வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடக்கும் இளம் தலைமுறையினருக்கு சரியான அறிவு தேடல்களை தொகுத்துத் தருகிறது கீழைக்காற்று.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் காட்சி வடிவங்களாகவும், ஒலி வடிவத்திலும் மாறியுள்ளதால் புத்தகங்களை படிப்பது குறைந்து கொண்டு போகிறது.
இந்த சமூக சூழலில் புத்தகக் கண்காட்சிகளின் மூலம் அறிவை விரிவு செய்வதற்கு இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த முயற்சிக்கு நாமும் நமது ஆதரவை தெரிவிப்போம். வழக்கமான புத்தக சந்தை பொழுது போக்குவதற்கும் அர்த்தமற்ற கதைகள், நாவல்கள், தனிமனித விருப்பங்களையும் ஆசைகளையும், உணர்ச்சிகளையும், வெளிக்காட்டுகின்ற இலக்கியங்கள் போன்றவற்றை விற்பனை செய்கிறது. இத்தகைய பண்பாட்டு சூழலில் சமூக மாற்றத்திற்கு போராடிய கம்யூனிச புரட்சியாளர்களான காரல்மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் போன்ற தோழர்களின் எழுத்துக்கள், உரைகள் அனைத்தும் புத்தக வடிவில் கிடைக்கிறது.
இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறு, எழுத்து, பேச்சு, அனைத்தும் புத்தக வடிவில் கிடைக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார சுரண்டல் துவங்கி இந்திய மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் சுரண்டல் கொள்ளைகள் வரை அனைத்தையும் அம்பலப்படுத்துகின்ற பல முற்போக்கு எழுத்தாளர்களின் எழுத்துகள் புத்தக வடிவில் கிடைக்கிறது.
குழந்தைகளை எப்படி வளர்ப்பது பெரியவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை தேர்வு செய்வது போன்ற அனைத்தையும் விவாதித்து புரிந்து கொள்வதற்கு பொருத்தமான கம்யூனிச, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய நூல்கள் அனைத்தும் எளிமையாகச் சொன்னால் முற்போக்கு நூல்களுக்கான ஒரு முகவரியாக கீழைக்காற்று செயல்படுகிறது.
அனைவரும் வாரீர்!
அறிவை விரிவு செய்வோம்!
விசாலப் பார்வையால் விழிப்புணர்வை பெறுவோம்!