Air India நிறுவனத்தை கடந்த ஆண்டு கையகப்படுத்திய TATA ( TATA TALACE) நிறுவனம் தனது முதல் ஊதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. AIR INDIA EXPRESS, AIR ASIA INDIA, VISTARA மற்றும் AIR INDIA ஆகிய நான்கு விமான சேவை நிறுனங்களை சேர்ந்த 3000 விமானிகளிடம் ஏப்ரல் 25ம் தேதிக்குள் கையொப்பம் இடுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் ஏறக்குறைய 1700 விமானிகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள Air India (Tata Talace) நிறுவனத்தின் விமானிகள் சங்கங்களான Indian commercial pilots association (ICPA) & Indian pilots guild (IPG) ஆகிய இரு சங்கங்களும், நிறுவனம் அறிவித்துள்ள புதிய ஊதிய உயர்வையும், விதிமுறைகளையும் ஏற்கப்போவதில்லை என கூட்டாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து AIR INDIA வின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ”விமானிகள் மற்றும் சிப்பந்திகளுக்கான இந்த புதிய ஊதிய ஒப்பந்தம், ஊதியம் மற்றும் பணி நிலைமைகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்த முயல்வதோடு, அவர்களின் வேலைத்திறனை அங்கீகரித்து அவர்களின் முயற்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் அறிவித்துள்ள ஒப்பந்தத்தை பெரும்பான்மையான விமானிகளும் சிப்பந்திகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர், எனவும் நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என எதுவும் இல்லை எனவும், மற்ற ஊழியர்களிடமும் ஒப்புதல் பெறும் நிர்வாக நடைமுறைகள் தொடரும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் தலைமை மனித வள அலுவலர் சுரேஷ் தத் திரிபாதிக்கு இரு சங்கங்களும் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் ”இந்த குரூர ஒப்பந்தத்தில் கையொப்பமிடுமாறு தங்கள் உறுப்பினர்களை நிர்பந்தித்தால் தொழிலுறவு பாதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் “TATA TALACE நிறுவனம் பணி நிலைமைகளில் எந்த மாறுதல் கொண்டு வந்தாலும் அவை தொழிற்சாலை சட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளன. தற்போது நிர்வாகம் ஒருதலைபட்சமாக அறிவித்துள்ள ஒப்பந்தம் எங்கள் உறுப்பினர்களின் பணி நிலைமைகளை மாற்றி புதிய விதிமுறைகளை திணிக்கின்ற நோக்கம் கொண்ட சட்ட விரோத ஒப்பந்தமாகும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புதிய ஊதிய ஒப்பந்தத்தில் பிரதான சிக்கலாக 40 மணி நேர விமானப் பயணத்திற்கு மட்டுமே நிலையான ஊதியம் (Fixed salary) என்பதாகும். இது கொரோனா காலத்திற்கு முன்பிருந்த 70 மணி நேர விமானப் பயணத்திற்கு நிலையான ஊதியம் என்பதை வெகுவாக குறைக்கிறது என்பதாகும்.” இது விமானிகள் விடுப்பு எடுக்கும் போதும், தொடர் பயிற்சி அல்லது உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றிற்காக நேரம் செலவிடப்படும் போது, பணி செய்ய இயலாத சூழல் ஏற்படும் போதெல்லாம் விமானிகளுக்கு ஊதிய இழப்பு ஏற்படும் என்றும் குறிப்பிடுகின்றனர்.


இதையும் படியுங்கள்: ஏர் இந்தியாவும் ! ஏழை இந்தியாவும்!

மேலும், சீனியர் கமாண்டர் தகுதியில் இருக்கும் மூத்த தொழிலாளர்களுக்கு பெயரளவிற்கு நிர்வாகப் பதவிகள் கொடுத்து அவர்களின் தொழிலாளர் தகுதியை இழக்க செய்யும் உள்நோக்கத்துடன் நிர்வாகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக குறிப்பிடுகின்றனர். தொழிற்தகராறு சட்டத்தின்படி தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் இருப்பவர்களுக்கு சங்கம் சேரும் உரிமையும், வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வளவு சிக்கல் இருக்கும் போதும், நிர்வாகம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு எந்தவித வாய்ப்பும் தராமல் காணொளி கூட்டத்தின் (virtual meeting) மூலம் இத்தகைய அறிவிப்பு செய்துள்ளது ஒருதலைபட்சமான அராஜகப் போக்கு என்று சாடியுள்ளனர்.

ஏற்கனவே ஷிஃப்ட் பட்டியல் குறைபாடுகளால் வேலையையும் வாழ்க்கையையும் சமன் படுத்த முடியாமல் விமானிகள் தவித்து வரும் நிலையில் நிர்வாகம் அதனை சரி செய்ய முயல்வதற்கு மாற்றாக 24 X 7 எந்நேரமும் விமானிகள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறி அதனையே வழக்கமாக்க முயல்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

“குடுக்கறத வாங்கிட்டு வேலை செய்றதா இருந்தா செய். இல்லனா போயிட்டே இரு.”

இந்த பொன்மொழியை தான் டாடா முதலாளி தனது ஊழியர்களுக்கு virtual conference மூலமாக தெளிவாக சொல்லி இருக்கிறார். தொழிலாளர் நல சட்டங்கள் எதையும் அமுல்படுத்த எந்த முதலாளியும் தயாரில்லை. சொல்லப்போனால் அதை முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தி நடைமுறைப்படுத்தும் மஹா உத்யோகத்தில் தான், அவதார புருஷர் மோடி முழு நேரமாக ஈடுபட்டுள்ளார். இந்த Air India நிறுவனம் டாடா வசம் தாரைவார்க்கப்பட்டதன் விளைவாக, இந்திய அரசுக்கு சொந்தமாக பயணிகள். விமானம் இல்லை என்ற அவலநிலை உருவாகியது.

பொதுத்துறைகள் தனியாருக்கு அற்ப விலைக்கு விற்கப்படும். அதில் கிடைக்கும் லாபம் முழுவதும் முதலாளிகள் அனுபவிப்பார்கள். அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்படுவர். இதுதான் மோடி பீற்றித் திரியும் புதிய இந்தியா.

விமானிகள் சங்கம் விடாப்படியான, போர்குணமிக்க போராட்டத்தின் மூலம் டாடாவின் உழைப்பு சுரண்டலுக்கு முடிவு கட்ட முடியும். அவர்களின் போராட்டத்துக்கு துணை நிற்க வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்று கடமை.

மூலம்: Theprint.in

  • தாமோதரன்

https://theprint.in/india/air-india-pilots-object-to-tatas-new-draconian-terms-wage-structure-threaten-unrest-if-forced-to-sign/1529169/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here