகள் விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறித்து கொண்டு விவசாயத்தை கொள்ளையடிக்கும் தொழிலாக மாற்றி வருகின்றனர்.

0

“உழுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கு அதிகாரம்” என்ற முழக்கத்துடன் எண்பதுகளில் எழுந்தது விவசாயிகள் விடுதலை முன்னணி.
இன்னமும் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு விவசாயத்திலும், அதன் துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பிலும் தனது வருவாயை ஈட்டிக் கொள்கின்றனர்.

விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்பது மட்டுமல்ல, விவசாயம் இன்றைய பொருளாதார சூழலில் வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான வருவாய் கொடுக்கின்ற தொழிலாக இல்லை என்பதே நாடு தழுவிய நிலைமை.
“சுழன்றும் ஏர் பின்னது உலகம்” என்றார் வள்ளுவர்.

இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதார சூழலில் ஒரு நாட்டுக்கு தேவையான உணவு பொருளை எந்த நாட்டில் விளைவித்தால் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்று திட்டமிட்டு வேளாண்மையை ஒரு வர்த்தகமாக மாற்றிவிட்டனர் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள்.

ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் இருந்து செயல்படும் வேளாண் வர்த்தக கார்ப்பரேட்டுகள் விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறித்து கொண்டு விவசாயத்தை கொள்ளையடிக்கும் தொழிலாக மாற்றி வருகின்றனர்.

இவ்வாறு நிலத்தை பறிகொடுத்த விவசாயிகள், அதில் கூலி வேலை செய்த கூலி விவசாயிகள் நகரத்தை நோக்கி புலம்பெயர்ந்து செல்கின்றனர்.
இத்தகைய கொடூரமான சூழலை எதிர்கொண்டு முறியடிப்பதற்கு சித்தாந்த புரிதல் கொண்ட விவசாயிகள் அமைப்பு அதுவும் விவசாயிகளின் விடுதலையை, “நிலம், அதிகாரம், விடுதலை என்ற முழக்கத்தின் கீழ் விவசாயிகளை அணி திரட்டு கின்ற அமைப்பு தேவையாகிறது.

அந்த லட்சியத்தை ஏந்தி செயல்படுகிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here